Word |
English & Tamil Meaning |
|---|---|
| மயு | mayu n. <>mayu. Kinnara; கின்னரன். (சங். அக.) |
| மயுகம் | mayukam n. See மயூகம். (சங். அக.) . |
| மயுரம் | mayuram n. prob. mayūra. Thornapple. See ஊமத்தை, 1. (பரி. அக.) . |
| மயுராசன் | mayurācaṉ n. <>mayu-rāja. Kubēra, as lord of Kinnaras; குபேரன். (யாழ்.அக.) |
| மயூகம் | mayūkam n. <>mayūkha. 1. Ray; கிரணம். 2. Flame; 3. Light; 4. Beauty; 5. Shadow of gnomon; |
| மயூரக்கிரீவம் | mayūra-k-kirīvam n. <>mayūra-grīva. See மயிற்றுத்தம். (சங். அக.) . |
| மயூரகதி | mayūra-kati n. <>mayūra+. A pace of horse, resembling that of a peacock, one of five acuva-kati, q.v.; அசுவகதி ஐந்தனுள் மயில் நடைபோன்ற கதி. (சங். அக.) |
| மயூரகம் | mayūrakam n. <>mayūraka. 1. Peacock; மயில். (சங். அக.) 2. See மயிற்றுத்தம். (சங். அக.) 3. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மூ. அ.) 4. A sticky plant that grows best in sandy places. See நாய்வேளை. (சங். அக.) 5. Thorn-apple. See ஊமத்தை, 1. (சங். அக.) |
| மயூரநிர்த்தம் | mayūranirttam n. <>mayūra+. Nyāya of peacock's dance, which illustrates the ignoring of one principle in the attempt to establish another; ஒன்றை நாட்டும்வழி மற்றொன்று விட்டுப் போவதைக் காட்டும் ஒருவகை நியாயம். (சிவசம. பக். 40.) |
| மயூரபதகம் | mayūra-patakam n. <>mayūra-padaka. See மயூரபதம். (யாழ். அக.) . |
| மயூரபதம் | mayūra-patam n. <>mayūra+. (Erot.) Nail-mark resembling a peacock's foot, made on a woman's body by her lover in sexual union, one of six naka-k-kuṟi, q.v.; கலவியிடையே ஆடவர் மகளிரவயவத்தில் பதிக்கும் நகக்குறி ஆறனுள் மயிலினடிபோன்ற அடையாளம். (கொக்கோ. 5, 60.) |
| மயூரம் | mayūram n. <>mayūra. 1. Peacock; மயில்.(சூடா.) வழிக்குத்துணை வடிவேலும்... மயூரமுமே (கந்தரலங். 70.) 2. See மயூராசனம். மயூர முழங்கை யிரண்டு முந்திப்புறத்தழுந்தப் புவிகை யூன்றி யகமொருமித் தடிநீட்டித் தலைநிமிர்த்து வைகல் (பிரபோத. 44, 10). 3. See மயூரகதி. 4. See மயிற்கொன்றை, 1, 2. (மலை.) 5. See மயிலடிக்குருந்து. (L.) 6. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) 7. Black henbane, Hyoscianus niger; |
| மயூராசனம் | mayūrācaṉam n. <>id.+ āsana. (Yōga.) Peacock-posture which consists in standing upon bent hands, the navel resting on both the elbows, the legs being stretched horizontally behind and the head uplifted, one of nine ācaṉam, q.v.; ஆசனம் ஒன்பதனுள் இரண்டு முழங்கையும் வயிற்றிலே பட ஊன்றிக் கால்களை நிமிரவிட்டுத் தலைநிமிர்த்து நிற்கும் ஆசனவகை. (தத்துவப்.107, உரை.) |
| மயூராரி | mayūrāri n. <>mayūrāri. 1. Lizard; பல்லி. (சங். அக.) 2. See மயில்விரோதி. (W.) |
| மயேச்சுரன் | mayēccuraṉ n. <>mahēšvara. 1. šiva; சிவபிரான்; 2. The author of a treatise on prosody; |
| மயேசன் | mayēcaṉ n. <>mahēša. See மயேச்சுரன். (யாழ்.அக) . |
| மயேசுரன் | mayēcuraṉ n. See மயேச்சுரன்,1. . |
| மயேசுவரன் | mayēcuvaraṉ n. See மயேச்சுரன்,1. . |
| மயேசுவரி | mayēcuvari n. <>mahēšvarī. Pārvatī, šiva's consort; பார்வதி. (யாழ். அக) |
| மயேடம் | mayēṭam n. cf. மயிலம்2. Gum of the silk-cotton tree; இலவம்பிசின் (பரி.அக) |
| மயேந்த்ரசாலம் | mayēntra-cālam n. <>mahēndra-jāla. Art of performing great miracles; See மகேந்திரசாலம். மயேந்த்ர சாலம் மிகு மிந்த்ரசால முதலான செப்பிது வித்தைகள் (திருவேங். சத. 66) |
| மயேந்திரம் | mayēntiram n. <>mahēndra Mt. Mahēndra. See மகேந்திரம். (சங். அக) |
| மயேனம் | mayēṉam n. Cubeb; வால்மிளகு. (சங். அக) |
| மர்க்கடகம் | markkaṭakam n. Asafoetida; பெருங்காயம். (சங். அக) |
| மர்க்கடகிசோரநியாயம் | markkaṭa-kicōra-niyāyam n. <>markaṭa + kišōra+. Nyāya of the monkey and its young, illustrating the principle of the weak adhering to the strong, as a little monkey clings to its mother; தாய்க்குரங்கை அதன் குட்டி விடாது பிடிப்பதுபோல எளியது வலியதைப் பற்றிநிற்கும் நெறி. |
