Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்தி 3 | manti n. cf. மந்தினி2. Worm-killer. See ஆடு தின்னாப்பாளை. (யாழ். அக.) |
| மந்தி 4 | manti n. prob. mandin. Sun; சூரியன். எயிறுந் துண்டமும் மந்தியும் வாணியும் இழப்ப (ஞானா. 33, 6). (திருமுரு. 42, வேறுரை.) |
| மந்திக்கால் | manti-k-kāl n. A defect in cattle; மாட்டுக்குற்றவகை. (பெரியமா.) |
| மந்திட்டி | mantiṭṭi n. Munjeet. See மஞ்சிட்டி, 1. (W.) |
| மந்திப்பு | mantippu n. <>மந்தி-. (W.) 1. Dulness, sluggishness; சுருசுருப்பின்மை. 2. Indigestion; |
| மந்திமூலைத்தலைவாரை | mantimūlai-t-talaivārai n. A kind of ola head-cover; ஓலையாற் செய்த தலைப்பாவகை. (யாழ். அக.) |
| மந்திரக்கலப்பை | mantira-k-kalappai n. <>மந்திரம்1+. Bag of articles used while reciting a mantra; மந்திரசெபத்துக்குரிய பண்டம். மானுரிமடியு மந்திரக் கலப்பையும் (பெருங். உஞ்சைக். 36, 226) |
| மந்திரக்காரன் | mantira-k-kāraṉ n. <>id.+ See மந்திரவாதி. (W.) . |
| மந்திரக்கிழவர் | mantira-k-kiḷavar n. <>id.+. King's counsellors, ministers; ஆலோசனைச் சபையார் ஆணையான். . தன் மந்திரக்கிழவரை வருகென் றேவினான் (கம்பரா. அயோத். மந்திர. 4) |
| மந்திரக்கூறை | mantira-k-kūṟai n. <>id.+. Consecrated garment, silk or other, ceremonially pure for wearing during pūjā. பூசைப்பட்டு. (W.) |
| மந்திரக்கோட்டி | mantira-k-kōṭṭi n. <>id.+. Council hall; ஆலோசனைசெய்யும் சபை. மனமுணக்கிளந்த மந்திரக்கோட்டியுள் (பெருங். உஞ்சைக். 36, 277). |
| மந்திரக்கோடி | mantira-k-kōṭi n. <>id.+. The wedding cloth given to a bride, as consecrated with mantras; மந்திராசீர்வாதங்களோடு மணமகள் பெறும் கூறைப் புடைவை. மந்திரக்கோடி யுடுத்தி (திவ். நாய்ச். 6, 3) |
| மந்திரகலை | mantira-kalai n. <>id.+. See மந்திரசாத்திரம். மந்திரகலைகண் மற்றைத் தந்திரகலை வான்வேதம் (தணிகைப்பு. நந்தியு. 153). . |
| மந்திரகாவி | mantira-kāvi n. <>id.+. Cloth dyed with red ochre and worn by ascetics; செங்காவி தோய்த்த சன்னியாசவுடை. (W.) |
| மந்திரகாஷாயம் | mantira-kāṣāyam n. <>id.+ 1. See மந்திரகாவி. (W.) . 2. Consecration of a Hindu monk with mantras, after giving him a salmon-coloured cloth; |
| மந்திரகூர்மை | mantira-kūrmai n. Rocksalt; இந்துப்பு. (W.) |
| மந்திரச்சுற்றம் | mantira-c-cuṟṟam n. <>மந்திரம்1+. See மந்திரக்கிழவர். மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி (மணி.28, 184) . |
| மந்திரசஞ்சீவி | mantira-cacīvi n. Cochineal insect. See இந்திரகோபம். (யாழ். அக.) |
| மந்திரசத்தி | mantira-catti n. <>mantra+šakti+. 1.The strength of a king due to the deliberative capacity of his ministers; அமைச்சரின் சூழ்ச்சி வன்மையால் அரசர்க்கு உண்டாம் ஆற்றல். 2. Power of a mantra; |
| மந்திரசாத்திரம் | mantira-cāttiram n. <>id.+. 1. See மந்திரவித்தை, 1. . 2. Treatise on mantras; |
| மந்திரசாதகர் | mantira-cātakar n. <>id.+sādhaka. Those who have acquired supernatural power by means of mantras; மந்திரவுருவேற்றிச் சித்திபெற்றவர் மந்திர சாதகாரான பைரவவேஷதாரிகள் (தக்கயாகப், 51, உரை) |
| மந்திரசாலை | mantira-cālai n. <>id.+. King's deliberative assembly; மந்திரைகளுடன் ஆலோசனை செய்யும் தனிமண்டபம். அரசவைவிடுத்த வேந்தன். . மாடக்கோயில் மந்திரசாலை சேர்ந்தான் (சூளா. குமார. 41). |
| மந்திரசித்தி | mantira-citti n. <>id.+. Supernatural power acquired by means of mantras; மந்திரவுருவேற்றிப் பெற்ற பேறு. ஐயன் மந்திர சித்தியன்ன சிலைத்தொழில் (கம்பரா. அதிகா. 208). |
| மந்திரசுத்தி | mantira-citti n. <>id.+. (šaiva.) Ceremonial purification by sprinkling water consecrated by mantra, one of pacacutti, q.v.; பஞ்சசுத்திகளுள் மந்திரநீராற் சுத்தமாக்கும் கிரியை. (W.) |
| மந்திரஞ்செபி - த்தல் | mantira-cepi- v. intr. <>id.+. To recite or repeat mantra; மந்திரத்தை உருவேற்றுதல். (W.) |
| மந்திரத்துணைவர் | mantira-t-tuṇaivar n. <>id.+. See மந்திரக்கிழவர். மைத்துன மன்னாரு மந்திரத்துணைவரும் (பெருங். உஞ்சைக். 38, 132). . |
