Word |
English & Tamil Meaning |
|---|---|
| மயிந்தன் 1 | mayintaṉ n. A kind of fish; மீன்வகை. குறவை வாளையுளுவை மயிந்தன் (பறாளை. பள்ளு.74) . |
| மயிந்தன் 2 | mayintaṉ n. <>மைந்தன். See மைந்தன். ஆலஞ்சேரி மயிந்தன் (தொல். பொ. 30, உரை). . |
| மயிந்து - தல் | mayintu- 5 v. intr. To sneak, slink away; பதுங்குதல். (J.) |
| மயிர் | mayir n. cf. šmašru. 1. Hair of human beings or animals; fur, fleece; உரோமம். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா (குறள், 964). 2. Down or birds; 3. Tail of the yak; |
| மயிர்க்கட்டு | mayir-k-kaṭṭu, n. <>மயிர்+. 1. Lock of hair, hair tied up in a knot; தலைமயிர் முடிச்சு. 2. Turban; |
| மயிர்க்கடை | mayir-k-kaṭai n. <>id.+. See மயிர்க்கிடை. (யாழ். அக.) . |
| மயிர்க்கண் | mayir-k-kaṇ n. <>id.+. See மயிர்க்கால். (W.) . |
| மயிர்க்கண்முரசம் | mayir-k-kaṇ-muracam n. <>id.+. Drum made of raw hide of a bull that has killed a tiger; புலியைக் கொன்ற ஆனேறு இறந்துழி அதன் உரிவையை மயிர் சீவாமற் போர்த்த வீரமுரசம். மயிர்க்கண் முரசொடு வான்பலி யூட்டி (சிலப், 5, 88) . |
| மயிர்க்கத்தி | mayir-k-katti n. <>id.+. Razor; க்ஷவரக்கத்தி. (சீவக. 2496, உரை.) |
| மயிர்க்கம்பி | mayir-k-kampi n. perh. id.+. Fruit of thorn-apple; ஊமத்தங்காய். (சங். அக.) |
| மயிர்க்கருவி | mayir-k-karuvi n. <>id.+. Brush; அழுக்கெடுத்தற்குதவும் மயிர்கோத்த கருவி. (W.) |
| மயிர்க்காம்பெறி - தல் | mayir-k-kāmpeṟi- v. intr. <>id.+ காம்பு+. See மயிர்பொடி-. (W.) . |
| மயிர்க்கால் | mayir-k-kāl n. <>id.+. Pore of the skin at the root of hair; உரோமத் துவாரம். அமுதம் மயிர்க்காறோறுந் தேக்கிடச் செய்தனன் (திருவாச. 3, 10). |
| மயிர்க்கிடுகு | mayir-k-kiṭuku, n. <>id.+. Shield covered with raw hairy hide; மயிர் செறிந்த தோலால் மூடப்பட்ட கேடகவகை (சீவக. 2218.) |
| மயிர்க்கிடை | mayir-k-kiṭai n. <>id.+. Hair's breadth; உரோமத்தின் அகலவளவு. (W.) |
| மயிர்க்கிளர்ச்சி | mayir-k-kiḷarcci n. <>id.+. See மயிர்க்கூச்சு. (W.) . |
| மயிர்க்குச்சு 1 | mayir-k-kuccu n. <>id.+ கூசு-. See மயிர்க்கூச்சு. (குருபரம். 103.) . |
| மயிர்க்குச்சு 2 | mayir-k-kuccu n. <>id.+ guccha. 1. Hair pencil for painting; துகிலிகை. 2. Hairpin; 3. A headornament with pendants; |
| மயிர்க்குச்செறி - தல் | mayir-k-kucceṟi- v. intr. <>மயிர்க்குச்சு1+. See மயிர்பொடி-. மயிர்க்குச்செறிய ஆனந்தித்து (குருபரம். 103). . |
| மயிர்க்குட்டம் | mayir-k-kuṭṭam n. <>மயிர்+. A disease which makes the hair fall off; மயிர் உதிரச்செய்யும் நோய்வகை. (யாழ். அக.) |
| மயிர்க்குட்டி | mayir-k-kuṭṭi n. <>id.+. Caterpillar; கம்பளிப்பூச்சி. மயிர்க்குட்டிமேய வண்டுருவாய் (தணிகைப்பு. நந்தியுப. 30). |
| மயிர்க்குடி | mayir-k-kuṭi n. <>id.+. Thick growth of tresses or hair; மயிர்ச்செறிவு. மயிர்க் குடியழகாலேயாதல் (ஈடு, அவ. ஜீ.). |
| மயிர்க்குந்தம் | mayir-k-kuntam n. <>id.+. A kind of medicine; மருந்துவகை. (யாழ். அக.) |
| மயிர்க்குரு | mayir-k-kuru n. <>id.+. Pimple at the root of hair; boil protruding from the follicles; உரோமத் துவாரத்துத் தோன்றியபுண். (யாழ். அக.) |
| மயிர்க்குழற்சி | mayir-k-kuḻaṟci n. <>id.+. 1. Curling of hair; உரோமக்குழைவு. (பிங்.) 2. See மயிர்க்கூச்சு. (யாழ். அக.) |
| மயிர்க்கூச்சு | mayir-k-kūccu n. <>id.+. Rising of the hairs of the body, horripillation; புளகம். மயிர்க்கூச்சுமறா (திவ். பெரியாழ். 5, 3, 5). |
| மயிர்க்கேடகம் | mayir-k-kēṭakam n. <>id.+. See மயிர்க்கிடுகு. போர்மயிர்க் கேடகம் புளகத் தோற்பரம் (சீவக. 2218). . |
| மயிர்க்கொடி | mayir-k-koṭi n. <>id.+. Switch; தலைமயிரோடு சேர்த்துப் பின்னுதற்கு உரியசவரி. Tinn. |
| மயிர்க்கொழுந்து | mayir-k-koḻuntu n. prob. id.+. cf. மருக்கொழுந்து. Southern wood; மருக்கொழுந்து. Loc. |
| மயிர்க்கொன்றை | mayir-k-koṉṟai n. See மயிர்கொன்றை, 1, 2. (L.) . |
| மயிர்க்கோரை | mayir-k-kōrai n. prob. மயிர்+. A hairy sedge; கோரைவகை. (யாழ். அக.) |
