Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதி 1 | mati. n. <>mati. 1. Understanding, intellect ; இயற்கை யறிவு. மதிநுட்ப நூலோடுடையார்க்கு (குறள், 636). 2. Discrimination, judgment, discernment ; 3. Duty of listening to exposition of the vēdas and acting in accordance with the precepts thereof ; 4. Esteem, value ; 5. A wife of kāšyapa and daughter of Dakṣa ; 6. Asōka tree; |
| மதி 2 - த்தல் | mati- 11 v .tr.<>மதி1. 1. To estimate, value, compute ; ¢ அளவிடுதல். மண்விழைந்து வாழ்நாண்¢ மதியாமை (திரிகடு. 29). 2. To esteem, regard, respect, reverence ; 3. To think; to consider : 4. To meditate upon ; 5. To decide; to ascertain; to be assured of ; |
| மதி 3 | mati n. prob. மதி2-. 1. Moon, full moon ; சந்திரன், மதிப் பின்னீர பேதையார் நட்பு (குறள், 782). 2. Month ; 3. Sign of the zodiac ; 4. Kubera ; 5. Breath passing through the left nostril ; 6. See மதிநாள்.(சூடா.) 7. The number 'one' ; 8. Cancer of the zodiac, as the moon's house ; |
| மதி 4 | mati n. prob.மது. Liquorice-plant . See அதிமதுரம். (சங். அக.) |
| மதி 5 | mati, part. 1. An euphonic suffix of the imperative mood ; ஒரு முன்னிலை யசைச்சொல். (தொல். சொல். 276.) 2. Expletive of the third person ; |
| மதி 6 - த்தல் | mati- 11 v.tr.<>math. To churn ; கடைதல். மந்தரங்கொடு மதித்தநாள் (சேதுபு. சங்கர. 20). |
| மதி 7 - த்தல் | mati- 11 v.intr.<>mada. 1. To be haughty ; கொழுத்தல். மதித்தெதிர் தெவ்வர் (இரகு. மீட்சி. 37). 2. To be furious ; 3. To bloat ; |
| மதி 8 | mati n. prob.madin. Elephant; யானை. கோண் மதித்திடர் கிடந்தன (கம்பரா. நாகபாச. 136). |
| மதி 9 - த்தல் | mati- 11 v.intr.Corr. of மரி-. See குழந்தை மதித்துப் பிறந்தது .Loc. . |
| மதிக்கண்ணியான் | mati-k-kaṇṇiyāṉ n. <>மதி3+. šiva, as wearing the moon as a wreath on his head ; சிவபிரான். கொன்றை மாலைக் குளிர்மதிக் கண்ணியாற்கு (சீவக. 208). |
| மதிக்கணம் | mati-k-kaṇam n. <>id.+. (Pros.)Metrical foot of one nirai and two nēr . See சந்திரகணம். (திவா.) |
| மதிக்கலை | mati-k-kalai n..<>id.+. 1. Phase of the moon ; சந்திரகலை. 2. The number '16' ; |
| மதிக்கொழுந்து | mati-k-koḻuntu n. <>id.+. Crescent moon, as tender ; பாலசந்திரன். வெண் மதிக்கொழுந் தொன்று (திருவாச. 6, 4). |
| மதிகம் | matikam n. Matico plant, Amenthe elongata; செடிவகை. |
| மதிகாந்தி | mati-kāṉti n. <>மதி3+. Crystal; பளிங்கு. (சங். அக.) |
| மதிகூர்மை | mati-kūrmai n. <>id.+. Rocksalt. See இந்துப்பு. (சங். அக.) |
| மதிகேடன் | matikēṭan n. <>மதிகேடு. Fool; நல்லறிவில்லாதவன். வஞ்சமணர்தேரர் மதிகேடர் (தேவா. 397, 10). |
| மதிகேடி | matikēṭi n. Fem. of மதிகேடன் Foolish woman; அறிவில்லாத பெண். |
| மதிகேடு | mati-kēṭu n. <>மதி1+. Folly, stupidity ; புத்தியீனம். (W.) |
| மதிச்சடையன் | mati-c-caṭaiyaṉ n. <>மதி 3+. šiva, as wearing the moon on His locks; [சந்திரனைச் சடையிலே தரித்தவன்] சிவபிரான். |
| மதிசகன் | mati-cakaṉ n. <>id.+சகன்3. Kāma, as the moon's companion ; [சந்திரனது தோழன்] மன்மதன். (பிங்) |
| மதிசூடி | mati-cūṭi n. <>id.+சூடு-. šiva, as wearing the moon; சிவபிரான். மதிசூடி தன்னோடயனை (திவ். இயற். நான்முகன். 66). |
| மதிஞன் | matian n. <>மதி1. Learned man; அறிஞன். மதிஞர் வளமுற்ற வேதத்தை யோதியே (திருமந். 61). |
