| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மலக்குண்(ணு) - தல் | malakkuṇ- v. intr. <>மலக்கு2+. To be churned; to be troubled; to suffer affliction; கலக்கப்படுதல் கண்ணன் கையான் மலக்குண்டு (திருவிருத். 57) | 
| மலகரி | malakari n. cf. மல்லாரி2. [T. malhari.] (Mus.) A melody-type of the kuṟici class; குறிஞ்சிப்பண்வகை. (பிங்.) | 
| மலங்கரை | malaṅkarai n. <>மலை4+. See மலஞ்சரிவு. Nā. . | 
| மலங்கல் | malaṅkal n. <>மலங்கு-. 1. Tank; குளம். 2. See மலங்கு. | 
| மலங்கழி - தல் | malaṅ-kaḷi- v. intr. <>மலம்+. 1. (šaiva.) To be freed from the effects of mu-m-malam; ஆணவமுதலிய மலநீங்குதல். 2. To pass stools; | 
| மலங்கழி - த்தல் | malaṅ-kaḷi- v. tr. Caus. of மலங்கழி1-. To pass excrement; உடல்மலத்தை வெளியேற்றுதல். (W.) | 
| மலங்காரை | malaṅkārai n. Cape jasmine. See நஞ்சுண்டம். (L.) | 
| மலங்கு - தல் | malaṅku- 5 v. intr. 1. To be agitated; to be made turbid; to be perturbed; நீர்முதலியன குழம்புதல். மலங்கிவன்றிரை... பெயர்ந்து (தேவா.130, 9). 2. To be confused, bewildered; to be deistressed; 3. To shake, move tremble, as the eyes; 4. To perish; to be ruined; 5. To be full to the brim, as tears in the eyes; | 
| மலங்கு | malaṅku n. <>மலங்கு-. [T. malugu.] True eel; விலாங்குமீன். மலங்கு மிளிர்செறு (புறநா. 61). | 
| மலச்சிக்கல் | mala-c-cikkal n. <>மலம்+. Constipation; மலவடைப்பு . | 
| மலச்சிக்கு | mala-c-cikku n. <>id.+. See மலச்சிக்கல். . | 
| மலசகிதர் | mala-cakitar n. <>mala+sahita. (šaiva.) Persons in whom all the three malams are present, opp. to mala-rakitar; மும்மலத்தோடு கூடியவர். (W.) | 
| மலசம் | malacam n. prob. mala-ja. White ant . See கறையான். (யாழ். அக.) | 
| மலசர் | malacar n. <>மலையர். A forest tribe, speaking a mixture of Tamil and Malayāḷam, in Coimbatore District; தமிழும் மலையாளமும் கலந்த பாஷை பேசுபவரும் கோயம்புத்தூர் ஜில்லாக் காடுகளில் வாழ்பவருமான மலைச்சாதியார். (E. T. iv, 394.) | 
| மலசலம் | mala-calam n. <>மலம்+. Excrement and urine; மலமூத்திரங்கள். | 
| மலசலாதி | mala-calāti n. <>மலசலம்+. See மலசலம். (W.) . | 
| மலசுத்தி | mala-cutti n. <>மலம்+. Evacuation of bowels; உடன்மலங்கழிகை. (W.) | 
| மலஞ்சரிவு | mala-carivu n. <>மலை4+. Slope of mountains ; மலையின்சரிவு. Nā. | 
| மலஞ்சாரை | mala-cārai n. <>id+. See மலைச்சாரை. (M. M. 751.) . | 
| மலட்டா | malaṭṭā n. <>மலடு+ஆ8. Sterile Cow; ஈனாப்பசு. மலட்டாவைப் பற்றிக் கறவாக்கிடப்பர் (சடகோபாந். 37). | 
| மலட்டாறு | malaṭṭāṟu n. <>id.+. Jungle-stream, as drying up for the most part of the year; காடுகளிலோடுவதும் விரைவில் நீர் வற்றுவதுமான ஆறு. Loc. | 
| மலட்டுப்புழு | malaṭṭu-p-puḻu n. <>id.+. Worm said to cause sterility in woman; மலடாக்குங் கிருமிவகை. (W.) | 
| மலட்டுப்பூச்சி | malaṭṭu-p-pūcci n. <>id.+. See மலட்டுப்புழு. (W.) . | 
| மலடன் | malaṭaṉ n. <>id. Sterile man ; மகப்பெறாதவன் மக்கட்பெறாத மலடனல்லையேல் வாகண்டாய் (திவ். பெரியாழ், 1, 4, 4). | 
| மலடி | malaṭi n. Fem. of மலடன். Sterile woman; மகப்பெறாதவள் குழந்தையை யுயிர்த்த மலடிக்குவமை கொண்டாள் (கம்பரா. உருகாட். 65). | 
| மலடிமாந்தம் | malaṭi-māntam n. <>மலடி+. A disease in children, one of aṣta-māntam, q.v.; அஷ்டமாந்தங்களில் ஒன்றாகிய குழந்தை நோய்வகை. (W.) | 
| மலடு | malaṭu n. 1. Sterility, barrenness, as of women; கருத்தரியாமை. (மூ. அ.) 2. Sterile person or animal; | 
| மலத்திரயம் | mala-t-tirayam n. <>mala+. (šaiva.) The three impurities of the soul. See மும்மலம். மலத்திரய பூரியை (திருப்பு. 1266). | 
| மலத்தீர்வு | mala-t-tīrvu n. <>மலம்+தீர்-. (šaiva.) Getting rid of mummalam; மும்மலம் நீங்குகை. (சி. போ. பா. பக். 2.) | 
