Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரக்கன்று | mara-k-kaṉṟu n. <>id.+ Young tree, sapling; இளமரம் (பிங்.) |
| மரக்கா | mara-k-kā n. <>id.+. 1. Flower garden, grove ; பூஞ்சோலை. (திவா.) இளமரக்கா முதலிய செய்தற்கும் (குறள், 385, உரை). 2. See மரக்கால், 1, 2. (W.) |
| மரக்காயர் | marakkāyar n. <>Arab. markab. [ M. marakkāyar]. 1. A Tamil-speaking mussalman tribe, usually traders; அமிழ்த்துலுக்கவகையினர். (E. T. V, 1.) 2. Boatmen; |
| மரக்காரை | marakkārai n. cf. maruvaka. Emetic-nut. See மருக்காரை. (பதார்த்த. 758.) |
| மரக்கால் | mara-k-kāl n. <>மரம் + [ M. marakkāl]. 1. A grain measure, varying in different places = 8 paṭi = 1/12 kalam = 400 cu. in., as originally made of wood; முகத்தலளவைக்கருவி வகை. (பிங்.) 2. Superficial measure = 3362 sq. ft., as requiring a marakkal of seed to sow it; 3. (Astrol.) Measure of rain for the year, determined by the ruling planet; 4. Wooden leg; 5. A dance of Viṣṇu; 6. A dance of Durgā on stilts, slaying the Asuras who attacked her assuming the shapes of reptiles, one of 11 kūttu, q.v.; 7. Saltpan; 8. The ninth nakṣatra; 9. The fifteenth nakṣatra, |
| மரக்கால்துண்டு | marakkāl-tuṇṭu n. <>மரக்கால் + Deficiency of grain on re-measurement; (R. F.); ஒருமுறை அளந்த தானியத்தைத் திரும்ப அளக்கும்போது ஏற்படும் குறைபாடு . |
| மரக்கால்வைப்பு | marakkāl-vaippu n. <>id.+ First gathering and measuring of the annual yield on the threshing-floor ; களத்திலே ஆண்டு முதலில் அறுவடையான நெல்லைக் கூட்டியளவிடுகை . Loc |
| மரக்காலாடல் | marakkāl-āṭal n. <>id.+ See மரக்கால், 6. காய்சின வவுணர் கடுந்தொழில் பொறாஅள் மாயவ ளாடிய மரக்காலாடலும் (சிலப், 6, 59). |
| மரக்காழ் | mara-k-kāḻ n.<> மரம்+. Inner core of a tree; மரவைரம். (திவா) |
| மரக்காளான் | mara-k-kāḷāṉ <>id.+ A hard fungus growing on trees; மரத்தில் முளைக்கும் காளான்வகை . (W.) |
| மரக்காற்கூட்டு | maṟakkāṟ-kūṭṭu n. <>மரக்கால் + Land held in common and enjoyed by its joint-owners dividing the produce ; விளைவைமட்டும் அளந்து பிரித்தனுபவிக்கும் பொதுநிலம் . Rd |
| மரக்காற்கூத்து | marakkāṟ-kūttu n. <>id.+ See மரக்கால், 5, 6, மன்றின்- மரக்காற் கூத்தாடினான் காணேடீ (திவ்.பெரியதி, 11, 5, 6). |
| மரக்காற்பறை | marakkāṟ-paṟai n. <>id.+ A cylindrical drum; மரக்கால் வடிவுள்ள பறைவகை |
| மரக்கானாரை | marakkāṉārai n. <>id.+ நாரை. A kind of heron; நாரைவகை (சிலப், 10, 117, உரை) |
| மரக்குரங்காடல் | marakkuraṅkāṭal n. <>மரக்குரங்கு + Boy's game in which all the players get upon a tree except one who tries to catch them when they come down ; மரத்திலேறியவர்கள் கீழிறங்கும்போது பிடிக்க முயலும் சிறுவர் விளையாட்டு . Loc |
| மரக்குரங்கு | mara-k-kuraṅku n. <>மரம்+ See மரக்குரங்காடல் . Loc . |
| மரக்கெட்டு | mara-k-keṭṭu n. <>id.+ Knot in a tree. See மரக்கணு. (யாழ். அக.) |
| மரக்கொல்லர் | mara-k-kollar n. <>id.+ Carpenters, as cutting trees and doing timber work; தச்சர். |
| மரக்கோல் | mara-k-kōl n. <>id.+ (யாழ். அக.) 1. Blunt arrow, wooden shaft of an arrow without the arrow-head; கூரில்லாத அம்பு . 2. Boatman's pole; |
| மரக்கோவை | mara-k-kōvai n. <>id.+ Boat, ship ; கப்பல். முச்சியே மரக்கோவை முயற்சியாற் கைச்சிடாது கடல்செலுங் கல்லனும் (சிவதருபாவ. 81) |
| மரகதக்குணம் | marakata-k-kuṇam n. <>மரகதம்+ The eight qualities of emerald, viz., neyttal, kiḷikkaḻuttottal, mayiṟkaḻuttottal, payiriṟ-pacuttal, poṉmai-y-uṭaṉ-pacuttal, patti-pāytal, poṉvaṇṭi-vayiṟottal, teḷital; நெய்த்தல், கிளிக்கழுத்தொத்தல், மயிற்கழுத்தொத்தல், பயிரிபசுத்தல்.பொன்மையுடன்பசுத்தல், பத்திபாய்தல் பொன்வண்டின்வயிªறுத்தல், தெளிதல் என்னும் எட்டுவகைப் பச்சையிரத்தினக் குணம். (சிலப், 14, 185, உரை). |
