Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரகதக்குற்றம் | marakata-k-kuṟṟam n. <>id.+. The eight kinds of flaws in an emerald, viz., karukal, veḷḷai, kal, maṇal, kīṟṟu, porivu, tarācam, iṟukutal; கருகல், வெள்ளை, கல், மணல், கீற்று, பொரிவு, தராசம், இறுகுதல் என்னும் எண்வகையான பச்சையிரத்தினக் குற்றம்.(சிலப். 14, 184, உரை.) |
| மரகதநாயகம் | marakata-nāyakam n. <>id.+. A toe-ring set with gems round an emerald in the centre; நடுவிர் பச்சைக்கல் வைத்திழைத்த காலாழி வகை. (சிலப், 6, 97, அரும.) |
| மரகதப்பச்சை | marakata-p-paccai n. <>id.+. A variety of green stone; நாகப்பச்சை. (யாழ். அக.) |
| மரகதபத்திரி | marakata-pattiri n. <>id.+. A prepared arsenic. See நீர்ப்பாசி, 2. (சங்.அக.) . |
| மரகதபதரி | marakata-patari n. <>id.+. See மரகதபத்திரி. (பரி.அக) . |
| மரகதம் | marakatam n. <>marakata. 1. Emerald, one of nava-maṇi, q.v.; நவமணியுளொன்றான பச்சை யிரத்தினம். மரகத மணியோடு வயிரங் குயிற்றிய (சிலப். 5, 147). 2. Green colour; |
| மரகதமேனியன் | marakata-mēṉiyaṉ n. <>மரகதம்+. Viṣṇu, as green in color; திருமால. (W.) |
| மரகதவல்லி | marakata-valli n. <>id.+. 1. The Jaina Goddess of Benevolence; தருமதேவதை. (பிங்.) 2. Pārvatī; |
| மரகதன் | marakataṉ n. <>marakata. Kubēra; குபேரன். (பிங்.) |
| மரகம் | marakam n. <>maraka. Cholera; விசபேதி. (யாழ். அக.) |
| மரங்கொத்தி | maraṅ-kotti n. <>மரம்+. Woodpecker, Picidae; பறவைவகை. மீன்கொத்திப்புள்ளு மரங்கொத்திப் பட்சியும் (குற்றா. குற, 87, 3). |
| மரச்சக்கை | mara-c-cakkai n. <>id.+. Chip; சிராய். (ஈடு, 5, 10, 11, ஜீ.) |
| மரச்சாட்டை | mara-c-cāṭṭai n. <>id.+. Ferule, little wooden pallet; மரக்கோல்வகை. (W.) |
| மரச்சிலைக்கல் | mara-c-cilai-k-kal n. prob.id.+. A fossil ammonite. See கண்டகிச்சிலை. (யாழ். அக.) . |
| மரச்சீனி | mara-c-cīṉi n. <>id.+ See மரவள்ளி. (C.E.M) . |
| மரச்சுண்டெலி | mara-c-cuṇṭeli n. <>id.+ Tree-mouse, Mus oleraceus; சுண்டெலிவகை. (M. M. 830.) |
| மரச்செப்பு | mara-c-ceppu n. <>id.+ 1. Small wooden casket; பரணி. Loc. 2. See மரவை. (யாழ். அக.) |
| மரச்செவி | mara-c-cevi n. <>id.+. 1. The ear of a wooden doll or image; மரப்பாவையின்செவி; 2. Completely deaf ear; |
| மரச்செறிவு | mara-c-ceṟivu n. <>id.+ Dense grove; சோலை. (பிங்) |
| மரசபின் | maracapiṉ n. cf. madhurasā + pīlunī. Bowstring hemp; See பெருங்குரும்பை (சங். அக) |
| மரண் | maraṇ. n. <>maraṇa. See மரணம். மரணாயமன்னுயிர்கட்கு (திவ். இயர், 1, 60) |
| மரணக்களை | maraṇa-k-kaḷai n. <>மரணம்+. See மரணக்குறி. Loc . |
| மரணக்குறி | maraṇa-k-kuṟi n. <>id.+ Sign of impending death; இறக்குந்தறுவாயில் உண்டாம் அறிகுறி. (யாழ். அக.) |
| மரணக்கெடி | maraṇa-k-keṭi n. <>id.+ Dread of death; மரணபயம். (W.) |
| மரணகண்டசாஸ்திரம் | maraṇa-kaṇṭa-cāstiram n. <>id.+ கண்டம்4+ See மரணகண்டி. Loc. . |
| மரணகண்டி | maraṇa-kaṇṭi n. <>id.+ gaṇda. A work dealing with signs of death by Mārkkalinga-cōtiṭar of Piccaipākkam, பிச்சைபாக்கம் மார்க்கலிங்க சோதிடர் செய்ததும் மரணக் குறிகளைத் தெரிவிப்பதுமான ஒரு நூல். (யாழ். அக.) |
| மரணகண்டிகை | maraṇa-kaṇṭikai n. <>id.+ gaṇdikā. 1. See மரணகண்டிதம். (W.) . 2. See மரணகண்டி. (யாழ். அக.) |
| மரணகண்டிதம் | maraṇa-kaṇṭitam n. <>id.+ Determination of the time of death; மரணகாலநிர்ணயம். (யாழ். அக) |
| மரணகாயம் | maraṇa-kāyam n. <>id.+ Mortal wound; சாவைவிளைக்குங் கொடுங்காயம். Colloq. |
| மரணகாலம் | maraṇas-kālam n. <>id.+ Time of death; சாகும் வேளை. (யாழ். அக) |
