Word |
English & Tamil Meaning |
|---|---|
| மயக்கமின்மை | mayakkam-iṉmai n. <>மயக்கம்+. Clarity of mental vision, one of aṟattuṟuppu, q.v.; அறத்துறுப்பினுள் ஒன்றானமனத்தெளிவு. (சூடா.) |
| மயக்கரவம் | mayakkaravam n. <>மயங்கு+அரவம். See மயக்கரா. (யாழ். அக.) . |
| மயக்கரா | mayakkarā n. <>id.+அரா. A kind of serpent ; ஒருவகைப் பாம்பு. (நாமதீப. 257.) |
| மயக்கவணி | mayakka-v-aṇi n. <>மயக்கம்+. (Rhet.) A figure of speech in which one object is mistaken for another; ஒற்றுமைபற்றி ஒருபொருளை வேறொரு பொருளென மயங்குவதாகக் கூறும் அணி. (அணியி. 6.) |
| மயக்கவிதி | mayakka-viti n. <>id.+. (Gram.) The rule determining the sequence of consonants in word-formation; தமிழ்ச் சொல்லில் இன்னமெய்யெழுத்து இன்னமெய்யெழுத்தோடு சேர்ந்து வருமென்பதுபற்றிய விதி. (நன். எழுத். 229, விருத்.) |
| மயக்கவொழிப்பு | mayakka-v-oḻippu n. <>id.+. (Rhet.) A figure of speech in which the confusion between two things is removed by pointing out the difference; ஒருபொருளை மற்றொரு பொருளென மயங்குவதை யொழித்தற்கு வேற்றுமை கூறித் தெரிவிக்கும் அணி. (யாழ்.அக.) |
| மயக்கி | mayakki n. Liquorice plant. See அதிமதுரம்2, 1. (சங்.அக.) . |
| மயக்கிடை | mayakkiṭai n. <>மயக்கு-+ இடு-. See மயக்கம். (யாழ். அக.) . |
| மயக்கிமாலை | mayākki-mālai n. <>மயங்கு-+. Artful woman; தந்திரக்காரி. Nā. |
| மயக்கு - தல் | mayakku- 5 v. tr. Caus of மயங்கு-. 1. To bewilder, confuse; மனங்குழம்பச் செய்தல். குறளைபேசி மயக்கி விடினும் (நாலடி, 189). 2. To puzzle, mystify; to make one wonder; 3. To fascinate, allure, charm; 4. To mix up; 5. To unite, join, as a wick with the oil in a can 6. To ruin, destroy; 7. To disturb, unsettle; 8. To clear one's misunderstanding, as in sulks; 9. To make one swoon; |
| மயக்கு 1 | mayakku n. <>மயங்கு-. 1. See மயக்கம். கனா மயக்குற்றேன் (மணி. 11, 104). . 2. Fighting; |
| மயக்கு 2 | mayakku n. <>மயங்கு-. Act of making one wonder; பிரமிக்கச் செய்யுஞ் செயல். மாயமயக்கு மயக்கே (திவ். திருவாய். 8, 7, 3). |
| மயக்குச்சர்ப்பம் | mayakku-c-carppam n. <>மயங்கு2+. A poisonous serpent, basilisk. See திட்டிவிடம். (சீவரட்.) . |
| மயங்கக்கூறல் | mayaṅka-k-kūṟal n. <>மயங்கு-+. See மயங்கவைத்தல். (தொல். பொ.664.) . |
| மயங்கவைத்தல் | mayaṅka-vaittal n. <>id.+. Obscurity, in literary composition, one of ten nūṟ-kuṟṟam, q.v.; நூற்குற்றம் பத்தனூள் பொருள் இன்னது என்று துணியக்கூடாமற் கூறும் குற்றம். (நன். பொது.12.) |
| மயங்கிசைக்கொச்சகம் | mayaṅkicai-k-koccakam n. <>id.+. (Pros.) A species of koccaka-k-kali verse; தரவு முதலிய உறுப்புக்கள் மயங்கியும் மிக்குங் குறைந்தும் வரும் கொச்சகக்கலி. (வீரசோ. யாப். 12, உரை.) |
| மயங்கியோர் | mayaṅkiyōr n. <>id. Persons suffering from mental aberration; அறிவு திரிந்தோர் மாலை யென்மனார் மயங்கியோரே (கலித்.119). |
| மயங்கு - தல் | mayaṅku- 5 v. intr. 1. To be confused, bewildered; மருளுதல். 2. To be charmed, allured; 3. To be intoxicated; 4. To be changed, as in one's mind or body; 5. To be ruined, desolated; 6. To be distressed; 7. To be disturbed, tossed about, as sea; 8. To be in doubt; 9. To be overwhelmed with anxiety; 10. To be mixed up; 11. To resemble; 12. To be crowded together; 13. To engage in a fight; 14. To lose one's senses; 15. To be in a state of disorder or confusion; 16. To become unconscious; |
