Word |
English & Tamil Meaning |
|---|---|
| மதுரைச்சங்கம் | maturai-c-caṅkam n. <>id.+. The third Tamil academy at Madura; மதுரையிலிருந்த மூன்றாம் தமிழ்ச்சங்கம். |
| மதுரைத்தொகை | maturai-t-tokai n. <>id.+. See மதுரைச்சங்கம். மதுரைத்தொகை யாக்கினானும் (தேவா. 1179, 11). . |
| மதுரைமாதெய்வம் | maturai-mā-tey-vam n. <>id.+. See மதுராபதி. மதுரைமாதெய்வம் வந்து தோன்றி (சிலப். பதி. 43). . |
| மதுரைமாதேவி | maturai-mā-tēvi n. <>id.+. Mīṉākṣī, as the Goddess of Madura; மீனாட்சியம்மை. (யாழ். அக.) |
| மதுரையுப்பூரிகுடிகிழான் | maturai-y-uppūrikuṭi-kiḻāṉ n. <>id.+. Father of Uruttira-caṉmaṉ; உருத்திரசன்மனின் தந்தை. (இறை, 1, பக். 4.) |
| மதுரைவீரன் | maturai-vīraṉ n. <>id.+. A village deity; ஒரு கிராமதேவதை. Loc. |
| மதுரோதகம் | maturōtakam n. <>madhurōdaka. Sea of fresh-water. See நன்னீர்க்கடல். (யாழ். அக.) |
| மதுரோதயவள நாடு | maturōtaya-vaḷanāṭu n. An ancient district in and around Koyilpaṭṭi Taluk, Tinnevelly District; திருநெல்வேலி ஜில்லா கோயில்பட்டித் தாலூகாவைச்சுற்றியுள்ள ஒரு பழந்தமிழ்நாட்டுப்பிரிவு. (I. M. P. Tn. 255.) |
| மதுலேகம் | matu-lēkam n. <>madhu-lēha. Bee; வண்டு. (யாழ். அக.) |
| மதுலேகி | matu-lēki n. <>madhu-lēhin. See மதுலேகம். (யாழ். அக.) . |
| மதுவடி - த்தல் | matu-vaṭi v. intr. <>மது+. To distil arrack; சாராயங் காய்ச்சுதல். (யாழ். அக.) |
| மதுவம் 1 | matuvam n. <>madhu. 1. Toddy; கள். (பிங்.) 2. Honey; |
| மதுவம் 2 | matuvam n. <>madhu-pa See மதுபம்1. . |
| மதுவனம் | matu-vaṉam n. <>madhu+. The pleasure-garden of Sugrīva, as abounding in honey; சுக்கிரீவனுக்குரிய ஒரு வனம். இன்று நாளையோ டழிந்தது மதுவனம் (கம்பரா. திருவடிதொ. 37). |
| மதுவீசம் | matuvīcam n. <>madhu-bīja See மதுபீசம். (மலை.) . |
| மதுனி | matuṉi n. See மதினி. Loc. . |
| மதுஸ்மிகீ | matusmikī n. <>madhu-snuhī China root. See பறங்கிச்சக்கை. (தைலவ. தைல.) |
| மதூகம் | matūkam n. <>madhūka. See மதுகம், 5. நீதிமா மதூக நிழல் (திருவாலவா. 27, 3). . |
| மதூச்சிட்டம் | matūcciṭṭam n. <>madhūcchiṣṭa. See மதுச்சிட்டம். (மலை.) . |
| மதூசம் | matūcam n. perh. மதூகம். Strychnine tree. See எட்டி1. (சங். அக.) |
| மதூத்தம் | matūttam n. Iron wood of Ceylon. See சிறுநாகப்பூ, 1. (தைலவ. தைல.) |
| மதூர்க்கல் | matūr-k-kal n. A fine black marble, used as a touchstone, as from Maddur; மதூரிற் கிடைக்கக்கூடியதும் உரைகல்லாகப் பயன்படுவதுமான ஒருவகைக் கரும்பளிங்குக்கல். (W.) |
| மதூலி | matūli n. <>madhūlī. (மலை.) 1. Mango; மாமரம். 2. Liquorice-plant. |
| மதைஇய | mataiiya adj. <>மத-. 1. Wanton, lascivious; மதர்த்த. மதைஇய நோக்கு (கலித். 131). 2. Beautiful, handsome; 3. Innocent; 4. Strong; |
| மதோமதி | matōmati n. prob. madōn-mattā. Woman in exultant or ecstatic condition; பெருங்களிப்புடையவள். மாயமதாகி மதோமதியாகும் (திருமந். 1239) |
| மதோற்கடம் | matōrkaṭam n. <>madōtkaṭa. 1. Must elephant; மதயானை. (சூடா.) 2.Head of an elephant; |
| மதோன்மத்தன் | matōṉmattaṉ n. <>madōnmatta. (சங்.அக.) 1. Man in exultant or ecstatic condition; பெருங்களிப்புடையவன். 2. Arrogant person; |
| மந்தக்குணம் | manta-k-kuṇam n. <>மந்தம்1+. 1. Sluggishness; தாமதத்தன்மை. 2. A disease due to indigestion; |
| மந்தக்கொதி | manta-k-koti n. <>id.+ A kind of disease; நோய்வகை. (யாழ். அக.) |
| மந்தகதி | manta-kati n. <>manda+. 1. Slow pace; தாமதநடை. (W.) 2. See மந்தக்குணம், 1. |
| மந்தகாசம் 1 | manta-kācam n. <>mandakāsa. 1. See மந்தாரகாசம். (M.L.) . 2. A species of consumption; |
| மந்தகாசம் 2 | manta-kācam n. <>mandahāsa. Smile, gentle laugh; புன்சிரிப்பு. Colloq. |
