Word |
English & Tamil Meaning |
|---|---|
| மத்தளிகன் | mattaḷikaṉ n. <>mardalika One who plays the mattaḷam; மத்தளம் வாசிப்போன். மத்தளிகன் பின்போனாள் (பிரபுலிங். மாயை. கோலா. 45). |
| மத்தன் | mattaṉ n. <>matta. 1. Crazy fellow; பயித்தியம் பிடித்தவன். மததனேன் பெறுமாமலமாய (தாயு. பொன்னை. 35). 2. Wild enthusiast; 3. Bewildered person; 4. Proud fellow; |
| மத்தனம் 1 | mattaṉam n. <>mathana. Churning; கடைகை. (யாழ். அக.) |
| மத்தனம் 2 | mattaṉam n. <>mardana. Shampooing; அழுத்திப்பிடிக்கை. மருவிய வழிபாடன்றே மத்தன மென்ப (கந்தபு. இந்திரபுரி. 44). |
| மத்தனலிங்கம் | mattaṉa-liṅkam n. cf. madanu+. Emetic-nut. See மருக்காரை. (மூ. அ.) |
| மத்தாடி | mattāṭi n. cf. matta. 1. Blue thorn-apple. See நீலவூமத்தை. (L.) 2. Purple stramony. |
| மத்தாடு - தல் | mattāṭu- v. intr. prob. மத்து1+ஆடு-. To whirl in play, as girls holding each other by the hand; பெண்கள் கைகோத்து ஆடுதல். Loc. |
| மத்தாப்பு | mattāppu n. <>U. mahtāb. Coloured fire-works, used on festive occasions; வெளிச்சந் தருதற்குக் கொளுத்தப்படும் ஒருவகை வாணம் பார மத்தாப்பி னொளியதி லதிகம் (அறப். சத. 43). |
| மத்தாளமணி | mattāḷa-maṇi n. A necklace; கழுத்தணிவகை. Parav. |
| மத்தி | matti n. <>madhya. Midst, midway, intermediate space or time; நடு. அத்தியின் மத்தியிலே (அழகர்கல. காப். 2). |
| மத்தி 1 - த்தல் | matti- 11 v. tr. <>math. To churn; கடைதல். பாற்சமுத்திரத்தை மத்தித்த திருமால் (கூர்மபு.) |
| மத்தி 2 - த்தல் | matti- 11 v. tr. <>mard. 1. To mix, as medicine; மருந்து கலத்தல். Colloq. 2. To beat; 3. To rub; |
| மத்தி | matti n. A fish; மீன்வகை. மத்தியுஞ் சிறுபொத்தியும் (குருகூர்ப்பள்ளு). |
| மத்திகை | mattikai n. 1. Whip, horsewhip; குதிரைச்சம்மட்டி. மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை (முல்லைப். 59). 2. Staff, rod; 3. Lamp-stand; 4. Flower garland; |
| மத்திடு - தல் | mattiṭu- v. tr. <>மத்து1+. To churn; கடைதல். மானிலாவிய நோக்கியர் படிறிடை மத்திடு தயிராகி (திருவாச. 5, 40). |
| மத்திபம் | mattipam n. <>madhyama. See மத்திமம், 1, 2, 3, மாலைக்குளிக் கவைகண் மத்திபமே (பதார்த்த. 1307). . |
| மத்திமக்கிரகம் | mattima-k-kirakam n. <>id.+ The Sun and the Moon; சந்திரசூரியர்கள். (சங். அக.) |
| மத்திமக்கிராமம் | mattima-k-kirāmam n. (Mus.) A melody-type; இராகவகை. (பரத. இராக. 80.) |
| மத்திமக்கூர்மை | mattima-k-kūrmai n. Salt extracted from sesame seed; திலச்சாரம். (யாழ். அக.) |
| மத்திமகண்டம் | mattima-kaṇṭam n. <>madhyama + A continent, one of navakaṇṭam, q.v.; நவகண்டத்தொன்று. (பிங்.) |
| மத்திமகாலம் | mattima-kālam n. <>id.+. 1. (Mus.) Medium speed in singing, moderato; துரிதம் விளம்பித மில்லாமல் நடுத்தரமாகப் பாடும் முறை. 2. See மத்தியகாலம், 2. |
| மத்திமச்சம் | mattimaccam n. cf. திபதிச்சம். Black oil tree; வாலுழுவை. (சங். அக.) |
| மத்திமசங்காரம் | mattima-caṅkāram n. <>madhyama+ Partial dissolution of the universe; மாயைவரை அழிக்கப்படும் சங்காரம். (சி. சி. 1, 35, மறைஞா.) |
| மத்திமசாகசம் | mattima-cākacam n. <>id.+ sāhasa. Fine of 500 fanams; ஐந்நூறு பணம் அளவுள்ள தண்டத்தொகை. (சுக்கிரநீதி, 172.) |
| மத்திமதானம் | mattima-tāṉam n. <>id.+ dāna. Charitable gift to the poor, the blind, etc.; ஏழை குருடர் முதலியோர்க்குக் கொடுக்கும் கொடை. (பிங்.) |
| மத்திமதீபம் | mattima-tīpam n. <>id.+. A figure of speech. See இடைநிலைத்தீவகம். (சீவக. 27, உரை.) |
| மத்திமதேசம் | mattima-tēcam n. <>id.+. Midland country lying between the Himālayas on the north, the Vindhyas on the south, Vinasana on the west and Prayaga on the east; இமயமலைக்குத் தெற்கும், விந்தியத்திற்கு வடக்கும் வினசனத்துக்குக் கிழக்கும், பிரயாகைக்கு மேற்குமுள்ள தேசப்பகுதி. |
