Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்திரமூர்த்தி | mantira-mūrtti n. <>id.+. 1. God, as embodied in a mantra; மந்திரவடிவமான கடவுள். அதிதேவதையுமாய் மந்திரமூர்த்தியுமாய் ஒங்காரமாயே நின்று (திருக்களிற்றுப். 25, உரை). 2. See மந்திரநாயகன். (யாழ்.அக.) Loc. 3. See மந்திரவாதி, 1. Loc. |
| மந்திரமைந்து | mantiram-aintu n. <>id.+. (Jaina.) A mantra of five letters. See பஞ்சநமஸ்காரம். மந்திரமைந்துமாதோ அதன் செவிச்செப்புகின்றான் (சீவக. 945). |
| மந்திரயாகம் | mantira-yākam n. <>id.+. Reciting of a mantra, considered a form of sacrifice. See செபயாகம். (சிவதரு. ஐவகை. 2, உரை.) |
| மந்திரயோனி | mantira-yōṉi n. <>id.+ See சுத்தமாயை. (சி.சி.1, 58 மறைஞா.) . |
| மந்திரர் | mantirar n. <>id. King's ministers; அமைச்சர். (சூடா.) |
| மந்திரவாதம் | mantira-vātam n. <>mantra-vāda. 1. Uttering mantras; மந்திரஞ்செபிக்கை. 2. A religious system that holds mantras to be the Supreme Deity; |
| மந்திரவாதி | mantira-vāti n. <>mantravādin. 1. Conjurer, sorcerer, wizard, diviner; juggler, magician, one who practises legerdemain; மந்திரச்சித்தியால் பேயோட்டுதல் முதலியன செய்பவன். பேயகன்று குடிபோக வருள்செயொரு மந்திரவாதியாகி (சிவப். பிர. சிவஞா. பிள். வாரானை. 2). 2. Follower of the mantiravātam religion; |
| மந்திரவாள் | mantira-vāḷ n. <>மந்திரம்1+. 1. Magical sword; மந்திரசக்திவாய்ந்த வாள். (W.) 2. Sword of royalty; |
| மந்திரவாளி | mantira-v-āḷi n. <>id.+. See மந்திரவாதி, 1. (W.) . |
| மந்திரவித்தை | mantira-vittai n. <>id.+. 1. Science of mantras; மந்திரங்களைப் பற்றிய வித்தை. 2. Conjuration; 3. See மந்திரோபாசனை. (யாழ்.அக.) |
| மந்திரவிதி | mantira-viti n. <>id.+. Rules for the use of mantras; மந்திரமுபயோகிக்கும் முறை மந்திரவிதியின் மரபுளி வழாஅது (திருமுரு. 95). |
| மந்திரவீதி | mantira-vīti n. <>மந்திரம்2+. Street surrounding a temple; மாடவீதி. துறக்க மந்திர வீதியு நான்கெனத் தொகுத்தார் (உபதேசகா. சிவபுண். 140). |
| மந்திரவோலை | mantira-v-ōlai n. prob. மந்திரம்1+. Royal command in writing; அரசன் திருமுகம். மந்திர வோலை போக்கிய வண்ணமும் (பெருங். மகத. 25, 39). |
| மந்திரஸ்தம்பம் | mantira-stampam n. <>mantra+. Post set up with incantations as an antidote for venomous bites or for magical purposes; விஷமுதலியவற்றித் தீர்க்க மந்திரத்துடன் நாட்டப்பட்ட தம்பம். (W.) |
| மந்திரஸ்தாபனம் | mantira-stāpaṉam n. <>id.+. Inscribing mantras in magical diagrams; சக்கரங்களில் மந்திரங்களை வரைவகை. (W.) |
| மந்திரஸ்தாயி | mantira-stāyi n. <>mandra+. (Mus.) The octave next below the middle octave; மத்தியஸ்தாயியின் கீழுள்ள இசைச்சுரவகை. |
| மந்திரஸ்நானம் | mantira-snāṉam n. <>mantra+. Purification by sprinkling a few drops of water on the head with appropriate mantras, one of seven kinds of snāṉam, q.v.; ஸ்நானம் எழுவகையு ளொன்றான மந்திரநீர்ப் புரோட்சணம். (W.) |
| மந்திராசரணை | mantirācaraṇai n. <>id.+ā-caraṇa. Reciting mantras; மந்திரஞ் செபிக்கை. |
| மந்திராட்சதை | mantirāṭcatai n. <>id.+akṣata. Rice mixed with turmeric and given by Brahmins, with appropriate mantras, in blessing; மந்திரபூர்வமாக ஆசீர்வதித்துப் பிராமணர் கொடுக்கும் அட்சதை. (W.) |
| மந்திராத்துவா | mantirāttuvā n. <>id.+ adhvā. (šaiva.) A path to liberation in the form of mantras, one of six attuvā, q.v.; அத்துவா ஆறனுள் மந்திரவடிவமானது (சி. சி. 8, 6, மறைஞா.) |
| மந்திராயுதம் | mantirāyutam n. <>id.+.ā-yudha. Weapon with magical powers; மந்திர சக்தியுள்ள ஆயுதம். |
| மந்திராலயம் | mantirālayam n. <>id.+.ā-laya. Consistory; கிறிஸ்தவக் குருமார் கூடும் சபை. Chr. (கட்டிட. நாமா. 5.) |
| மந்திராலோசனை | mantirālocaṉai n. <>id.+a-lōcanā. Deliberation of a king with his ministers; அரசன் மந்திரிகளுடன் ஆராய்கை. |
| மந்திரி 1 - த்தல் | mantiri- 11 v. <>mantra. tr. 1.To keep spell-bound, control or enchant by mantras; மந்திரசக்தியால் அடக்குதல். 2. To consecrate with mantras; 3. To recite mystic formulas or mantras in worship and to meditate; 4. To consult, take counsel; 1. To utter mantras for effecting cure, etc.; 2. To give evil advice; |
