Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதிமேகக்கல் | mati-mēka-k-kal n. Corundum; குருவிந்தக்கல். (சங். அக.) |
| மதிமை | matimai n. <>மதி1. Knowledge; அறிவு. மதிமை சாலா மருட்கை நான்கே (தொல். பொ. 255). |
| மதிமோசம் | mati-mōcam n. <>id.+. Lack of sense; stupidity, folly; அறிவின்மை. மதிமோசமோ உன்றன் விதிவசமோ. . . அருவருக்கிறாய் (இராமநா. உயுத். 2). |
| மதியங்காண்(ணு) - தல் | matiyaṅ-kāṇ- v. tr. <>மதியம்3+. To make a rough estimate; உத்தேசமதிப்பிடுதல். (W.) |
| மதியங்கு | matiyanku n. cf. அதிங்கம். A kind of fragrant substance; ஒருவகை வாசனைப்பண்டம். அரக்கு மதியங்கு மரும்பெறற் பயினும் (பெருங். இலாவாண. 18, 46, அரும்.). |
| மதியந்திரும்பு - தல் | matiyan-tirumpu- v. intr. <>மதியம்2+. To cross the meridian and decline, as the sun; பொழுது சாய்தல். (W.) |
| மதியப்பூப்பு | matiya-p-pūppu n. <>மதியம்1 +பூ-. Moonrise; சந்திரோதயம். சகோரங் கலை மதியப்பூப்புக் கெதிராது போதுமோ (திருவாரூ. 394). |
| மதியம் 1 | matiyam n. <>மதி3. 1. Moon; சந்திரன். (பிங்.) கொன்றை மதியமும் . . . துன்றிய சென்னியர் (திருவாச. 17, 10). 2. Full moon; 3. Fullmoon day; 4. Month; |
| மதியம் 2 | matiyam n. <>madhya. 1. Centre; நடு. ஓரினன் மதியத்தினை யோதுமே (மேருமந். 1127.) 2. Noon, midday; |
| மதியம் 3 | matiyam n. <>மதி2-. Guess, estimate; மதிப்பு. (W.) |
| மதியம்புரள | matiyam-puraḷa adv. <>மதியம்2+. Towards sunset, as midday rolled by; பொழுதுசாய. Loc. |
| மதியாணி | mati-y-āṇi n. <>மத்தி+ஆணி. See மதியாணிக்கட்டை. (W.) . |
| மதியாணிக்கட்டை | matiyāṇi-k-kaṭṭai n. <>மதியாணி+. The peg that joins the yoke to the pole of a cart or plough; நுகத்தின் நடுவாணி. (யாழ். அக.) |
| மதியாம்பல் | mati-y-āmpal n. Gulancha. See சீந்தில். (மலை.) |
| மதியிலி | mati-y-ili n. <>மதி 1+. Fool; அறிவற்ற-வன்-வள்-து. எம்மதியிலி மடநெஞ்சே (திருவாச, 5, 33). |
| மதியீனம் | mati-y-iṉam n. <>id.+. see மதிமோசம் . |
| மதியுடம்படு - தல் | mati-y-uṭampaṭu- v. intr. <>id.+. 1. (Akap.) To reciprocate love, as a heroine; தலைவி தலைவன்கருத்தோடு இணங்கிய வளாதல். மிதிலைமூதூ ரெய்தியஞான்றே மதியுடம்பட்ட மாக்கட்சீதை (தொல். பொ. 54, உரை). 2. (Akap.) To discover, as a maid, the love-affair of her mistress; |
| மதியுடம்படுத்தல் | mati-y-uṭampaṭuttal n. <>id.+. 1. (Akap.) Theme of a maid discovering the love-affair of her mistress; தலைவன் தலைவியரிருவர் கருத்தொற்றுமையால் அவர்தம்முட் கூட்டமுண்மையைத் தோழி யுணரும் அகத்துறை. (தொல். பொ. 127.) 2. (Akap.) Theme of a hero disclosing his love-affair to the maid of his lady-love and securing her help; |
| மதியுணி | mati-y-uṇi n <>மதி3+உண்-.. The ascending and the descending nodes, as swallowing the moon during an eclipse; இராகுகேதுக்கள். (W.) |
| மதியுப்பு | mati-y-uppu n. <>id.+. 1. A medicinal salt, impure carbonate of soda, Fel vitri; வளையலுப்பு. (மூ. அ.) |
| மதியையழைத்தல் | matiyai-y-aḻaittal n. <>id.+. A section of piḷḷai-t-tamiḻ. See அம்புலிப்பருவம். (பிங்.) |
| மதிரம் | matiram n. See மதிரை. மதுக மதிர முதலா (பெருங். வத்தவ. 11, 87). . |
| மதிரவி | matiravi n. Essence of vermilion; சாதிலிங்கத்தினின்று வடித்த ரசம். (சங். அக.) |
| மதிரை | matirai n. <>madirā Toddy; கள். (சூடா.) |
| மதில் | matil n. [T. madulu K. M. madil.] 1. Wall round a fort; fortification; கோட்டைச்சுவர். நீர்முற்றி மதில்பொரூஉம் பகையல்லால் (கலித். 67) 2. Wall; 3. Coping; 4. Jamaica ginger. |
