Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்டைக்கனம் | maṇṭai-k-kaṉam n. <>id.+. 1. Heaviness of head, due to cold; ஜலதோஷத்தால் தலை கனத்திருக்கை. (M. L.) 2. See மண்டைக்கருவம். Loc. |
| மண்டைக்காறல் | maṇṭai-k-kāṟal n. prob. id.+. A sea-fish, silvery, attaining ten inches and more in length, Equula edentula வெண்மை நிறமுடையதும் பத்தங்குலம் வளர்வதுமான கடல்மீன்வகை |
| மண்டைக்குடைச்சல் | maṇṭai-k-kuṭaic-cal n. <>id.+. See மண்டைக்குத்து . |
| மண்டைக்குத்தல் | maṇṭai-k-kuttal n. <>id.+. See மண்டைக்குத்து . |
| மண்டைக்குத்து | maṇṭai-k-kuttu n. <>id.+. 1. Headache; தலை நோவு (M. L.) 2. Neuralgia, Neuritus; |
| மண்டைக்கொழுப்பு | maṇṭai-k-koḷuppu n. <>id.+. See மண்டைக்கருவம். Colloq . |
| மண்டைக்கோழை | maṇṭai-k-kōḷai n. <>id.+. Accumulation of mucus in the head; சளி அதிகமாகும் தலைநோய்வகை. (J.) |
| மண்டைச்சூலை | maṇṭai-c-cūlai n. <>id.+. A kind of disease; நோய்வகை (யாழ்.அக.) |
| மண்டைப்பாணர் | maṇṭai-p-pāṇar n. <>id.+ A class of Pāṇars, as begging with bowls; உண்கலமேந்தி இரக்கும் பாணர்வகையார். பாணரும் இசைப்பாணரும் யாழ்ப்பாணரும் மண்டைப்பாணருமெனப் பலராம் (தொல்.பொ.91, உரை) |
| மண்டைப்பீனசம் | maṇṭai-p-pīṉacam n. <>id.+. A disease of the head; பீசை நோய் வகை (W.) |
| மண்டைப்புழு | maṇṭai-p-puḻu n. <>id.+. 1. See மண்டைப்பூச்சி . 2. See மண்டைக்கருவம். Colloq. |
| மண்டைப்புழுவருதல் | maṇṭai-p-puluvarutal n. <>id.+. Obstinacy; பிடிவாதங்க காட்டுகை (W.) |
| மண்டைப்பூச்சி | maṇṭai-p-pūcci n. <>id.+. A worm believed to live in the skull of a person and die with him; தலையோட்டினுள்ளிருப்பதும் ஒருவனோடு மாய்வதுமாய்க் கருதப்படும் புழு வகை. அவனுக்கு மண்டைப்பூச்சி மாண்டுபோகிற காலம். Loc. |
| மண்டைப்பெரியதனக்காரன் | maṇṭai-p-periya-taṇa-k-kāraṇ n. <>id.+. Headman in the Toṭṭiya caste; ª தாட்டியர் தலைவனது பட்டப்பெயர் (E. T. vii. 184.) |
| மண்டையடைப்பான் | maṇṭai--y-aṭaip-pāṇ n. <>id.+. Apoplexy; சன்னிநோய் வகை Loc. |
| மண்டையிடி | maṇṭai--y-iṭi n. <>id.+. (M.L.) 1. Headache; தலைவலி 2. Neuralgia; |
| மண்டையோடு | maṇṭai--y-ōṭui n. <>id.+. Skull, cranium; கபாலம். collog. |
| மண்டைவலி | maṇṭai--vali n. <>id.+. Headache; தலைவலி. (M.L.) |
| மண்டைவறளுதல் | maṇṭai--vaṟaḷutal n. <>id.+. Burning sensation in the head, due to omission of oil-bath; எண்ணெய்க்குளியில்லாமையால் உண்டாம் தலையெரிச்சல். (W.) |
| மண்டைவெல்லம் | maṇṭai-vellam n. <>id.+. Jaggery or coarse cane-sugar in hemispherical moulds; மொத்தையாகத் திரட்டிய வெல்லம். Loc. |
| மண்டோதரி | maṇṭōtari n. <>Mandōdarī.. Mandōdari; wife or Rāvaṇa, one of paca-kaṉṉyar, q.v; பஞ்சகன்னியருள் ஒருத்தியான இராவணன் மனைவி. மண்டோதரி காதலன் வான்புக (திவ். வெரியதி. 5, 4, 5). |
| மண்ணகம் | maṇ-ṇ-akam n. <>மண்+1. The earth; பூமியிடம். மண்ணகங் காவன் மன்னன் (பு.வெ, 9, 5, கொளு) |
| மண்ணகமடந்தை | maṇṇaka-maṭantai n. <>மண்ணகம்+. See மண்மடந்தை. கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை (சிலப். 5,3) . |
| மண்ணங்கட்டி | maṇṇaṅ-kaṭṭi n. <>மண் id.+. See மண்ணாங்கட்டி. (தொல். எழுத். 405, உரை) . |
| மண்ணசை | maṇṇacai n. <>id.+.நசை See மண்ணாசை. எஞ்சாமண்ணசை...அடல் குறித்தன்று (தொல். பொ. 62) . |
| மண்ணடி - த்தல் | maṇ-ṇ-aṭi- v. intr. <>id.+. 1. To bring and deposit earth as for the level; மண்கொணர்ந்து கொட்டுதல். மேடாவதற்கு மண்ணடிக்கவேண்டும் 2. To silt, as a river; 3. To ruin; |
| மண்ணம் | maṇṇam n. perh. id. Burnt lime; நீற்றிய சுண்ணாம்பு. (திவா) |
| மண்ணரிநார் | maṇ-ṇ-ari-nār n. <>id.+. Potter's string for cutting clay; குயவன் வனைந்த கலங்களை அரியுங் கயிறு (W.) |
| மண்ணரியாளன் | maṇ-ṇ-ariyāḷaṉ n. <>id.+. See மண்ணரிவாளன். (W.) . |
