Word |
English & Tamil Meaning |
|---|---|
| மண்மக்கள் | maṇ-makkaḷ n. <>id.+. 1. See மண்மகள் புதல்வர். (W.) . 2. Men of the fourth caste, as agriculturists; |
| மண்மகள் | maṇ-makaḷ n. <>id.+. The Goddess of Earth; பூமிதேவி. திருமகளும் மண்மகளு மாய்மகளுஞ் சேர்ந்தால் (திவ். இயற். 1, 42). |
| மண்மகள்புதல்வர் | maṇ-makaḷ-putalvar n. <>மண்மகள்+. Vēḷāḷas, as children of the Earth; வேளாளர். (பிங்.) |
| மண்மகன் | maṇ-makaṉ n. <>மண்1+. Potter; குயவன். நிமித்தகாரணனாகிய சிவன் மண்மகன் போல நின்று (சி. சி. 1, 18, ஞானப்.). |
| மண்மடந்தை | maṇ-maṭantai n.<>id.+. 1. See மண்மகள். திருமடந்தை மண்மடந்தை யிருபாலுந் திகழ (திவ். பெரியதி. 3, 10, 1). . 2. Woman, of the earth; |
| மண்மலி | maṇmali n. cf. மணமலி. Southern-wood. See மருக்கொழுந்து. (மலை.) . |
| மண்மழை | maṇ-maḻai n. <>மண்1+. See மண்மாரி. மாமுகிற் கணம் ... மண்மழையைத் தீமுகங்களா லிறைத்தன (செவ்வந்திப்பு. உறையூ. 56). . |
| மண்மாரி | maṇ-māri n. <>id.+. 1. Shower of dust, dust-storm; மண்ணாகப் பெய்யும் மழை. மண்மாரி பொய்கவிந்த வான் (தனிப்பா.i, 64, 127). 2. Adversity; |
| மண்மூசை | maṇ-mōcai n. <>id.+. Earthen crucible for calcining medicines or melting metals; மருந்துசெய்யவும் உலோகமுருக்கவும் உதவும் மண்ணாலான குகை. Loc. |
| மண்மேடிடு - தல் | maṇ-mēṭiṭu- v. intr. <>மண்மேடு+இடு-. To silt, as a river, field, etc.; ஆறு வயல் முதலியன மணலால் தூர்ந்து மேடாய்ப் போதல். |
| மண்மேடு | maṇ-mēṭu n. <>id.+. Earthen mound; மண்ணாலான குன்று. (W.) |
| மண்வருஷம் | maṇ-varuṣam n <>id.+ See மண்மாரி. உறையூரிற் கல்வருஷமும் மண்வருஷமும் பெய்வித்து (தக்கயாகப். 205, உரை). . |
| மண்வாரி | maṇ-vāri n. <>id.+வாரு-. Violent wind drifting the dust; பெருங்காற்று. (W.) |
| மண்வினைமாக்கள் | maṇ-viṉai-mākkaḷ n. <>id.+. Potters, as workers in clay; குயவர். மண்வினை மாக்க டம்வினை முடிமார் (ஞானா, 41, 11) |
| மண்வெட்டி | maṇ-veṭṭi n. <>id.+. Hoe, especially with short handle; spade; மண்தோண்டுங் கருவிவகை. Loc. |
| மண்வெட்டிக்காரர் | maṇ-veṭṭi-k-kārar n. <>மண்வெட்டி+. Paḷḷas in Karur taluk, as spade-workers; கருவூர்த் தாலூக்காவிலுள்ள பள்ளர் வகையார். Loc. |
| மண்வெட்டிப்பல் | maṇ-veṭṭi-p-pal n. <>id.+. Broad and large incisor tooth, as being like maṇ-veṭṭi; மண்வெட்டிபோல் அகன்று தட்டையாயுள்ள பல். Loc. |
| மண்வேலை | maṇ-vēlai n. <>மண்1+. Earthwork, as raising banks, etc.; மண்ணால் கரை முதலாயின இடுந்தொழில். (C. E. M.) |
| மண - த்தல் | maṇa- 12 v. intr. 1. To be united, mingled; கலத்தல். அறையும் பொறையு மணந்த தலைய (புறநா. 118). 2. To come together; 3. To happen; 4. To be fixed, attached; 5. To eimt fragrance; 6. To shine; 1. To wed; 2. To copulate with; 3. To live in company with; 4. To embrace; |
| மணக்கத்தை | maṇakkattai n. prob. மணல்+கற்றை. A kind of paddy; நெல்வகை. (W. G.) |
| மணக்காப்புச்சீமந்தம் | maṇa-k-kāppu-c-cīmantams n. <>மணம்+காப்பு+. The cīmantam celebration of a woman during the period of her first pregnancy, along with the bangle-wearing ceremony; மகளிரின் முதற்கருப்பத்தில் வளைகாப்புடன் சேர்த்து நடத்தும் சீமந்தச் சடங்கு. Loc. |
| மணக்கால் | maṇa-k-kāl n. <>id.+. First post set up in an auspicious hour for a marriage pavilion; கலியாணப்பந்தலிடுவதற்கு முதலில் நடும் முகூர்த்தக்கால். Loc. |
| மணக்கால்நம்பி | maṇakkāl-nampi n. A Vaiṣṇnava ācārya; வைணவ ஆசாரியருள் ஒருவர். (குருபரம்) |
| மணக்குடவர் | maṇakkuṭavar n. A commentator on the Kuṟa; திருக்குறளுரையாசிரியருள் ஒருவர். தருமர் மணக்குடவர் ... வள்ளுவர் நூற் கெல்லையுரை செய்தாரிவர் (பெருந்தொ. 1538). |
