Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணமகள் | maṇa-makaḷ n. <>id.+. Bride; கலியாணப்பெண். |
| மணமகன் | maṇ-makaṉ n. <>id.+. 1. Bridegroom; கலியாண மாப்பிள்ளை. மணமகன் போல நின்றான் (சீவக. 2185). 2. Husband; |
| மணமண்டபம் | maṇa-maṇṭapam n. <>id.+. Marriage pavilion; கலியாண மண்டபம். (யாழ். அக.) |
| மணமலி | maṇa-mali n. <>id.+. மலி-. Southern-wood. See மருக்கொழுந்து. (மலை.) . |
| மணமாலை | maṇa-mālai n. <>id.+. Garland for the bride and bridegroom at a wedding; விவாகத்தில் மணமக்கள் சூடும் பூமாலை மணமாலை அந்தரி சூட்ட (திரு.நாய்ச்.6, 3) |
| மணமுரசு | maṇa-muracu n. <>id.+. Drum used at festivals and marriages; விழா முரசு. (சிலப். 5, 141, உரை.) |
| மணமுழவு | maṇa-muḻavu n. <>id.+. Drum of the agricultural tract; மருதநிலப் பறை. (தொல். பொ.18, உரை.) |
| மணல் | maṇal n. <>மண்1. [K. M. maṇal.] 1. Sand; gravel; பொடியாயுள்ள பிதிர்மண். பெரு மணலுலகமும் (தொல். பொ. 5). 2. Flaw in emerald, one of eight marakata-k-kuṟṟam; q.v.; |
| மணல்தரம் | maṇal-taram n. <>மணல்+. See மணற்றரை. Loc. . |
| மணல்வாரி | maṇal-vāri n. <>id.+. 1. See மண்தோண்டி. Mod. . 2. A kind of paddy; 3. A kind of grass; 4. Measles; 5. See மணல்போக்கி. |
| மணல்வாரிச்சடங்கு | maṇal-vāri-c-caṭaṅku n. <>id.+. Ceremony of putting sand into a big pot and pouring in water, a custom at the wedding of Adi-dravidas; ஆதிதிராவிடர் விவாகத்தில் குடத்தில் மணலைக்கொட்டி நீர் வார்க்கும் சடங்கு வகை. |
| மணலக்கம்பம் | maṇalakkampam n. perh. மணல் + lakṣa + பம். The Milky Way; பால் வீதிமண்டலம். (யாழ். அக.) |
| மணலடித்தரிசு | maṇal-aṭi-t-taricu n. <>id.+ அடி-+. Land rendered waste by accumulation of sand; மணல் மேவிப் பாழ்பட்ட நிலம். Loc. |
| மணலி 1 | maṇali n. perh. id. Sandgreens, Gisekia pharnacioides; கீரைவகை (பதார்த்த. 593.) |
| மணலி 2 | maṇali n. <>மணம். 1. Southernwood; மருக்கொழுந்து. (மலை.) 2. A kind of paddy; 3. A snake; |
| மணலுறிஞ்சி | maṇal-uṟici n. <>id.+. Under sluice, to draw away sand; மணலைப் பறித்துப்போக்கும் பள்ளமடை. Loc. |
| மணலூர் | maṇal-ūr n. <>id.+. See மணலூர்புரம். (திருவாலவா. 53, 6.) . |
| மணலூர்புரம் | maṇalūr-puram n. <>மணலூர்+. An ancient Pāṇdya capital; பாண்டியரது பழைய தலைநகர். (பி. வி. 2, உரை.) |
| மணலேறு | maṇal-ēṟu n. prob. மணல்+. A flaw in pearls; முத்துக்குற்றவகை. (சிலப். 14, 193, உரை.) |
| மணலை | maṇalai n. perh. id. See மணலைமீன். (W.) . |
| மணலைமீன் | maṇalai-mīṉ n. <>மணலை+. A sea-fish. See கல்நவரை. (W.) . |
| மணவணி | maṇa-v-aṇi n. <>மணம்+. See மணக்கோலம். ஒரு பெருநாளான் மணவணி காண மகிழ்ந்தனர் (சிலப். 1, 42). . |
| மணவறை | maṇa-v-aṟai n. <> id.+. 1. Chamber or dais for the performance of the marriage rites; விவாகமண்டபம். என்னெஞ்ச மணவறை (குமர. பிர. மீனாட். இரட். 2). 2. Bed-chamber; |
| மணவறைத்தோழன் | maṇa-v-aṟai-t-tōḻaṉ n. <>மணவறை+. Bridegroom's companion; best man; மாப்பிள்ளைத்தோழன். (W.) |
| மணவாட்டி | maṇa-vāṭṭi n. Fem. of மணவாளன். 1. Bride; மணமகள். 2. Wife; |
| மணவாரி | maṇavāri n. prob. மணல்+. A kind of coarse paddy; பெருநெல்வகை. Tinn. |
| மணவாளதாசர் | maṇa-v-āḷa-tācar n. An author. See பிள்ளைப்பெருமாளையங்கார். . |
| மணவாளமாமுனி | maṇa-v-āḷa-mā-muṉi n. An ācārya of the Teṉkalai šrī Vaiṣṇavas, author of Upatēca-rattiṉa-mālai and other works, 14th c.; 14-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் உபதேசரத்தினமாலை முதலிய நூல்கள் இயற்றியவருமான தென்கலை ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர். |
