Word |
English & Tamil Meaning |
|---|---|
| மருத்துவி | marruttuvi n. Fem. of மருத்துவன்1. Female physician; வைத்தியஞ் செய்பவள். ஆருயிர் மருத்துவி துன்னிய வென்னோய் துடைப்பா யென்றலும் (மணி. 17, 15). |
| மருத்துவிச்சி | marruttuvicci n. See மருத்துவச்சி. (யாழ். அக.) . |
| மருத்தெண்ணெய் | marutteṇṇey n. <>மருந்து + எண்ணெய். See மருந்தெண்ணெய். (வீரசோ. தொகை. 1, உரை.) . |
| மருதக்கிழவன் | maruta-k-kiḻavaṉ n. <>மருதம்+. 1. Chief of an agricultural tract; மருதநிலத்தலைவன். 2. Indra, as the presiding deity of marutam; |
| மருதங்கிளி | marutaṅ-kiḷi n. prob. id.+. A species of parrot; கிளிவகை (யாழ். அக.) |
| மருதணி 1 | marutaṇi n. prob. மருது+அணி-. See மருதம், 2. (யாழ். அக.) . |
| மருதணி 2 | marutaṇi n. Corr. of மருதோன்றி. . |
| மருதத்திணை | maruta-t-tiṇai n. <>மருதம்+. See மருதம், 2. (இலக். வி. 391, உரை.) . |
| மருதத்துப்பெருந்துறை | marutattu-p-peruntuṟai n. <>id.+. A bathing ghat of the Vaikai at Madura. See திருமருதமுன்றுறை. (ஐங்குறு. 75.) |
| மருதந்துவர் | marutan-tuvar n. prob. id+. Myrtle dye, used in dyeing cloth for use by Buddhist monks; பௌத்த பிட்சுக்களின் ஆடைகளைத் தோய்ப்பதற்குரிய ஒருவகைச்சாயம். |
| மருதநாதன் | maruta-nātaṉ n. <>id.+. Indra, as lord of the agricultural tract; இந்திரன். (நாமதீப. 61.) |
| மருதநிலப்பறை | maruta-nila-p-paṟai n. <>மருதநிலம்+. Drum of the agricultural tract; மருதநிலத்திற்குரிய பறை. (இறை. 1, 18, உரை.) |
| மருதநிலம் | maruta-nilam n. <>மருதம்+. See மருதம், 2. . |
| மருதநிலவேந்தன் | maruta-nila-vēntaṉ n. <>மருதநிலம்+. See மருதநாதன். (சூடா.) . |
| மருதப்பண் | maruta-p-paṇ n. <>மருதம்+. See மருதம், 4. (பிங்.) . |
| மருதப்பறை | maruta-p-paṟai n. <>id.+. See மருதநிலப்பறை. (சூடா.) . |
| மருதம் | marutam n. 1. See மருது. கரைசேர் மருதமேறி (ஐங்குறு. 74). . 2. Agricultural tract, one of ai-n-tiṇai, q.v.; 3. Love action in agricultural tracts, consisting of sexual union after sulks, one of seven aka-t-tiṇai, q.v.; 4. (Mus.) A morning melody-type peculiar to agricultural tracts; 5. Paddy field; |
| மருதயாழ் | maruta-yāḷ n. <>மருதம்+. 1. A lute peculiar to agricultural tracts; மருதநிலத்துக்குரிய யாழ்வகை. (இறை.1, பக். 18.) 2. See மருதம், 4. (பிங்.) |
| மருதயாழ்த்திறம் | maruta-yāḷ-t-tiṟam n. <>id.+. (Mus.) Secondary melody-types of the marutappaṇ, of four kinds, viz., navir, vaṭuku, vaci, cey-tiṟam; நவிர், வடுகு, வஞ்சி, செய்திறம் என நால்வகைப்பட்ட மருதப்பண்வகை. (பிங்.) |
| மருதயாறு | maruta-yāṟu n. A brackish stream in Uṭaiyārpālaiyam taluk in Trichinopoly District; திருச்சினாப்பள்ளிஜில்லா உடையார் பாளையந் தாலூகாவிலோடும் ஒரு சிற்றாறு. (G. Tp. D. I, 343.) மருதயாற்றின் தெற்கும் (தொல். கொல். 398). |
| மருதர் | marutar n. <>marutah nom. pl. of marut. The seven kinds of winds. See சத்தமருத்து. மருதரும் வசுக்களும் (திவ். திருவாய். 10,9,7). |
| மருதவேந்தன் | maruta-vēntaṉ n. <>மருதம்+. See மருதநாதன். (யாழ். அக.) . |
| மருதவைப்பு | maruta-vaippu n. <>id.+. See மருதம், 2. பரமனார் மருதவைப்பில் . . . இடை மருதிடங் கொண்டாரே (தேவா. 435, 1). . |
| மருதாணி | marutāṇi n. Corr. of மருதோன்றி. Loc. . |
| மருதி | maruti n. See மருது. (L.) . |
| மருது | marutu n. 1. Arjuna. See நீர்மருது. 2. Black winged myrobalan, 3. Flowering murdah. |
| மருதூணி | marutūṇi n. Corr. of மருதோன்றி. Loc. . |
| மருதோன்றி | maru-tōṉṟi n. prob. மரு1+. 1. Henna, 1. sh., Lawsonia alba; செடிவகை. துறைச்சிறுவிரன் மருதோன்றி. 2. Nail dye. |
| மருந்தம் | maruntam n. prob.மருந்து. 1. Poison; நஞ்சு. (W.) 2. A mineral poison. |
