Word |
English & Tamil Meaning |
|---|---|
| மந்திரத்தோழி | mantira-t-tōḷi n. <>id.+. Confidential maid of a lady; தலைவியின் அந்தரங்கமான பாங்கி. யாப்பியாயினியெனு மந்திரத்தோழியொடு (பெருங். மகத. 9, 54). |
| மந்திரதந்திரம் | mantira-tantiram n. <>id.+. Mantras and rituals; மந்திரமும் கிரியையும் மந்திர தந்திர வழுக்கள் வந்தவோ (பிரபுலிங். மாயைகோலாகல. 16). |
| மந்திரதாரணை | mantira-tāraṇai n. <>id.+. The art of worshipping šiva by means of the five-lettered incantation, Nama-c-civāya; பஞ்சாட்சரத்தின்மூலம் சிவபிரானைத் தியானிப்பதாகியவித்தை. (W.) |
| மந்திரதேவதை | mantira-tēvatai n. <>id.+. See மந்திரநாயகன்.Colloq. . |
| மந்திரநாயகன் | mantira-nāyakaṉ n. <>id.+. The deity propitiated by a particular mantra; மந்திரத்தின் அதிஷ்டான தெய்வம். (யாழ். அக.) |
| மந்திரப்பிரயோகம் | mantira-p-pirayōkam n. <>id.+. Making use of mantra; மந்திரத்தை உபயோகிக்கை. (W.) |
| மந்திரப்பொருத்தம் | mantira-p-poruttam n. <>id.+. Appositeness of the mantra of the deity invoked to the person invoking; செபிப்போனுக்கும் செபிக்கப்படும் மந்திரத்திற்குமுள்ள பொருத்தம். (யாழ். அக.) |
| மந்திரபசு | mantira-pacu n. <>mandira+pašu. Cat; பூனை. (யாழ். அக.) |
| மந்திரபதம் | mantira-patam n. <>mantra+. Office of a minister; மந்திரிபதவி. உத்தரமந்திரபதமெய்தின (செந். iv, 337). |
| மந்திரபாரகர் | mantira-pārakar n. <>id.+. Experienced counsellors; மந்திராலோசனையில் தேர்ந்தவர். தொண்டைமான்முதன் மந்திரபாரகர் சூழ்ந்து தன்கழல் குடியிருக்கவே (கலித். 314). |
| மந்திரபுட்பம் | mantira-puṭpam n. <>id.+. See மந்திரபுஷ்பம். மனுவைச் சொல்லி மந்திரபுட்பஞ்சாத்தி (விநாயகபு. 39,72). . |
| மந்திரபுஷ்பம் | mantira-puṣpam n. <>id.+. Flowers offered with mantras, in acali; அஞ்சலியிற் கொண்டு மந்திரமோதிச் சமர்ப்பிக்கப்படும் புஷ்பம். |
| மந்திரம் 1 | mantiram n. <>mantra. 1. Deliberation, consultation; ஆலோசனை. (பிங்.) 2. Royal council of advisers; 3. Thought, opinion, idea; 4. Vēdic hymn, sacrificial formula, portion of the Vēda containing the texts called Rg or Yajus or Sāman; 5. Sacred formula of invocation of a deity, as pacākṣara, aṣṭākṣara, etc.; 6. See மந்திரிகை. (யாழ். அக.) 7. A treatise by Tirumūlar. See திருமந்திரம். போக மிகு மந்திரமா மறையொன்று (திருமுறைகண். 26). 8. Magical formula, incantation, charm, spell; |
| மந்திரம் 2 | mantiram n. <>mandira. 1. House; வீடு. மந்திரம் பலகடந்து (கம்பரா. ஊர்தேடு. 138). 2. King's residence; 3. Temple; 4. Public hall; 5. Dwelling place; 6. Den; 7. Giving a place to dwell in, one of 14 layā-virutti, q.v.; |
| மந்திரம் 3 | mantiram n. <>mandira. 1. Stable for horses; குதிரைச்சாலை. (பிங்.) 2. Herd of horses; |
| மந்திரம் 4 | mantiram n. <>madirā. Toddy; கள். (பிங்.) |
| மந்திரம் 5 | mantiram n. <>mandra. A kind of elephant; யானை வகை. (சுக்கிரநீதி, 307). |
| மந்திரம் 6 | mantiram n. <>மந்திரம் 1. See மந்திரம் 1, 2. மந்திர மாமலை மேயாய் போற்றி (திருவாச. 4, 204). . |
| மந்திரம்பண்ணு - தல் | mantiram-paṇṇu- v. intr. <>மந்திரம்1+. 1. To practise sorcery; பில்லி சூனியம் வைத்தல். 2. See மந்திரஞ்செபி-. (W.) |
| மந்திரமாக்கள் | mantira-mākkaḷ n. <>id.+ See மந்திரக்கிழவர் மந்திரமாக்கள் தெளிந்து செய்கென (பெருங்.மகத.19,108). . |
| மந்திரமாடம் | mantira-mātam n. <>id.+ Hall where king's counsellors hold their deliberations; ஆலோசனை செய்யும் மண்டபம் மந்திரமாடத்து மறைந்தன னிருந்து (பெருங். இலாவாண. . 9, 35). |
| மந்திரமாலிகை | mantira-mālikai n. <>id.+. Tirumantiram. See திருமந்திரம். மந்திரமாலிகை சொல்லு மியமநியமாதியா மார்க்கத்தில் (தாயு. தேசோ. 1). . |
| மந்திரமாலை | mantira-mālai n. <>id.+. See மந்திரமாலிகை. நற்றிரு மந்திரமாலை. என வெடுத்து (பெரியபு. திருமூல.26). . |
