Word |
English & Tamil Meaning |
|---|---|
| மழையேறு | maḻai-y-ēṟu n. <>id.+. Thunder; இடி. நெடுந்தேரினன் மழையேறேன வார்த்தான் (கம்பரா. அதிகா. 166). |
| மழையொறுத்தகாலம் | maḻai-oṟutta-kālam n. <>id.+ஒறு-+. Drought; வறண்டகாலம். (W.) |
| மழைவண்ணக்குறிஞ்சி | maḻai-vaṇṇa-k-kuṟici n. <>id.+வண்ணம்+. Western Ghats blue nail dye; மேகவண்ணப் பூவுள்ள மருதோன்றி. (பிங்.) |
| மழைவண்ணன் | maḻai-vaṇṇaṉ n. <>id.+. See மழையான்.(W.) . |
| மழைவறங்கூர் - தல் | maḻai-vaṟaṅ-kūr- v. intr. <>id.+. To become rainless; மழைபெய்யா தொழிதல். பாண்டியனாடு மழைவறங்கூர்ந்து வறுமை யெய்தி (சிலப். உரைபெறுகடுரை, பக். 30.) |
| மழைவீற்றிருத்தல் | maḻai-vīṟṟiruttal n. <>id.+. Raining in season; பருவமழை பெய்கை. (சிலப். உரைபெறுகட்டுரை, பக். 30). |
| மள்கு - தல் | maḷku-, 5v. intr. prob. மழுகு-. To be deficient, defective; குறைதல். மள்கலில் பெருங்கொடை (கம்பரா. கார்கால. 104). |
| மள்ளம் | maḷḷam n. See மள்ளல். (பிங்.) . |
| மள்ளல் | maḷḷal n. perh. malla. Strength, power, robustness; வலிமை. (திவா.) |
| மள்ளன் | maḷḷaṉ. n. perh. id. 1. Strong, powerful person; திண்ணியோன். (பிங்.) 2. Warrior; 3. Commander, military chief; 4. Youth; 5. Inhabitant of agricultural tracts; 6. Inhabitant of hilly tracts; |
| மள்ளான் | maḷḷāṉ n. perh. id. A species of horse; குதிரைவகை. (அசுவசா. 152.) |
| மள்ளு | maḷḷu n. [M. mallu.] Rafter; கைம்மரம். (W.) |
| மளமள - த்தல் | maḷamaḷa- 11 v. intr. To crash, rattle, sound loudly, as branches in snapping; மரக்கொம்பு முதலியன முறியும்போது ஒவியெழும்புதல். |
| மளமளப்பு | maḷamaḷappu n. <>மளமள-. Snapping noise; முறிதற்குறிப்புள்ள ஒலி. |
| மளமளெனல் | maḷamaḷeṉal n. Onom. expr. signifying (a) rattling, crashing; ஒர் ஒலிக்குறிப்பு. (b) quickness; |
| மளாரட்டியெனல் | maḷāraṭṭi-y-eṉal n. See மளாரெனல். (யாழ். கே.) . |
| மளாரெனல் | maḷār-eṉal n. Onom. expr. signifying crashing, cracking; ஒர் ஒலிக்குறிப்பு .மளாரென முறிந்தது. |
| மளிகாரம் | maḷikāram n. Borax; வெண்காரம். (சங். அக.) |
| மளிகை | maḷikai n. [T. maḷiga.] See மளிகைக்கடை. Mod. . |
| மளிகைக்கடை | maḷikai-k-kaṭai n. <>மளிகை+. Grocery shop; பலசரக்குக்கடை. Mod. |
| மளிகைச்செட்டி | maḷikai-c-ceṭṭi n. <>id.+. 1. Grocer; பலசரக்கு வியாபாரி. 2. A Cheṭṭi caste in South Arcot District; |
| மளுக்கெனல் | maḷukkeṉal n. See மளாரெனல். மரக்கிளை மளுக்கென முறிந்தது. . |
| மற்கடம் | maṟkaṭam n. <>markaṭa. See மர்க்கடம். வாதமாமகன் மற்கடம் விலங்கு (திவ். பெரியதி, 5, 8, 2). . |
| மற்கரை | maṟkarai n. <>markarā. (யாழ். அக.) 1. Cave; குகை. 2. Barren woman; |
| மற்கலி | maṟkali n. <>Pkt. maṅkalipulta=makkhaliputta <>mankhaputra. Lord of the ājīvakas; ஆசீவக மதத்தார் வணங்கும் இறைவன். என்றலு மற்கலிதானே யிறை (நீலகேசி, ஆசீவக. 3). |
| மற்கலிநூல் | maṟkali-nūl n. <>மற்கலி+. The scriptures of the ajivakas, by makkhalideva; ஆசீவகமதநூல். மற்கலி நூலின் வகையிது வென்ன (மணி. 27, 165). |
| மற்கு | maṟku n. cf. makṣa. Wrath, anger; கோபம். (அக. நி.) |
| மற்குணம் | maṟkuṇam n. <>matkuṇa. Bug; மூட்டுப்பூச்சி. மற்குணத் தொகுதிபேரற்பிசைந்து (பாரத. வாரண. 9). |
| மற்கூத்து | maṟ-kūttu n. <>மல்2+. Krṣṇa's dance. See மல்2. 4(சிலப். 3, 14, உரை.) . |
| மற்கோல் | maṟkōl n. cf. மற்கு. Hatred, enmity; பகை. (அக. நி.) |
| மற்சம் | maṟcam n. <>matsya. 1. Fish; மீன். (திவா.) 2. Pisces of the zodiac; 3. See மற்சாதனம். |
| மற்சரம் | maṟcaram n. <>matsara. 1. Envy; பொறாமை. (சங். அக.) 2. Rivalry; |
