Word |
English & Tamil Meaning |
|---|---|
| மங்குல்வாணி | maṅkul-vaṅi n. <>மங்குல்+. Voice from the heayens; அசரீரி. மங்குல்வாணி யுதித்த மடமயிலே (அருணகிரிபு. அருந்தவ. 162). |
| மங்குலம் | maṅkulam n. prob. மங்கு-. (J.) 1. Cloudiness, murkiness; obscuration; மழுக்கம். 2. Perturbation, confusion of mind; 3. Gloominess, gravity of countenance; 4. Dullness of the eye; dimness of sight; 5. Uncertainty, doubtfulness; 6. Indistinctness, obscureness; paleness, as of a colour; |
| மங்குலி | maṅkuli n. <>மங்குல். Indra, as the Lord of the clouds; [மேகத்தின் அதிபதி] இந்திரன். அமிர்தங் கடைந்தவ னஞ்ச மங்குலி திருப்பு. 559). |
| மங்குளம் | maṅkuḷam n. See மங்குலம். (J.) . |
| மங்குஸ்தான் | maṅkustāṉ n. <>Malay. maṇgustan. Maṅgosteen, m.tr., Garcinia mangastana; மரவகை. (A.) |
| மங்கை | maṅkai n. prob. maṅgala. 1. Woman; பெண். வாலிழை மடமங்கையர் (புறநா. 11). 2. A girl between 12 and 13 years; 3. Aloe; 4. See மங்கலம், 13 சீவரமங்கை, வரகுணமங்கை. 5. Mercury; |
| மங்கைதீர்க்கம் | maṅkai-tīrkkam n. <>மங்கை+. An agreement between the horoscopes of the bride and the bridegroom; ஸ்திரீதீர்க்கம். (சங். அக.) |
| மங்கைபங்கன் | maṅkai-paṅkaṉ n. <>id.+. See மங்கைபாகன். மங்கைபங்கனை மாசிலாமணியை (தேவா. 549, 5). . |
| மங்கைபங்காளன் | maṅkai-paṅkāḷaṉ. n. <>id.+. See மங்கைபாகன். (W.) . |
| மங்கைபாகன் | maṅkai-pākaṉ n. <>id.+. A form of šiva, half male and half female; அர்த்தநாரீசுரன். மங்கைபாகனை நோக்கி (கம்பரா. அகலிகை. 50). |
| மங்கையர்க்கரசியார் | maṅkaiyarkkaraciyār n. <>id.+. The queen of the Pāṇdya king Niṉṟacīr-Netumāṟa Nāyaṉār, a canonized šaiva saint, one of 63; நாயன்மார் அறுபத்துமூவருள் நின்ற சீர்நெடுமாறநாயனாருடைய தேவியாராகிய சிவனடியார். (பெரியபு.) |
| மங்கையர்கோன் | maṅkaiyar-kōṉ n. <>id.+. A Vaiṣṇava saint . See திருமங்கையாழ்வார். மங்கையாகோண் ... அவதரித்த கார்த்திகைநாள் (உபதேசரத். 9). |
| மச்சக்காவடி | macca-k-kāvaṭi n. <>மச்சம்1+. A kāvaṭi with vessels containing fish; மீன் கலசங்கள் கொண்ட காவடி. |
| மச்சக்கொடி | macca-k-koṭi n. <>மச்சம்1+. Banner of Kāma and the Pāṇdyas bearing fishensign; காமனுக்கும் பாண்டியனுக்கும் உரியதான மீனக்கொடி. (W.) |
| மச்சகந்தி | maccakanti n. <>matsyagandhī. Vyāsa's mother. See பரிமளகந்தி. (பாரத.) . |
| மச்சதேசம் | macca-tēcam n. <>மச்சம்2+. A country in Central India, one of 56 tēcam, q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. |
| மச்சப்பொன் | macca-p-poṉ n. <>மச்சம் 2+. [K. maccabonnu.] Piece of gold kept for a sample; மாற்றறிய வைத்திருக்கும் மாதிரிப்பொன். |
| மச்சபுராணம் | macca-purāṇam n. <>matsya+. 1. A chief Purāṇa in honour of šiva, narrated by Viṣṇu in His fish-incarnation, one of patiṉeṇ-purāṇam, q.v.;` பதினெண்புராணத்துள் மச்சாவதாரமெடுத்த திருமாலால் சிவபிரானுடைய பெருமை விளங்க உபதேசிக்கப்பெற்ற புராணம். (பிங்.) 2. A metrical rendering of matsya-purāṇa in Tamil by Vaṭamalaiyappa Piḷḷaiyaṉ of Tinnevelly, 1706 A.D.; |
| மச்சம் 1 | maccam n. <>matsya. 1. Fish; மீன். 2. See மச்சாவதாரம் 3. Pisces of the Zodiac; 4. Month of Paṅkuṉi; 5. See மச்சபுராணம், 1. 6. See மச்சதேசம். மச்சநாடன் (பாரத. நிரை. 65). |
| மச்சம் 2 | maccam n. [T. matstsu K. macca.] 1. See மச்சப்பொன். வன்றொண்டர் மச்சம் வெட்டிக் கைக்கொண்டு (பெரியபு. ஏயர்கோன். 109). . 2. Trace, clue; 3. Mole on the skin; |
| மச்சம்பி | maccampi n. cf. மச்சினன். Loc. 1. Elder sister's husband; தமக்கை புருஷன். 2. Maternal uncle's son; 3. Paternal aunt's son; 4. Husband's elder brother; |
| மச்சமுனி | macca-muṉi n. A reputed mystic, author of treatises on medicine, one of patiṉeṇ-cittar, q.v.; பதினெண்சித்தருள் ஒருவரும் மருத்துவநூ லியற்றியவருமான ஒரு சித்தர். |
