Word |
English & Tamil Meaning |
|---|---|
| மருத்து | maruttu n. <>marut. 1. Wind; காற்று. விரைத்த மருத்து (தணிகைப்பு. அகத்திய. 20). 2. See மருத்தன்2. மருத்தின் காதலன் (கம்பரா. வேலேற்ற. 40). 3. Disease caused by the humour of the wind; |
| மருத்துச்சஞ்சீவி | maruttu-c-cacīvi n. <>மருந்து+. Medicinal shrubs and plants; மருந்தாக உதவும் புல்மரம் புதல் பூடு கொடி முதலியன. (பிங்.) |
| மருத்துநீர் | maruttu-nīr n. <>id.+. Medicated water for bathing; முழுகுவதற்கான மருந்திட்ட நீர். (யாழ். அக.) |
| மருத்துநூல் | maruttu-nūl n. <>id.+. See மருத்துவநூல். வழுவில் சோதிட மருத்து நூல் (பிரபோத. 31, 37). . |
| மருத்துப்பை | maruttu-p-pai n. <>id.+. 1. Medicine chest; மருந்துகள் வைத்த பை. (நன். 183, மயிலை.) 2. Leather case for gunpowder; |
| மருத்துப்போதி | maruttuppōti n. cf. மருத்திபொதி. A plant growing in hedges and thickets. See நாயுருவி. (மலை.) . |
| மருத்துபலம் | maruttu-palam n. <>marut-phala. Hail-storm; ஆலங்கட்டிமழை. (சங். அக.) |
| மருத்துமரம் | maruttu-maram n. <>மருந்து+. Person of good qualities, as precious as medicinal tree; மருந்துமரம்போல் அருமையானவன்-ள். (யாழ். அக.) |
| மருத்துமாமலைவாழை | maruttu-māmalai-vāḻai n. <>id.+. See மருத்துவவாழை. (J.) . |
| மருத்துமாவாழை | maruttu-mā-vāḻai n. <>id.+. See மருத்துவவாழை. (யாழ். அக.) . |
| மருத்துவக்கலைஞன் | maruttuva-k-kalaiaṉ n. <>மருத்துவம்1+. See மருத்துவநூலோன். (பிங்.) . |
| மருத்துவச்சி | maruttuvacci n. Fem. of மருத்துவன்1. Midwife; பிரசவம்பார்ப்பவள். Mod. |
| மருத்துவதி | maruttuvati n. prob. marutvatī. The river Tāmiraparuṇi; தாமிரபருணி. (நாமதீப. 525.) |
| மருத்துவநாள் | maruttuva-nāḷ n. <>மருத்துவர்+. The first nakṣatra; அச்சுவினி ரள். (பிங்.) |
| மருத்துவநூல் | maruttuva-nūl n. <>மருத்துவம்1+. 1. Medical science; வைத்திய சாஸ்திரம். உண்டால் நூறடி உலாவுதல் வேண்டுமென்று மருத்துவநூல் கூறியதனை (சீவக. 2734, உரை). 2. Treatise on midwifery; |
| மருத்துவநூலோன் | maruttuva-nūlōṉ n. <>மருத்துவநூல். Physician; வைத்தியன். (திவா.) |
| மருத்துவப்பதம் | maruttuva-p-patam n. <>மருத்துவம்1+. Condition of being amenable to medical treatment, as an early stage of the disease; பரிகாரஞ் செய்யக்கூடியதாகிய நோயின் நிலைமை. மருத்துவப்பத நீங்கினாளென்னும் வார்த்தை படுவதன்முன் (திவ். பெரியாழ். 3, 7, 10). |
| மருத்துவப்பேறு | maruttuva-p-pēṟu n. <>id.+. Land granted in inam to the village physician; கிராம வைத்தியனுக்கு இறையிலியாக விடப்பட்ட நிலம். (S. I. J. ii, 43.) |
| மருத்துவம் 1 | maruttuvam n. <>மருந்து. 1. Practice of medicine; வைத்தியம். 2. Medicine; 3. Remedy; 4. Midwifery; |
| மருத்துவம் 2 | maruttuvam n. perh. மருதம். A kind of lute; ஒருவகை யாழ். மருத்துவப் பெயர் பெறும் வானக்கருவி (கல்லா. 81). |
| மருத்துவர் | maruttuvar n. <>மருந்து. The twin physicians of Svarga; அச்சுவினிதேவர். மருத்துவ ரிருவோர் (திருவிளை. திருமண. 85). |
| மருத்துவர்நாள் | maruttuvar-nāḷ n. <>மருத்துவர்+. See மருத்துவநாள். (நாமதீப. 104.) . |
| மருத்துவவாழை | maruttuva-vāḻai n. <>மருந்து+. A kind of plantain; வாழைவகை. (J.) |
| மருத்துவன் 1 | maruttuvaṉ n. <>id. Physician; வைத்தியன். மருத்துவனாய்நின்ற மாமணி வண்ணா (திவ். பெரியாழ். 5, 3, 6). |
| மருத்துவன் 2 | maruttuvaṉ n. See மருத்துவான். (பிங்.) மருத்துவன்றனைச் சசியொடு துரந்து (கந்தபு. அவைபுகு. 98). . |
| மருத்துவன்றாமோதரனார் | maruttuvaṉṟāmōtaraṉār n. <>மருத்துவன்1+. A poet of the Third šaṅgam; கடைச்சங்கப்புலவருள் ஒருவர். (புறநா.) |
| மருத்துவான் | maruttuvāṉ n. <>marutvānnom. sing. of marutvat. Indra; இந்திரன். மருத்துவா னுருவமாறி வந்தவா றுணர்கிலாதான் (பாரத. அருச்சுனன்றவ. 69). |
