Word |
English & Tamil Meaning |
|---|---|
| மணிச்சிகை | maṇi-c-cikai n. <>id.+. Crab's-eye. See குன்றி, 1. செங்கொடுவேரி தேமா மணிச்சிகை (குறிஞ்சிப். 64). . |
| மணிச்சுறா | maṇi-c-cuṟā n. prob. id.+. Black shark, grey, attaining 12 ft. in length, Carcharias manisorrah; சாம்பனிறமுள்ளதும் 12 அடி வளர்வதுமான சுறாமீன்வகை. |
| மணிச்செப்பு | maṇi-c-ceppu n. <> id.+. Small casket set with precious stones; மணியிழைத்த செப்பு. மாலைப்பெரு மணிச்செப்பும் (சு¦வக. 2474). |
| மணிச்சோதி | maṇi-c-cōti n. prob. id.+. The bow of the Wind-God; வாயுதேவனது வில். (சங். அக.) |
| மணிசகம் | maṇicakam n. See மணீசகம். (யாழ். அக.) . |
| மணிசரம் | maṇi-caram n. <>maṇi-sara. See மணிக்கோவை. (யாழ். அக.) . |
| மணிசேகரம் | maṇicēkaram n. Yama's harem; யமனுடைய அந்தப்புரம். (சங். அக.) |
| மணித்தக்காளி | maṇi-t-takkāḷi n. See மணத்தக்காளி. (W.) . |
| மணித்தீவம் | maṇi-t-tīcvam n. <>maṇi-dvīpa. An island inhabited by women alone; பெண்கள் மாத்திரம் வாழும் ஒரு தீவு. (பெருங். உஞ்சைக். 42, 181, குறிப்புரை.) |
| மணித்துத்தி | maṇi-t-tutti n. <>மணி+. Five-winged capsule rose-mallow. See சிறுதுத்தி. (W.) . |
| மணிதம் | maṇitam n. perh. maṇita. Sound of the bell; மணியினோசை. (யாழ். அக.) |
| மணிதனு | maṇi-taṉu n. <>maṇi + dhanus. Rainbow; வானவில். (யாழ். அக.) |
| மணிதாட்பத்திரி | maṇi-tāṭpattiri n. A saree; சேலைவகை. Loc. |
| மணிதிரள்(ளு) - தல் | maṇi-tiraḷ- v. intr. <>மணி+. To mature, as grain in corn-ears; நெற்கதிரில் தானியமணி திரண்டு உருவடைதல். |
| மணிதீபம் | maṇi-tīpam n. See மணித்தீவம். (சங். அக.) . |
| மணிதுருவிடு - தல் | maṇi-turuviṭu- v. intr. <>மணி+. To cut and polish gems; இரத்தினங்களைச் சுத்திசெய்தல். (யாழ். அக.) |
| மணிந்தம் | maṇintam n. Corr. of மணிபந்தம். (யாழ். அக.) . |
| மணிநா | maṇi-nā n. <>மணி+. Tongue of a bell; மணியின் நாக்கு. ஆடுங் கடைமணி நாவசையாமல் (தமிழ்நா.128). |
| மணிநாக்கு | maṇi-nākku n. <>id.+. See மணிநா. . |
| மணிநிறம் | maṇi-niṟam n. <>id.+. Dark blue colour, as of sapphire; கருநீலநிறம். மணிநிறங் கொண்ட மாமலை வெற்பில் (ஐங்குறு. 224). |
| மணிநிறவண்ணன் | maṇi-niṟa-vaṇṇaṉ n. <>மணிநிறம்+. See மணிவண்ணன். (சீவக. 2371.) . |
| மணிநீர் | maṇi-nīr n. <>மணி+. 1. Dark blue water, as in a tank; மணிபோலும் நிறத்திணையுடைய நீர். மணிநீரு மண்ணும் மலையும் (குறள், 642). 2. Water of a gem; |
| மணிநெய் | maṇi-ney n. <>id.+. Castoroil; சிற்றமணக்கு நெய். (தைலவ. தைல. 124.) |
| மணிப்பவம் | maṇi-p-pavam n. <>id.+bhava. The number 20, from nine maṇi plus eleven Bava or Rudra; இருபது. (தைலவ. தைல.) |
| மணிப்பாரா | maṇi-p-pārā n. <>id.+. Loc. 1. Palace gate where the hours are struck; அரண்மனை வாயிலில் நேரத்தை அறிவிக்க அடிக்கும் மணிகட்டிய காவலிடம். 2. Office of striking the hour-gong at a palace-gate; |
| மணிப்பாரி | maṇi-p-pārī n. <>id.+. 1. A kind of night-watchman's song; இராக்காவலாளரின் பாட்டுவகை. 2. Patrol by night-watchman, sounding gongs; |
| மணிப்பிடிப்பு | maṇi-p-piṭippu n. <>id.+. Formation of grains in the corn ears; நெற்கதிரில் தானியமணி தோன்றுகை. |
| மணிப்பிரவாளம் | maṇi-p-piravāḷam n. <>maṇi-pravāla A kind of style in which words of two languages, like Sanskrit and a vernacular, are mixed; வடமொழியுந் தென்மொழியும்போன்ற இருமொழிச்சொற்கள் விரவிவரும் நடை. (வீரசோ. அலங். 40.) |
| மணிப்புங்கம் | maṇi-p-puṅkam n. 1. Rusty soap-nut, s.tr., Erioglossum rubiginosum; பூவந்திமரவகை. (M. M. 844.) 2. Soap-nut. See நெய்க்கொட்டான். (மலை.) |
| மணிப்புங்கு | maṇi-p-puṅku n. See மணிப்புங்கம். (பாலவா.) . |
| மணிப்புறா | maṇi-p-puṟā n. <>மணி+. Ring-dove, turtle-dove, spotted dove; புறாவகை. (பதார்த்த. 906.) |
| மணிப்புன்கம் | maṇi-p-puṉkam m. See மணிப்புங்கம். Loc. . |
