Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்ணெண்ணெய் | maṇ-ṇ-eṇṇey n. <>id.+. 1. Kerosene oil, petroleum, naptha, as rock oil; எரிப்பதற்குதவுவதும் பூமியிலிருந்து எடுப்பதுமான எண்ணெய் வகை. Mod. 2. See மண்தைலம். Madr. |
| மண்ணேறிவிடு - தல் | maṇ-ṇ-ēṟi-viṭu- v. intr. <>id.+. (W.) 1. See மண்ணடி, 2. . 2. To become foul, as water; 3. To become dirty, as a sore; |
| மண்ணேறு - தல் | maṇ-ṇ-ēṟu- v. intr. <>id.+. To scale a wall; சுவரில் ஏறுதல். திருடன் மண்ணேறிக் குதித்து ஓடி விட்டான். Loc. |
| மண்ணை | maṇṇai n. 1. cf. மொண்ணை. Bluntness; கூர்மழுக்கம். மண்ணை வெண்கோட்டுச் சிறுகண் யானை (அகநா. 24). 2. Ignorant, stupid or dull person; fool; 3. Juvenility, youth; 4. Calf of the leg; 5. Devil, hobgoblin; 6. Black-oil, l. cl., Celastrus paniculata; |
| மண்ணைக்கட்டி | maṇṇai-k-kaṭṭi n. <>மென்னை+. Inflammation of the tonsils; தொண்டைப்புண்வகை. Loc. |
| மண்ணைகரையேறுதல் | maṇṇai-karai-y-ēṟutal n. <>மண்ணை+. Spasmodic and involuntary movement in the calf of the leg; காலின் கெண்டைச்சதை மேலேறுகை. கால் மண்ணை கரையேருகிறது. Nā. |
| மண்ணைநாங்கு | maṇṇai-nāṅku n. Narow-leaved Ceylon ironwood, l. tr., Mesua ferra coromandelina; சிறுநாகப்பூவகை. |
| மண்ணொட்டர் | maṇ-ṇ-oṭṭar n. <>மண்1+. [K. maṇṇoddaru.] Men doing earth-work; well-diggers; wall-builders; மண்வேலை செய்வோர். (W.) |
| மண்ணோர் | maṇṇoṟ n. <>id. Human beings, as inhabitants of the earth; மனிதர் மண்ணோர் மருந்து (திருவாச, 11, 19) |
| மண்தாங்கி | maṇ-tāṇki n. <>id.+. See மண்தாங்கிப்பலகை. . |
| மண்தாங்கிப்பலகை | maṇ-tāṅki-p-pala-kai n. <>மண்தாங்கி+. Lintel; கதவுநிலைக்கு மேலுள்ள சுவரைத்தாங்கும் பலகை. |
| மண்தைலம் | maṇ-tailam n. <>மண்1+. Bitumen; தைலவகை. (W.) |
| மண்தோண்டி | maṇ-tōṇṭi n. <>id.+தோண்டு-. Dredger; மண்சேறுகளைத் தோண்டியெடுக்கும் யந்திரம். Mod. |
| மண்பவளம் | maṇ-pavaḷam n. <>id.+. Imitation coral, made of clay; மண்ணாற்செய்த போலிப்பவளம். (W.) |
| மண்பாக்கு | maṇ-pākku n. <>id.+. An inferior kind of areca-nut; ஒருவகைத் தாழ்ந்த பாக்கு. (C.G.) |
| மண்பாச்சி | maṇ-pācci n. <>id.+. See மண்ணீரல். (சங். அக.) . |
| மண்பாடு | maṇ-pāṭū n. <>id.+. Nature of the land or soil; பூமியினியல்பு. திருவயோத்யையில் மண்பாடு தானே ராமபக்தியைப் பிறப்பிக்குமா போலே (ஈடு, 4, 9, 11). |
| மண்பாண்டம் | maṇ-pāṇṭam n. <>id.+. See மட்கலம். . |
| மண்பார் | maṇ-pār, n. <>id.+. Stratum of hard clay below they rocky stratum, in welldigging; கிணறு வெட்டுகையில் பாறையின் கிழ்க்காணப்படும் கெட்டிமண். (W.) |
| மண்பிடி | maṇ-piṭi n. <>id.+. Stickiness of clay; களிமண்ணிலுள்ள பசை (யாழ். அக.) |
| மண்புரை | maṇ-puarai n. <>id.+. Mud hut; மண்பொதிந்த வீடு. மண்புரை பெருகிய மரமுளி கானம் (ஐங்குறு.319). |
| மண்புளி - த்தல் | maṇ-puḷi- v. intr. <>id.+. 1. To ferment and become well-seasoned and sticky, as mortar mixed and pounded on the preceding day; மண் குழைந்து நல்ல சாந்தாதல். 2. To become soft by continued rain, as land; |
| மண்பூச்சு | maṇ-pūccu n. <>id.+. Plastering with mud; சுவர் முதலியவற்றை மண்சாந்தால் தீற்றுகை. |
| மண்பூசு - தல் | maṇ-pūcu- n. <>id.+. To plaster with mud; சுவர் முதலியவற்றிற்கு மண்சாந்து தீற்றுதல். |
| மண்பொதுத்தந்தை | maṇ-potu-tantai n. <>id.+. Brahmā, as the common father of the world; பிரமன். (பிங்.) |
| மண்பொறி | maṇ-poṟi n. <>id.+. Mark set on a mud-sealing; மண்ணீட்டு அதன்மேற் பொறித்த இலாஞ்சனை. கூந்தன் மண்பொறி (சிலப். 13, 84). |
| மண்போடு - தல் | maṇ-pōtu- v. intr. <>id.+. (W.) 1. To ruin a person, as throwing mud into his mouth; கேடு செய்தல். 2. To curse one, throwing up earth in the air; |
