| Word | 
English & Tamil Meaning | 
|---|---|
| மலத்துவாரம் | mala-t-tuvāram n. <>id.+. Anus; உடலினின்று மலங்கழியும் வழி. (C. E. M.) | 
| மலத்தையறுப்போன் | malattai-y-aṟuppōn n. <>id.+. Chebulic myrobalan. See கடுக்காய். (சங். அக.) | 
| மலதிரம் | malatiram n. White basil. See கஞ்சாங்கோரை. 1. (சங். அக.) | 
| மலதூஷிதம் | mala-tūṣitam n. <>மலம்+. Filth, dirt; அழுக்கு. (W.) | 
| மலநானம் | mala-nāṉam n. prob. id.+. (šaiva.) Bathing in water after smearing one's body with earth taken from a clean spot about six inches below the surface; சுத்தமானவிடத்தில் எண்விரலுக்குக் கீழாகவுள்ள மண்ணை யெடுத்து மந்திரந் சொல்லி உடம்பிற்றேய்த்து நீரில் முழ்குகை. (தத்துவப். 45.) | 
| மலநீர் | mala-nīr n. <>id.+. Urine ; மூத்திரம் வெண்ணீர் செந்நீர் மலநீர் (தாயு. சச்சிதா. 2) | 
| மலப்பருத்தி | mala-p-parutti n. <>id.+. Coral-flowered ordure tree, l. tr., Sterculia colorata; நீண்ட மரவகை. (L.) | 
| மலப்பற்றம் | mala-p-paṟṟam n. <>id.+. See மலபந்தம், 2. (யாழ். அக.) . | 
| மலப்பற்று | mala-p-paṟṟu n. <>id.+. 1. See மலபந்தம், 1. (W.) . 2. See மலபந்தம், 2. (யாழ். அக.) | 
| மலப்பு | malappu n. cf. மலைப்பு. A kind of dance before a deity; கடவுள் திருமுன்னர் ஆடும் ஒருவகைக்கூத்து. எம்பெருமானாரடியாள் மலப்பு சேவிக்க (கோயிலொ. 80). | 
| மலப்புழு | mala-p-puḷu n. <>மலம்+. Mawworm, as living in excreta; கீரைப்பூச்சி. (W.) | 
| மலப்பை | mala-p-pai n. <>id.+. 1.That portion of the bowels containing faeces; மலம் தங்குமிடம். (சங். அக.) 2. See மலப்பாண்டம். | 
| மலபந்தம் | mala-pantam n. <>id.+. 1. (šaiva.) Bondage of the soul in mu-m-malam; மும்மலத்தாற் கட்டுண்கை. 2. See மலச்சிக்கல். | 
| மலபந்தன் | mala-pantaṉ n. <>id.+. (šaiva.) One who is subject to the bondage of mu-m-malam; பாசக்கட்டுள்ளவன். (யாழ். அக.) | 
| மலபரிபாகம் | mala-paripākam n. <>id.+. (šaiva.) Stage of a soul when its three malam meet with the causes of their removal; மலந்தேய்தற்குரிய காரணங்களோடு கூடிய நிலை. மலபரி பாகம் வரவும் (தாயு. மலைவளர். 6). | 
| மலபாகம் | mala-pākam n.<>id.+. (šaiva.) See மலபரிபாகம். (W.) . | 
| மலபாண்டம் | mala-pāṇṭam n. <>id.+. Body; உடல் கிருமிசேர்ந்த மலபாண்டமோ (தாயு. தேசோ. 3). | 
| மலபாதை | mala-pātai n. <>id.+. Urgency to ease; uneasy sensation before evacuation; மலங்கழிக்கும்முன் வயிற்றுள் உண்டாம் வேதனை. Colloq. | 
| மலம் | malam n. <>mala. 1. Excrement, faeces; பவ்வீ. சலமலம் விடுக்கும்போதும் (காஞ்சிப்பு. ஓழுக்க. 7). 2. Excretions of the body, as semen, menstrual blood, urine, ordure, ear-wax, phlegm, sweat; 3. Dirt, filth; 4. Dregs, sediment; 5. Rust; 6. (šaiva.) The three impurities of the soul. See மும்மலம்.ṟ 7. Sin; 8. See மலநானம். நானமோ ரெண்வகையா மலசலம் (தத்துவப். 45). 9. Camphor; | 
| மலம்பருத்தி | malam-parutti n. Corr. of மலப்பருத்தி. (W.) . | 
| மலம்பாதை | malam-pātai n. <>மலை+. Path in hilly region; மலைவழி. Nā. | 
| மலம்பாம்பு | malam-pāmpu n. Corr. of மலைப்பாம்பு. (W.) . | 
| மலம்பாஷை | malam-pāṣai n. <>மலை+. Dialect of the Kanika tribe in the mountains of South Travancore, being a mixture of Malayalam and Tamil; தென்திருவாங்கூர்ச்சீமையில் கணிகரென்னும் மலைச்சாதியார் பேசும் மலையாளமுந் தமிழுங் கலந்த பாஷை. (E. T. iii, 169.) | 
| மலம்பிஞ்சு | malam-picu n. Corr. of மலைப்பிஞ்சு. Loc. . | 
| மலமல - த்தல் | mala-mala- 11 v. intr. <>மலமலெனல். To produce the sound of bubbling or flowing abundantly; மலமலென்றொலித்தல். | 
| மலமலெனல் | malamaleṉal n. Onom. expression signifying (a) bubbling, as of boiling water; ஒர் ஒலிக்குறிப்பு. (b) flowing abundantly, as of tears; | 
| மலமாசம் | mala-mācam n. <>mala-māsa. Intercalary month. See அதிகமாதம். (W. G.) | 
| மலமூத்திரம் | mala-mūttiram n. <>மலம்+. See மலசலம். (C. G.) . | 
| மலயக்கால் | malaya-k-kāl n. <>மலயம்+. See மலயமாருதம். (திவா.) . | 
