Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதனம் 2 | mataṉam n<>mathana. 1. Churning ; கடைவகை. அமுத மதனத்தி லாழிமிசைவரும் (பாரத. பன்னிரண். 45). 2. Destroying, slaying ; 3. Perturbation of mind ; |
| மதனம் 3 | mataṉam n. Prob. mauna. Silence ; மௌனம் மதனம் மலையைச் சாதிக்கும். (J.) |
| மதனலிங்கம் | mataṉa-liṅkam n. <>madana-liṅga. Emetic-nut ; See மருக்காரை. (மலை.) |
| மதனல¦லை | mataṉa-līlai n. <>madana+. Lascivious act, sports in sexual union ; காமவிளையாட்டு. மதனல¦லையிற் பழுதற வழிபடும் பாவை (பாரத. அருச்சுனன்றீர். 61). |
| மதனவேள் | mataṉa-veḷ n. <> மதனன்+. See மதனன்,1. மதனவேள் மிகவெய்ய (சிலப், 6, 35, உரை). . |
| மதனன் | mataṉaṉ n. <>madana. 1. Kāma, the God of love ; மன்மதன். (பிங்.) மதனனென்றார் தம்மை (திவ். பெரியதி. 6, 4, 8). 2. Lover ; |
| மதனாகமம் | mataṉākamam n. <>madanāgama. See மதனசாத்திரம். மதனாகமங்கள் விளம்புமால் (கொக்கோ, 3, 28). . |
| மதனாங்குசம் | mataṉāṅkucam n. <>madanāṅkuša. (யாழ்.அக.) 1. See மதனாலயம்,1. . 2. Finger nail ; |
| மதனாயுதம் | mataṉāyutam n. <>madaṅāyudha. See மதனாலயம்,1. (யாழ் .அக.) . |
| மதனாலயம் | mataṉālayam n. <>madanālaya.. 1. Pudendum muliebre ; பெண்குறி. புண்டாநுதலி பொற்பாம் புதுமதனாலயம்போய் (இராகு. மாலையீ. 79). 2. Lotus ; |
| மதனாவத்தை | mataṉāvattai n. <>madanavasthā. Pangs of separation, as of lovers ; பிரிவுத்துயர். (யாழ். அக.) |
| மதனி | mataṉi n. Sister-in-law. See மதினி. இச்சீதையும் உன் மதனி (இராமநா. அயோத். 21). |
| மதனைவென்றோன் | mataṉai-veṉṟōṉ n. <>மதன் 2 + வெல்-. Arhat, as the conqueror of Kāma ; அருகக்கடவுள். (சூடா.) |
| மதனோற்சவம் | mataṉōṟcavam n. <>madanōtsavā. Festival celebrating the spring season ; வேனில்விழா. (யாழ். அக.) |
| மதனோற்சவை | mataṉōṟcavai n. <>madanōtsavā. Celestial damsel ; அரம்பை. (யாழ். அக.) |
| மதாசாரம் | matācāram n. <>mata + ā-cāra. Religious practice, observance of religious rites and rules ; சமய வொழுக்கம். |
| மதாணி | mataṇi n. <>மத + அணி. 1. Large pendant suspended from the necklace ; கழுத்தணியின் தொங்கல். திண்கதிர் மதாணி (மதுரைக். 461). 2. Jewel ; |
| மதாந்தபுத்தி | matanta-putti n. <>madāndha+. Superficiality or shallowness due to haughtiness ; இறுமாப்பினால் ஆழ்ந்துசெல்லாதபுத்தி. Colloq. |
| மதாபிமானி | matāpimāṉi n. <>matābhimanin. Enthusiast, fanatic ; மதப்பற்றுள்ளவன். |
| மதாமஸ்தன் | matāmastaṉ. n. <>மதாமஸ்து. Robust, corpulent man ; கொழுத்த சரீரமுடையவன். (W.) |
| மதாமஸ்து | matāmastu n. <>U. mad-ō-mast. 1.Great madness, intoxication ; மிகுமயக்கம். 2. Indifference ; |
| மதார் | matār n. <>மதர். Arrogance ; செருக்கு. (W.) |
| மதார்சிங்கு | matār-cīnku n. <>U. murdārsing. Litharge, impure oxide of lead, Plumbi oxidum ; மருந்துச்சரக்குவகை . (C. G.) |
| மதாரம் | matāram n. <>madāra. (யாழ்.அக.) 1. Musk ; கஸ்தூரி. 2. Elephant ; 3. Pig ; |
| மதாரன் | matāraṉ n. <>madāra. Profligate ; தூர்த்தன். (யாழ். அக.) |
| மதாலம் | matālam n. cf. மதலை1 . Senna ;See கொன்றை (மலை.) . |
| மதாவரிசி | matā-v-arici n. A fragrant substance, one of 32 ōmālikai , q.v.; ஒமாலிகை முப்பத்திரண்டனுள் ஒன்று. (சிலப், 6, 27, உரை.) |
| மதாவளம் | matāvaḷam n. cf. dantāvala. Elephant ; யானை. (பிங்.) |
| மதாளி - த்தல் | matāḻi- 11. v. intr. cf. மதர்- 1. To thrive, flourish; to be luxuriant, rich and abundant செழித்தல். (W.) 2. To be too luxuriant to be productive, as plants, soil, etc ; |
| மதானுசாரம் | matāṉūcāram n. <>matānusāra. See மதாசாரம். (W.) . |
| மதானுசாரி | matāṉucāri n. <>matānusārin. One who follows the rites of his creed ; மதாசாரத்தைப் பின்பற்றுவோன். (W.) |
