Word |
English & Tamil Meaning |
|---|---|
| மச்சுப்பாவு - தல் | maccu-p-pāvu- , v. intr. <>id.+. 1.To cover the floor of an upper storey with planks, bricks, etc.; மேற்றளத்தைப் பலகை முதலியவற்றில் மூடுதல். 2. To make a board ceiling; |
| மச்சுப்போ - தல் | maccu-p-pō- , v. intr. <> மக்கு-+. 1. To decay, rot; மக்குதல் 2. To be reduced to a mash by over-boiling, as rice; |
| மச்சுவா | maccuvā , n. Barge; படகு. Naut. |
| மச்சுவீடு | maccu-vīṭu , n. <> மச்சு1+. 1. House with a terraced roof; மேற்றளமுள்ள கட்டிடம். 2. House with a wainscot ceiling; |
| மச்சுனமை | maccuṉamai , n. <>மைத்துனமை. Relationship of brother-in-law; மைத்துன முறைமை. உழுகிறவன் இளப்பமானால் எருது மச்சுனமை கொண்டாடாதா? (W.) |
| மச்சுனன் | maccuṉaṉ n. <>மைத்துனன். Brother-in-law; மைத்துனன். |
| மச்சேந்திரநாதர் | maccēntira-nātar , n. <>matsyēndra-nātha. A mystic, one of navanāta-cittar, q. v.; நவநாதசித்தருளொருவர். (சது.) |
| மச்சை 1 | maccai , n. perh. matsya. Target; அம்பெய்தற்குரிய குறி. (W.) |
| மச்சை 2 | maccai n. See மச்சம், 3. (W.) . |
| மச்சை 3 | maccai n. <>majjā. 1. Marrow of the bones; சத்ததாதுவிலொன்று. (W.) 2. Internal fever; 3. Catalepsy. See சன்னியாசிரோகம். (பைஷஜ. 235.) 4. Grey amber. See மீனம்பர். (யாழ். அக.) |
| மசக்கம் | macakkam , n. <> மசங்கு-. 1. Dullness, indolence; மந்தம். அவன் சுத்த மசக்கம் பிடித்தவன். Loc. 2. Swoon, unconsciousness, dizziness; 3. See மசக்கை, 1. Loc. |
| மசக்கல் | macakkal , n. See மசங்கல், 1. Loc. . |
| மசக்கி | macakki , n. <> மசக்கு-. Showily attractive woman; அழகு முதலியவற்றல் மயக்குபவள். Colloq. |
| மசக்கு - தல் | macakku- , 5. v. tr. Caus. of மசங்கு-. 1.To charm, bewitch; மயங்கச் செய்தல். ல¦லையி லேயுற முறை மசக்கவம் (திருப்பு. 838). 2.To confuse, perplex; 3.To crumple, as a cloth to get out the stiffening; |
| மசக்குப்பரலிடு - தல் | macakku-p-paral-vitu- , v. intr. <> மசக்கு-+பரல்+. To be confused, as regarding identity; ஐயமுறப்படுதல். தன்னோடு மசக்குப் பரலிடலாம்படியான தேவஜாதியையும் (ஈடு, 2, 2, 5). |
| மசக்கை | macakkai n. <>id. 1. Morbid longings of a pregnant woman; கருப்பிணிக்கு மயக்கம் முதலியவற்றையுண்டாக்கும் ஒருவகை நோய். 2. Amenorrhoea; |
| மசக்கைப்பண்டம் | macakkai-p-paṇṭam n. <> மசக்கை+. Special articles of food, desired by pregnant women; கருப்பிணிகள் மசக்கைக் காலத்தில் விரும்பும் தின்பண்டம். |
| மசகம் 1 | macakam n. <>mašaka. 1. Gnat, mosquito; கொசுகு. (பிங்.) மசகந்தர மென்னலாய் (அஷ்டப். திருவேங்கடத். 59). Squirt; |
| மசகம் 2 | macakam n. cf. šmašru. Hair; மயிர். (யாழ். அக.) |
| மசகம் 3 | macakam n. <> மசக்கம். Confusion; மயக்கம். (யாழ். அக.) |
| மசகரி | macakari n. <>maša-harī. 1. See மசகாரி. (சிலப், 6, 169, அரும். பாடபேதம்.) . Curtain; |
| மசகவரி | macakavari n. <>mašaka-harī. See மசகவரி. (சீவக. 838, உரை, பாடபேதம்.) . |
| மசகாரி | macakāri n. <>maša-harī. Decorated bed curtain for protection against mosquitoes; சித்திரப்பணி எழுதியதும் கொசுகுகளை விலக்குவதுமான அமளித் திரை. (சிலப். 6, 169, அரும்.) (சீவக. 838, உரை.) |
| மசகி | macaki n. <>mašakin. Fig. See அத்தி. (மூ. அ.) . |
| மசகிற்புள் | macakiṟ-puḷ n. A species of sea-gull; கடற்பறவைவகை. (W.) |
| மசகு 1 - தல் | macaku- 5 v. intr. <>மயங்கு-. (W.) 1. To linger, loiter; to hang about designedly; சுணங்கி நிற்றல். 2. To hesitate; to be in suspense; to be undecided or undetermined; |
| மசகு 2 | macaku n. cf. maṣi [T. masaka.] Mixture of oil and burnt straw, used as grease for country carts; வைக்கோற் கரியோடு எண்ணெய்த்துளி கலந்து கட்டைவண்டியின் அச்சிலிடும் மை. |
| மசகு 3 | macaku n. prob. மசகு-. Deep sea, far from shore, where there is no mark for guidance; நடுக்கடலில் திசை தெரியாது ஆழ்ந்தகன்ற இடம். (J.) |
| மசங்கல் | macaṅkal n. <>மசங்கு-. 1. Twilight of evening; அந்திப்பொழுது. (W.) 2. Confusion, perplexity; |
