Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்குகை | maṇ-kukai n. <>id.+. (W.) 1. Cave in the earth; நிலவறை. 2. Hornet's nest; 3. Crucible. |
| மண்குத்துநோவு | maṇ-kuttu-nōvu n. perh. id.+. After-pains; பிரசவத்தின்பின் உண்டாம் நோவு. (சீவரட். 208.) |
| மண்கும்பம் | maṇ-kumpam n. <>id.+. See மண்மேடு. (யாழ். அக.) . |
| மண்கும்பி | maṇ-kumpi n. <>id.+. See மண்மேடு. (யாழ். அக.) . |
| மண்குழை - த்தல் | maṇ-kuḻai- v. intr. <>id.+. To mix water with clay or mud to form a semi-liquid mass, as in building a wall; சுவர் முதலியன கட்டுதற்கு உதவுமாறு மண்ணைக் குழைத்துச் சாந்தாக்குதல். |
| மண்குளி - த்தல் | maṇ-kuḷi- v. intr. <>id.+. To roll in the dust; to take a sand-bath, as a beast or bird; புழுதியாடுதல். (W.) |
| மண்கூட்டாளன் | maṇ-kūṭṭāḷaṉ n. <>id.+கூட்டு-+. Potter; குயவன். மண்கூட்டாளன் மனைவயின் மறையவும் (பெருங். உஞ்சைக். 46, 332). |
| மண்கொட்டு | maṇ-koṭṭu n. <>id.+ கொட்டு-. See மண்வெட்டி. அத்தனை மண்கொட்டால் வெட்டா (கடம்ப. பு. இல¦லா. 34). . |
| மண்கொத்தளம் | maṇ-kottaḷam n. <>id.+. Part of a rampart, made of mud; மண்ணாற் செய்த மதிலுறுப்பு. (யாழ். அக.) |
| மண்கோபுரக்கல் | maṇ-kōpura-k-kal n. <>id.+. Brick; செங்கல். (யாழ். அக.) |
| மண்சாந்து | maṇ-cāntu n. <>id.+. Mud plaster; குழைத்த சேறு. Loc. |
| மண்சிலை | maṇ-cīlai n. <>id.+. Red ochre; கற்காவி. (யாழ். அக.) |
| மண்சிவப்பு | maṇ-civappu n. <>id.+ Dark red; கருஞ் சிவப்பு. (யாழ். அக.) |
| மண்சீலை | maṇ-cīlai n. <>id.+. Piece of cloth coated with luting and tied either round the mouth of the pot for calcining medicines or round the medicines to be calcined; மருந்து புடமிடக் கலத்தின்மேற் சுற்றும் மண்ணூட்டிய துணி. Colloq. |
| மண்சுதை | maṇ-cutai n. <>id.+. Chunnam plaster; சுண்ணச்சாந்து. (சங். அக.) |
| மண்செய்கை | maṇ-ceykai n. <>id.+. See மண்வேலை. (யாழ். அக.) . |
| மண்சேய் | maṇ-cēy n. <>id.+. Mars, as son of the Earth; (பூமிதேவி மகன்) செவ்வாய். (நாமதீப. 98.) |
| மண்சோறு | maṇ-cōṟu n. <>id.+. See மணற்சோறு. (யாழ். அக.) . |
| மண்டக்கம் | maṇṭakkam n. Rope used for hauling up divers in pearl fishey; சலாபக்குளியில் குளிப்போனை மேலிழுக்கும் கயிறு. (W.) |
| மண்டக்கன் | maṇṭakkaṉ n. <>மண்டக்கம். See மண்டக்காள். மண்டக்க னேறாமல் (நெல்விடு. 222). (W.) . |
| மண்டக்காள் | maṇṭakkāḷ n. <>மண்டக்கு+ ஆள். One that hauls divers in pearl fishery; முத்துக்குளிப்பவனைக் கயிறுகொண்டு மேலிழுப்பவன். (W.) |
| மண்டக்கு | maṇṭakku n. See மண்டக்கம். (W.) . |
| மண்டகப்படி | maṇṭaka-p-paṭi n. <>மண்டகம்2+. Colloq. 1. See மண்டபச்செலவு. . 2. Ridicule; 3. Thrashing, beating; |
| மண்டகப்படிச்செலவு | maṇṭaka-p-paṭi-c-celavu n. <>மண்டகப்படி+. See மண்டபச்செல்வு. . |
| மண்டகம் 1 | maṇṭakam n. <>maṇdaka. Cake of flour, prepared without sugar; சர்க்கரையிடாத பூரி. (W.) |
| மண்டகம் 2 | maṇṭakam n. See மண்டபம்1. மண்டகம் எடுத்த நிலத்தொடும் (S. I. I. i, 150, 61). . |
| மண்டங்கள்ளி | maṇṭaṅ-kaḷḷi n. [K. maṇdagaḷḷi.] Cement plant, s. tr., Euphorbia trigona; கள்ளிவகை. (L.) |
| மண்டபச்செலவு | maṇṭapa-c-celavu n. <>மண்டபம்1+. Expense incurred for receiving a deity in a maṇṭapam during a festival; உற்சவமூர்த்தி மண்டபத்தில் எழுந்தருள்வதற்காகச் செய்யுஞ் செலவு. (W.) |
| மண்டபப்படி | maṇṭapa-p-paṭi n. <>id.+. 1. See மண்டபச்செலவு. (W.) . 2. Special celebrations to a deity at a festival; 3. Halting place for a deity in a festival procession; 4. See மடைப்பண்டம். |
| மண்டபம் 1 | maṇṭapam n. <>maṇdapa. 1. Pavilion in a temple or other place used during festivals for the reception of idols when they are carried in procession, generally a square or rectangular hall with a flat roof supported by pillars; திருநாளில் சுவாமி தங்குவதற்காகக் கட்டப்பட்ட கற்கட்டடம். 2. Temporary saloon or open shed decorated for festive occasions; 3. Public hall or rest house; |
