Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரணசனி | maraṇa-caṉi n. <>id.+. (Astrol.) The ēḻarai-y-āṇṭu-c-caṉi affecting a person for the third time in his life, when it is believed to cause his death ; மரணத்தைக் குறிப்பதும் வாழ்நாளுள் மூன்றாமுறை வருவதுமான ஏழரையாண்டுச்சனி. |
| மரணசாசனம். | maraṇa-cācaṉam n. <>id.+ The last will and testament; ஒருவன் தனக்குப்பின் தன் ஆஸ்தியின் வினியோகத்தைக் குறித்து எழுதிவைக்கும் பத்திரம். Mod. |
| மரணசாதனம் | maraṇa-cātaṉam n. <>id.+ See மரணசாசனம். Mod . |
| மரணசிட்சை | maraṇa-ciṭcai n. <>id.+. 1. Death sentence; மரணதண்டனை. (C. G.) 2. Transporation for life; |
| மரணசீவன் | maraṇa-cīvaṉ n. <>id.+ Mortal existence; இறக்கக்கூடிய வாழ்வு. (W.) |
| மரணசூதகம் | maraṇa-cūtakam n. <>id.+ See மரணாசௌசம். (W.) . |
| மரணசேஷ்டை | maraṇa-cēṣṭai n. <>id.+ See மரணாவஸ்தை. (W.) . |
| மரணதண்டனை | maraṇa-taṇṭaṉai n. <>id. See மரணசிட்சை . (W.) . |
| மரணதண்டனைக்குற்றம் | maraṇa-taṇṭaṉai-k-kuṟṟam n. <> id.+ Offence punishable with death or transportation for life; மரணசிட்சை விதித்தற்குரிய பெருங்குற்றம் . Mod. |
| மரணபத்திரம் | maraṇa-pattiram. n. <>id.+ See மரணசாசனம். Nā. . |
| மரணபயங்கரம் | maraṇa-payaṅkaram n. <>id.+ See மரணக்கெடி .(W.) . |
| மரணம் | maraṇam n. <>maraṇa. 1. Death, mortality; சாவு. மரணமானால் வைகுந்தங்கொடுக்கும் பிரான் (திவ்.திருவாய், 9, 10, 5); 2. Sinking in a dead faint, one of paca-pāṇā-vastai;, q.v. |
| மரணயாகம் | maraṇa-yakam n. <>id.+ A sacrificial ceremony for causing the death of a particular person ; ஒருவனுடைய மரணத்தைக் குறித்துச் செய்யப்படும் அபிசாரயாகம் .(W.) |
| மரணயோகம் | maraṇa-yōkam n. <>id.+ (Astrol.) An inauspicious yoga indicating one's ruin or failure; கெடுதியைக் குறிக்கும் நாசயோகவகை. (பஞ்) |
| மரணவாக்குமூலம் | maraṇa-vākku-mūlam n. <>id.+. (legal.) Declaration of dying person, dying declaration; மரண நேர்வதாகக் கருதப்படுங் காலத்தில் கொடுக்கும் உறுதிமொழி. |
| மரணவேதனை | maraṇa-vētaṉai n. <>id. See மரணாவஸ்தை. உறுகின்ற யான் மரணவேதனைபோல வுற்றேன் (சிலப், 19, 5-6, உரை) |
| மரணஸ்தம்பனம் | maraṇa-stampanam. n. <>id.+ The art of postponing or preventing one's own death ; தனக்கு மரணத்தை வரவொட்டாமல் நிறுத்திவைக்கும் வித்தை (யாழ். அக) |
| மரணாசூசம் | maraṇācūcam n. See மரணாசௌசம். (யாழ். அக.) . |
| மரணாசௌசம் | maraṇācaucam n. <>maraṇa + āšauca. Ceremonial pollution observed on the death of one's relation; சாதீட்டு. |
| மரணாவஸ்தை | maraṇāvastai n. <>id.+ Death-throes, pangs of death; மரணவேதனை. (W.) |
| மரணிய - த்தல். | maraṇi- 11. v. intr. <>மரணம். To die; இறத்தல். (J.) |
| மரணிப்பு | maraṇippu n. <>மரணி-. See மரணம். 1 (யாழ்.அக) . |
| மரணை 1 | maraṇai n. <>maraṇa. Death; சாவு. (யாழ்.அக) |
| மரணை 2 | maraṇai n. <>smaraṇa. 1.Memory; ஞாபகம். (சங். அக.) 2. Sensation; |
| மரத்தச்சர் | mara-t-taccar n. <>மரம் + Carpenter; தச்சர். (நாமதீப.145, உரை) |
| மரத்தலையாயக்கட்டு | marattalai-y-āya-k-kaṭṭu n. See மரந்தலையாயக்கட்டு. (W. G.) . |
| மரத்தார் | marattār n. <>மரம். Blockheads, wooden-headed persons; பகுத்தறிவில்லதார். மரத்தாரிம் மாணாக் குடிப்பிறந்தார் (நாலடி. 145) |
| மரத்தாலிகட்டியடி - த்தல் | mara-t-tāli-kaṭṭi-y-aṭi- v. tr. <>id.+ தாலி. To extort, as by compelling a ryot's wife to wear a wooden tāli and surrender her golden tāli; மரத்தாற் செய்த தாலியைக் கட்டிக்கொள்ளச்செய்து குடியானவன் மனைவியின் கழுத்தில் இருக்கும் பொற்றாலியை வரிக்காக வாங்குதல்போன்று நீர்ப்பந்தமாய் வசூலித்தல் . Loc. |
| மரத்துப்பால் | marattu-p-pāl n. <>id.+ Toddy, as the milk of the palm-tree ; கள். Colloq. |
