Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மயிலடி 2 | mayilaṭi n. prob. mahiṣī. Buffalo; எருமை. (சங். அக.)  | 
| மயிலடிக்குருந்து | mayilaṭi-k-kuruntu n. <>மயிலடி1+. False peacock's foot tree, s. tr., Nicbuhvira linearis; ஒருவகைச் சிறுமரம். (L.)  | 
| மயிலடிநொச்சி | mayilaṭi-nocci n. <>id.+. Tall chaste-tree. See காட்டுநொச்சி, 1. (L.)  | 
| மயிலம் 1 | mayilam n. <>மயில். 1. Peacockfeather; மயிலிறகு. (யாழ். அக.) 2. A shrine sacred to Skanda in the South Arcot District;  | 
| மயிலம் 2 | mayilam n. 1.Indian acalypha. See குப்பைமேனி. (மலை.) 2. A kind of coarse cotton;  | 
| மயிலாடுதுறை | mayilāṭu-tuṟai n. <>மயில்+ஆடு-+. Mayavaram; மாயூரம். (வீரசோ. தொகை. 4, உரை.)  | 
| மயிலாப்பில் | mayilāppil n. See மயிலாப்பூர். (I. M. P. Cg. 1058.) .  | 
| மயிலாப்பு | mayilāppu n. See மயிலாப்பூர். மயிலாப்பிலுள்ளார் (தேவா. 14, 1). .  | 
| மயிலாப்பூர் | mayilāppūr n. <>மயில்+. cf. mayūra-purī. Mylapore, a suburb of Madras containing a šiva shrine sung by St. Campantar, reputed to be the place where St. Vāyilār was born and St. Tiruvaḷḷuvar lived; also reputed to be the principal scene of the labours of St. Thomas; திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாராற் பாடப்பெற்றதும், வாயிலார்நாயனார் பிறந்ததும், திருவள்ளுவர் வாழ்ந்ததும், அர்ச். தோமையார் கிறிஸ்தவமதப் பிரசாரஞ்செய்த இடமாகக் கருதப்படுவதும், சென்னையின் பகுதியுமாகிய ஓர் ஊர்.  | 
| மயிலாப்பூர்வெட்டு | mayilāppūr-veṭṭu n. prob. மயிலாப்பூர். An ancient coin; நாணயவகை. (பணவிடு. 141.)  | 
| மயிலாபுரி | mayilā-puri n. <>mayūra-purī. See மயிலாப்பூர். (பெரியபு. திருக்குறிப். 40.) .  | 
| மயிலார் | mayilār n. Loc. 1. Ceremonial fast observed by maidens with a view to secure suitable husbands; கன்னிப் பெண்கள் நோற்கும் சடங்குவகை. 2. A deity worshipped by washermen after the poṅkal festival;  | 
| மயிலாளி | mayil-āḷi n. <>மயில்+. Skanda, as riding a peacock; [மயிலை ஏறியாள்வோன்] முருகக்கடவுள். (திவா.)  | 
| மயிலி | mayili n. <>id. Woman, as resembling a peafowl; மயில்போன்ற பெண்கானமலைக் குறவஞ்சிகள் மயிலி (குற்றா. குற. 76, 2).  | 
| மயிலிகம் | mayilikam n. See மருளுமத்தை. (சங். அக.) .  | 
| மயிலியம் | mayiliyam n. Brazil cotton. See செம்பஞ்சு, 1. (மலை.)  | 
| மயிலியல் | mayil-iyal n. <>மயில்+. Woman having the grace of a peafowl; மயில்போலுஞ் சாயலுள்ள பெண். மான்ற மாலை மயிலியல் வருத்த (பு. வெ. 12, இருபாற். 4) .  | 
| மயிலுள்ளான் | mayil-uḷḷāṉ n. prob. id.+. Painted snipe, Rhynchaea bengalensis; சிவந்த மூக்குள்ள உள்ளான்வகை. (M. M. 611.)  | 
| மயிலூர்தி | mayil-ūrti n. <>id.+. See மயிலேறும் பெருமாள், 1. (உரி. நி.) .  | 
| மயிலெண்ணெய் | mayil-eṇṇey n. <>id.+. [M. mayilenna.] Medicinal oil from the fat of peafowl; மயிலின் கொழுப்பிலிருந்து எடுக்கும் மருந்தெண்ணெய்வகை. (W.)  | 
| மயிலெள் | mayil-eḷ n. prob. id.+. A species of sesame; ஒருவகை எள். (சங். அக.)  | 
| மயிலேபம் | mayilēpam n. Cubeb. See தக்கோலம், 1. (சங். அக.) .  | 
| மயிலேறும்பெருமாள் | mayil-ēṟumperumāḷ n. <>மயில்+. 1. Skanda, as riding a peacock; [மயில் ஏறிச்செல்லும் கடவுள்] முருக்கடவுள். 2. See மயிலேறும் பெருமாள்பிள்ளை. மயிலேறும் பெருமாண் மகிபதி (இலக். கொத். பாயி.).  | 
| மயிலேறும்பெருமாள்பிள்ளை | mayilēṟum-perumāḷ-piḷḷai n. <>மயிலேறும்பெருமாள்+. The teacher of Cuvāmināta Tēcikar and commentator of the first 37 stanzas of Kallāṭam, 17th c.; சுவாமிநாததேசிகரின் ஆசிரியரும் கல்லாடத்தின் முதன்முப்பத்தேழு பாடல்கட்கு உரையிட்டவருமான புலவர்.  | 
| மயிலை 1 | mayilai n. 1. Fish; மீன். (பிங்.) மயிலை தீஞ்சுவை யுப்பிற் சிவணாதாங்கு (ஞானா. 37, 11). 2. Pisces of the Zodiac; 3. Tuscan jasmine. See இருவாட்சி. (சிலப். 5, 191.) 4. Scarlet ixora; 5. Tall chaste tree. See காட்டுநொச்சி, 1. (L.) 6. Peacock's-foot tree, 1. tr., Vitex alata;  | 
| மயிலை 2 | mayilai n. <>மயிலாப்பூர். See மயிலாப்பூர். மயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே (திவ். பெரியதி. 2, 3, 2). .  | 
