Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணிக்காம்பு | maṇi-k-kāmpu n. <>id.+. 1. Jewelled stand or leg; இரத்தினம் இழைத்துச் செய்த கால். தானோர் மணிக்காம்பு போனிமிர்ந்து (திவ். இயற். பெரியதி.). 2. Tomato. See தக்காளி. (சங். அக.) |
| மணிக்காலறிஞர் | maṇi-k-kāl-aṟiar n. <>id.+கால்1+. Merchants skilled in the knowledge of gems; இரத்தினங்களின் குணாகுணமறிந்த வணிகர். மணிக்காலறிஞர் பெருங்குடி (கல்லா. முருக. துதி). |
| மணிக்காளி | maṇikkāḷi n. Black nightshade. See மணத்தக்காளி. (மூ. அ.) . |
| மணிக்காற்பள்ளி | maṇi-k-kāṟ-paḷḷi n. <>மணி+கால்1+. A kind of palanquin for kings; அரசர்க்குரிய சிவிகைவகை. (சூடா.) |
| மணிக்குடல் | maṇi-k-kuṭal n. <>id.+. Small intestines; சிறுகுடல். Colloq. |
| மணிக்கூடு | maṇi-k-kūṭu n. <>id.+. 1. Belfry-stand; bell-tower; மணிதூங்குமாடம். (கட்டட. நாமா. 4). 2. Clock-tower, clock-house; 3. Clock case; 4. Clock, as containing a bell; 5. Clepsydra; hour-glass; 6. Aplant used in dyeing; |
| மணிக்கூண்டு | maṇi-k-kūṇṭu n. <>id.+. See மணிக்கூடு, 1, 2. Loc. . |
| மணிக்கை | maṇi-k-kai n. <>id.+. See மணிக்கட்டு. Tinn. . |
| மணிக்கொச்சம் | maṇi-k-koccam n. <>id.+. See மணிக்கயிறு, 5. Loc. . |
| மணிக்கோரை | maṇi-k-kōrai n. <>id.+. A kind of sedge, Cyperus venustus; கோரை வகை. (W.) |
| மணிக்கோவை | maṇi-k-kōvai n. <>id.+. Necklace of gems; இரத்தினமாலை. பொன்னாண் கோத்த நன்மணிக்கோவை (மணி. 3, 133). |
| மணிகட்டு - தல் | maṇi-kaṭṭu- v. intr. <>id.+. To form grains, in ears of corn; கதிரில் தானியமணி உண்டாதல். |
| மணிகடம் | maṇikaṭam n. Hedge-twiner; வேலிப்பருத்தி. (சங். அக.) |
| மணிகண்டசாவி | maṇi-kaṇṭa-cāvi n. <>மணி+காண்-+. See மணிபிடிச்சாவி. . |
| மணிகண்டன் | maṇi-kaṇṭaṉ n. <>maṇikaṇṭha. šiva, as blue-necked; [நீலகண்டத்தையுடையவன்] சிவன். மணிகண்ட னென்னும்பேர் மற்றிதனால் (பூவண. உலா, 50). |
| மணிகம் | maṇikam n. <>maṇika. Water pot; நீர்க்குடம். (யாழ். அக.) |
| மணிகர்ணிகை | maṇikarṇikai n. <>maṇikarṇikā. A sacred tank in Benares; காசியில் பிரசித்தமானதொரு தீர்த்தம். (திருவாலவா. அரும்பக். 412.) |
| மணிகன்றிகை | maṇikaṉṟikai n. See மணிகர்ணிகை. காசியிற் சிறந்ததொன் மணிகன்றிகை (கந்தபு. தக்கன்சிவபூ. 2). . |
| மணிகன்னிகை | maṇikaṉṉikai n. See மணிகர்ணிகை. மணிகன்னிகையாடி (காசிக. தேவ. அக. 2). . |
| மணிகாசம் | maṇi-kācam n. <>மணி+காசம்4. An eye-disease; கண்ணோய் வகை. (யாழ். அக.) |
| மணிகாரகன் | maṇi-kārakaṉ n. <>maṇi-kārakaṉ. Worker in precious stones; இரத்தின வேலை செய்வோன். (சங். அக.) |
| மணிகாரம் | maṇi-kāram n. Borax; வெண்காரம். (மூ. அ.) |
| மணிகாரன் 1 | maṇikāraṉ n. <>maṇi-kāra. Son born of Vaišya parents in clandestine union' வைசியனுக்கும் அந்தச் சாதிப்பெண்ணுக்கும் களவிற் பிறந்த பிள்ளை. (சூத. சிவமானமிய. 12, 18.) |
| மணிகாரன் 2 | maṇikāraṉ n. See மணியக்காரன். . |
| மணிகானனம் | maṇikāṉaṉam n. <>maṇi-kānana. Neck; கழுத்து. (சிந்தா. நி. 41.) |
| மணிகிலுக்கு - தல் | maṇi-kilukku- v. intr. <>மணி+குலுக்கு-. To ring a handbell; கைம்மணியடித்தல். (J.) |
| மணிகுயிற்றுநர் | maṇi-kuyiṟṟunar n. <>id.+. Makers of pearl garlands; முத்துக்கோப்பார். (பிங்.) |
| மணிகூடம் | maṇi-kūṭam n. <>maṇi-kūṭa. An artificial hillock where Indra sports; இந்திரனது விளையாட்டுச்செய்குன்று. (சங். அக.) |
| மணிச்சட்டம் | maṇi-c-caṭṭam n. <>மணி+. A wooden frame with rows of coloured beads, for teaching arithmetic to children, abacus; குழந்தைகளுக்கு எண் அறிவிக்க உதவும் மணிகள் கோத்த சட்டம். Mod. |
| மணிச்சட்டி | maṇi-c-caṭṭi n. <>id.+. Earthen pot with a rim like a row of beads; விளிம்பில் மணிவடிவமைந்த மண்சட்டி. (J.) |
| மணிச்சம்பா | maṇi-c-campā n. <>id.+. A kind of paddy; நெல்வகை. (பதார்த்த. 809). |
