Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்ணரிவாளன் | maṇ-ṇ-arivāḷaṉ n. <>id.+. Potter; குயவன் |
| மண்ணரைத்தல் | maṇ-ṇ-arai v.intr. <>id.+. To be lazy; to lounge; சோம்பியிருத்தல். (J.) |
| மண்ணவர் | maṇṇavar n. <>id. Human beings; மனிதர். மண்ணவர் விண்ணவர் வணங்க (தேவா, 52, 6) |
| மண்ணறை | maṇ-ṇ-arai n. <>id.+. அறை-, Plastering with mud; மண்பூச்சு. (W.) |
| மண்ணன் | maṇṇaṇ n. <>id. 1. Clodhopper, dullard, stupid person; மந்தன்.(W.) 2. A kind of chicken-pox; |
| மண்ணா | maṇṇa n. A kind of fish; மீன்வகை. (W.) |
| மண்ணாங்கட்டி | maṇ-ṇ-āṇ-kaṭṭi n. <>மண்1+. Clod, clodpole; மண்கட்டி. (தொல்.எழுத் 405, உரை) |
| மண்ணாசை | maṇ-ṇ-acai n. <>id.+. Landhunger; பூமியை அடைவதிலுள்ள பற்று. |
| மண்ணாடி | maṇṇāṭi n. perh. மன்றாடி A caste of village-headmen in the hills; மலைநாடுகளில் கிராமத்தலைமையுள்ள சாதி. (W.) |
| மண்ணாந்தை | maṇ-ṇ-ānṭai n. <>மண்1+. Dolt, idiot; அறிவிலி. Colloq. |
| மண்ணாய்ப்போவான் | maṇ-ṇ-āy-p-pō-vāṇ n. <>id.+. See மண்ணாவான். Loc. . |
| மண்ணாவான் | maṇ-ṇ-āvāṇ n. <>id.+. Fellow doomed to go to dust, a term of abuse; ஒரு வசைச்சொல் . Loc. |
| மண்ணான் | maṇṇāṇ n. prob. மண்ணு-. Washerman for Adi-dravidas. See புதரவண்ணான். (T. A. S. viii, 26.) . |
| மண்ணி | maṇṇi n. <>மண1¢. 1. See மண்ணன், 1. (W.) . 2. Murrel, a fresh-water firsh, greenish, attaining 13 in. in length, ophioce-phalus gachua; 3. A river in Cōḷa country; |
| மண்ணிடுதல் | maṇ-ṇ-iṭu v.intr. <>id.+. 1. To plaster with mud; மண்பூசுதல். 2. To clean oneself with mud, as after evacuation; 3. See மண்ணடி-, 2. Nāṇ |
| மண்ணியற்று | maṇ-ṇ-iyaṟṟu n. <>id.+. Mud pot; மண்பாத்திரம்.(சங்.அக.) |
| மண்ணில்வேந்தன் | maṇṇil-vēntāṉ n. <>id.+. See மண்ணிலவேந்தன். (சங் அக.) . |
| மண்ணிலம் | maṇṇilam n. <>id.+. நிலம் The earth; பூமி (W.) |
| மண்ணிலவேந்தன் | maṇṇila-vēntaṇ n. <>மண்ணிலம்+. Portia tree. See பூவரசு. (அமுதாகரம்.) . 2. Pipal. See அரசு. (மலை.) 3. A fragrant plant; 4. Betel vine; |
| மண்ணினாதம் | maṇṇiṉātam n. prob. id.+நாதம். Fuller's earth; உவர்மண். (யாழ். அக.) |
| மண்ணினாதனம் | maṇṇiṉātaṉam n. See மண்ணினாதம். (சங். அக.) . |
| மண்ணீட்டாளர் | maṇṇīṭṭāḷar n. <>மண்ணீடு+ஆள்-. 1. Those who make images, etc., in cement or plaster; கரையாற் பாவை முதலியன செய்வோர். மரங்கொசு றச்சரு மண்ணீட்டாளரும் (மணி. 28, 37). 2. Masons; 3. Potters; |
| மண்ணீடு | maṇṇīṭu n. <>மண்1+இடு-. 1. Pyal; திண்ணை. (பிங்.) 2. Niche in a wall for a light or an image; 3. Terraced house; 4. Plaster image; |
| மண்ணீர் | maṇṇīr n. <>மண்ணு-+ நீர். Water fit only for washing; கழுவ உதவும் நீர் . கடல் பெரிது மண்ணீரு மாகாது (வாக்குண்.12) |
| மண்ணீர்மை | maṇṇīrmai n. <>மண்1+நீர்-மை. Worldliness, earthliness; பிரபஞ்ச வியல்பு. மண்ணீர்மையாலே மயங்காது (தாயு.பராபர, 333.) |
| மண்ணீரல் | maṇ-ṇ-īral n. <>id.+. Spleen; இடது விலாவை யொட்டியுள்ள ஈரல். (இங்.வை.12) |
| மண்ணீரலடைப்பான் | maṇ-ṇ-īral-aṭaippāṉ n. <>மண்ணீரல்+. See மண்ணீரற் சன்னி. (M.L) . |
| மண்ணீரற்சன்னி | maṇ-ṇ-īraṟ-caṉṉi n. <>id.+.id.+. Splenic apoplexy; சன்னிநோய்வகை. (M. L) |
| மண்ணு - தல் | maṇṇu- 5 v. intr. 1. To bathe; to perform ablutions; நீராடுதல். மண்ணு மங்கலமும் (தொல். பொ. 68). 2. To immerse one self completely, as in water; 3. To wash, clean by washing; 4. To smear, anoint; 5. To do, make, perform; 6. cf. maṇd. To adorn, beautify, decorate; 7. cf maṇd. To polish, perfect, finish, as a gem; |
