Word |
English & Tamil Meaning |
|---|---|
| மழைக்கண்ணி | maḻai-k-kaṇṇi n. prob. id.+. A kind of bird; பறவகை. (J.) |
| மழைக்கரு | maḻai-k-karu n. <>id.+. Smoke; தூமம். மழைக்கரு வுயிர்க்கும் . . . அட்டில் (சிலப்.10, 143, அரும்). |
| மழைக்காயிருட்டு | maḻaikkāyiruṭṭu n. Corr, of மழைக்காலிருட்டு. Tinn. . |
| மழைக்கால் | maḻai-k-kāl n.<>மழை+. Dark clouds descending in columns and indicating rain; பெய்யுநிலையில் கருநிறத்துடன் இறங்கும் மேகக்கால். |
| மழைக்காலிருட்டு | maḻai-k-kāl-iruṭṭu n. <>மழைக்கால்+. Dense darkness of a rainy night; மழைபெய்யுங்காலத்து இரவிலுண்டாம் செறிந்த இருள். மழைக்காலிருட்டிலும் மந்தி கொம்பு விட்டுக் கொம்பு பாயாது. |
| மழைக்காலிருள் | maḻai-k-kāl-iruḷ n. <>id.+. See மழைக்காலிருட்டு. மழைக்காலிருளான் எதிர்ப்படலருமையான் (திருக்கோ. 260, துறைவிளக்.). . |
| மழைக்கிளி | maḻai-k-kiḷi n. <>மழை+. 1. A kind of grasshopper, as appearing after the rains; மழைபெய்து விட்டவுடன் காணப்படும் வெட்டுக்கிளிவகை. (W.) 2. Large Indian parakeet, Palacornis; |
| மழைக்குணம் | maḻai-k-kuṇam n. <>id.+. See மழைத்தோற்றம். (W.) . |
| மழைக்குயில் | maḻai-k-kuyil n. <>id.+. Swallow, as visitant in rainy season; தலையிலாக்குருவி. (பிங்.). |
| மழைக்குறி | maḻkai-k-kuṟi n. <>id.+. See மழைத்தோற்றம். Loc. . |
| மழைக்கோலம் | maḻai-k-kōlam n.<>id.+. See மழைத்தோற்றம். (W.) . |
| மழைக்கோள் | maḻai-k-kōḷ n. <>id.+. Venus, as the rain-indicating planet; சுக்கிரன். (பிங்.) மழைக்கோள் பொலியு நற்றினம் (அரிசமய. பராங். 22). |
| மழைக்கோளாறு | maḻai-k-kōḷāṟu n. <>id.+. (W.) 1. See மழைத்தோற்றம். . 2. Changeable stormy weather, unfavourable to navigation; |
| மழைகாலம் | maḻai-kālam n. <>id.+. Rainy season; மாரிக்காலம். |
| மழைச்சாடை | maḻai-c-cāṭai n. <>id.+. See மழைத்தோற்றம். Loc. . |
| மழைச்சிலை | maḻai-c-cilai n. <>id.+. Rainbow; வானவில். மழைச்சிலையால் வழிதோரண மிட்டனன் வாசவனே (தக்கயாகப். 182). |
| மழைத்தாரை | maḻai-t-tārai n. <>id.+. Continuous shower of rain; விடாது பொழியும் மழைநீர். (யாழ். அக.) |
| மழைத்துளி | maḻai-t-tuḷi n. <>id.+. Rain drop; மழைநீர்ச்சொட்டு. (W.) |
| மழைத்தூவல் | maḻai-t-tūval n. <>id.+. See மழைத்தூறல். (W.) . |
| மழைத்தூற்றல் | maḻai-t-tūṟṟal n. <>id.+. See மழைத்தூறல். (W.) . |
| மழைத்தூறல் | maḻai-t-tūṟal n. <>id.+. Drizzling rain; சிறு திவலையாகத் தூற்றுமழை. |
| மழைத்தோற்றம் | maḻai-t-tōṟṟam n. <>id.+. Clouded sky, as indicating rain; மழைவருதற்குறியான மந்தாரம். (W.) |
| மழைதாங்கி | maḻai-tāṅki n. <>id.+. Rain-cap; கொங்காணி. Loc. |
| மழைதுமித்தல் | maḻai-tumittal n. <>id.+. See மழைத்தூறல். (W.) . |
| மழைப்பாட்டம் | maḻai-p-pāṭṭam n. <>id.+. a shower of rain; ஒருமுறை கனமாக மழை பெய்கை. (W.) |
| மழைப்புகார் | maḻai-p-pukār n. <>id.+ புகர். See மழைத்தோற்றம். (J.) . |
| மழைப்பூங்காரம் | maḻai-p-pūṅkāram n. <>id.+. See மழைத்தோற்றம். (யாழ். அக.) . |
| மழைபெய் - தல் | maḻai-pey- v. intr. <>id.+. To rain; மேகத்தினின்றும் நீர்விழுதல். மேகம் மழை பெய்கிறது. |
| மழைமரக்கால் | maḻai-marakkāl n. <>id.+. A kind of rain-gauge, unit for computing rainfall during a year; ஓர் ஆண்டில் பெய்யும் மழையை அளக்கும் அளவுவகை. (W.) |
| மழைமாரிச்சண்டை | maḻai-māri-c-caṇṭāi n. <>id.+மாரி+. Violent quarrel, like a rain storm; கடுஞ்சண்டை. Loc. |
| மழைமுகங்காணுதல் | maḻai-mukaṅkāṇutal n. <>id.+முகம்+. Being enlivened by rain; மழைபெய்து தளிர்க்கை. (W.) |
| மழையடை | maḻai-y-āṭai n. <>id.+அடை. Incessant rain; விடாது பெய்யும் மழை. மழையடையிலே வரும் விருந்தாளி சத்துரு. |
| மழையலர் | maḻai-y-alar n. <>id.+. water; நீர். (சூடா.) |
| மழையான் | maḻaiyāṉ n. <>id. Viṣṇu; திருமால். மழையானுந் திகழ்கின்ற மலரோனென் றிவர்கள் (தேவ, 1064, 9). |
