Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதவலை | mata-valai n. A kind of fishing net into which fish are driven from all sides ; நாற்புறத்திமுள்ள மீன்களைப் பையினுள் நுழையச் செய்து பிடிக்கும் வலை. Loc. |
| மதவாதி | mata-vāti n. <>mata-vādin. One who is skilled in religious disputation ; சமயவாதஞ் செய்வோன். |
| மதவிருந்தம் | mata-viruntam n. <>madavrnda. Elephant ; யானை. (யாழ். அக.) |
| மதவு 1 | matavu n. See மத. மதவு நடை நல்லான் (அகநா.14). . |
| மதவு 2 | matavu n. Corr. of மதகு. (யாழ்.அக.) . |
| மதளை | mataḷai n. See மதலை2.Loc. . |
| மதளைவையம் | mataḷaivaiyam n. Climbing nettle ; See காஞ்சொறி. (யாழ். அக.) |
| மதறா | mataṟā n. <>U. mazrā. Hamlet ; See மஜரா. (C. G.) |
| மதன் 1 | mataṉ n. <>மத. 1. cf.mada. Arrogance ; செருக்கு. மதனுடை நோன்றாள் (பட்டினப். 278). 2. Strength ; 3. Enthusiasm, elation; 4 .Beauty ; 5. Greatness, glory ; 6. Abundance; excess ; 7. Ignorance ; 8. Bewilderment ; |
| மதன் 2 | mataṉ n. <>madana. Kāma, the God of love ; மன்மதன். (பிங்.) |
| மதன்றாய் | mataṉṟāy n. <>மதன்2 + தாய். Lakṣmī, as the mother of Kāma ; [மன்மதன்தாய்] இலக்குமிதேவி. (நாம்தீப. 53.) |
| மதனகாகுரவம் | mataṉa-kāku-ravam n. <>madana-kāku-rava. Pigeon ; புறா. (யாழ் . அக.) |
| மதனகாமப்பூ | mataṉa-kāma-p-pū n. <>மதனகாமம்+. 1.Cowslip creeper. See கொடிச்சம்பங்கி. (W.) 2 . See மதனகாமேசுரப்பூ.Loc. |
| மதனகாமம் | mataṉa-kāmam n. <>மதனன்+. See மதனகாமேசுவரம்.(L.) . |
| மதனகாமியப்பூ | mataṉa-kāmiya-p-pū n. <>id.+. See மதனகாமேசுரப்பூ. (யாழ்.அக.) . |
| மதனகாமேசுரப்பூ | mataṉa-kāmēcura-p-pū n. <>மதனகாமேசுரம்+. Flower-bud of Cycas revoluta , used as a medicinal drug; மருந்துச் சரக்குவகை. (சு. வை. ர. 486.) |
| மதனகாமேசுரம் | mataṉa-kāmēcuram n. See மதனகாமேசுவரம்.(W.) . |
| மதனகாமேசுவரம் | mataṉa-kāmēcuva-ram n. Prob. madana-kāmēšvara. 1. Sago fern palm, s.tr., Cycas circinalis; சிறுமரவகை. (L.) 2. China fern palm, s.tr., Cycas revoluta ; |
| மதனகீதம் | mataṉa-kītam n. <>madana+. Amorous songs ; காமப்பாடல். மதன கீதமே திரிதரப் பிறந்ததோர் சிலம்பிற்று (சீவக. 1211). |
| மதனசலாகை | mataṉa-calākai n. <>madana-šalākā. (யாழ்.அக.) 1. Female cuckoo ; குயிற்பேடை. 2. A medicine ; |
| மதனசாத்திரம் | mataṉa-cāttiram n. <>madana+. Erotics, one of aṟupattunālukalai , q.v. ; அறுபத்துநாலு கலையுள் ஒன்றாகிய காமசாஸ்திரம். |
| மதனத்திரயோதசி | mataṉa-t-tirayōtaci n. <>id.+. The thirteenth titi of the bright fortnight in the lunar month of Cittirai , considered appropriate to Kāmā's festival ; காமனது உத்ஸவத்திற்குரிய சைத்திரசுக்கிலத் திரயோதசி. (பஞ்.) |
| மதனநூல் | mataṉa-nūl n. <>id.+. See மதனசாத்திரம். . |
| மதனப்பூ | mataṉa-p-pū n. Prob. id.+. See மதனகாமேசுரப்பூ. . |
| மதனபாடகம் | mataṉa-pāṭakam n. <>madana-pāṭhaka . Indian cuckoo, as exciting love by its songs ; [கம்மோத்தீபனமான பாட்டுடையது] குயில். (பிங்.) |
| மதனம் 1 | mataṉam n. <>madana. 1. Sexual passion, love ; ¢காமம் (பிங்.) 2. The arrow of Kāma which produces sexual passion ; 3. One of paca-pāṇāvastai , q.v. ; 4. Pride ; 5. Spring ; 6. Bee ; 7. Beeswax ; 8. Emetic-nut ; 9. A sea-fish, slaty grey, attaining 2 ft. or more in length, Diagramma crassispinum ; 10. A sea-fish, silvery, attaining 18 in . in length, chrysophrys datnia; |
