Word |
English & Tamil Meaning |
|---|---|
| மரவொதுக்கு | mara-v-otukku n. <>id.+. Shade of a tree, as offering shelter from the sun; வெயில் காற்று முதலியவற்றிற்கு ஒதுங்க உதவும் மரநிழல். (W.) |
| மரவொல்லி | mara-v-olli n. <>id.+. Blighted coconut in which the kernel is scanty though the fibrous rind is large; உள்ளீடற்ற தேங்காய் (யாழ். அக.) |
| மரா | marā n. 1. See மரவம், 2, 3, 4. (திவா.) (பிங்.) . 2. See மராமரம். |
| மராஅடி | marā-aṭi n. <>மரம்+அடி. 1. Wooden sandals; பாதுகை. (தொல். எழுத். 311, உரை.) 2. See மராடி, 1. |
| மராஅம் | marāam n. See மரவம், 2, 3, 4 . இணர்சேர்ந்த மராஅமும் (கலித். 26). (திருமுரு. 10, உரை.) . |
| மராட்டம் 1 | marāṭṭam n. 1. Hair on the body of human beings or animals; புறமயிர். (திவா.) 2. Hair on women's head; |
| மராட்டம் 2 | marāṭṭam n. <>Pkt. marahaṭṭha <>mahārāṣṭra. 1. The Mahratta country. See மகாராஷ்டிரம். மகத வினைஞரு மராட்டக் கம்மரும் (மணி. 19, 107). . 2. Place; |
| மராட்டிமொக்கு | marāṭṭi-mokku n. [T. marāṭimogga K. maraṭimogga.] An intoxicating drug; லாகிரி வஸ்துவகை. (பெரியமா. 31.) |
| மராட்டியம் | marāṭṭiyam n. <>mahārāṣṭra. The Mahratta country. See மகாராஷ்டிரம். (W.) . |
| மராட்டியர் | marāṭṭiyar n. <>id. The Mahrattas; மகாராஷ்டிரர். |
| மராட்டிரம் | marāṭṭiram n. <>id. The Mahratta country. See மகாராஷ்டிரம். (W.) . |
| மராடம் 1 | marāṭam n. <>மராட்டம் 2. 1. The Mahratta country, one of 56 tēcam, q.v.; ஐம்பத்தாறுதேசத்து ளொன்றான மகாராஷ்டிரம். 2. The language spoken in the Mahratta country; |
| மராடம் 2 | marāṭam n. See மருக்காரை. (மலை.) . |
| மராடர் | marāṭar n. <>மராடம் 1. The Mahrattas; மகாராஷ்டிரர். சோளர் மராடர் (கம்பரா. உலா. 47). |
| மராடி | marāṭi n. <>மரம்+அடி. 1. Root or stump of a tree; மரத்தின் அடிப்பகுதி. (நன். 256, மயிலை.) 2. See மராஅடி, 1. |
| மராபம் | marāpam n. See மதுக்காரை. (பரி. அக.) . |
| மராம் | marām n. <>மரவம். See மரவம், 2, 3, 4. மராமலர்த் தாரின் மாண்வரத் தோன்றி (பரிபா. 15, 20). . |
| மராமத்திலாகா | marāmattilākā n. <>மராமத்து+. Department of public works; பொதுக்கட்டடவேலைத்துறை. (C. G.) |
| மராமத்து | marāmattu n. <>U. marammat. Repairs; கட்டடம் முதலியவற்றின் சீர்திருத்தவேலை. (C. G.) |
| மராமத்துத்தப்ரீக் | marāmattu-t-taprīk n. <>id.+ U. tafriq. Extra contribution imposed on villages for repairs; மராமத்துக்காக கிராமத்தாரிடம் வாங்குந் தனிவரி. (C. G.) |
| மராமரம் | marā-maram n. <>மரா+. 1. Sal. See ஆச்சா. (பிங்.) மாரமா மேழ்துளை யெய்த (கம்பரா. சிறப்புப். 5). . 2. Pipal. See அரசு. (அக. நி.) |
| மராரம் | marāram n. <>marāra. Godown, warehouse; பண்டகசாலை. (யாழ். அக.) |
| மராலம் | marālam n. <>marāla. (யாழ். அக.) 1. Unguent for eyes; கண்ணிலிடும் மை. 2. Horse; 3. Goose; 4. Pomegranate; |
| மராளம் 1 | marāḷam n. <>marāla. 1. Swan; அன்னம். (பிங்.) 2. Flamingo. See பூநாரை. (M. M.) 3. See மராலம், 4. (அக. நி.) |
| மராளம் 2 | marāḷam n. cf. vyāla. Snake; பாம்பு. (சூடா.) |
| மராளாசனம் | marāḷācaṉam n. <>marāla +āsana. Lotus; தாமரை. (சங். அக.) |
| மரி - தல் | mari- 4 v. intr. <>mr. See மரி 2-. எய்தானம் மான்மரிய வேந்திழைக்காய் (திவ். இயற். 3, 52). . |
| மரி 1 - த்தல் | mari- 11 v. intr. <>id. To die; சாதல். அரயன் உடையான் மரித்தமையில் (S. I. I. ii, 311). |
| மரி 2 - த்தல் | mari- 11 v. intr. <>smr. To remember, meditage; நினைத்தல். (W.) |
| மரி 1 | mari n. <>Lat. Maria. The Virgin Mary; இயேசுநாதரின் தாயான கன்னி மரியம்மாள். மரியே வாழ்க. R. C. |
| மரி 2 | mari n. See மரிமா. (பதார்த்த. 676.) . |
| மரிக்கன் | marikkaṉ n. <>E. American. See மரிக்கனிரும்பு. . |
