Word |
English & Tamil Meaning |
|---|---|
| மற்சரி - த்தல் | maṟcari- 11 v. intr. <>matsara. To compete; போட்டியிடுதல். Loc. |
| மற்சாதனம் | maṟcātaṉam n.<>matsyāsana. (Yōga.) A posture which consists in sitting with one foot pressed against the abdomen and with the other foot pressed close to the thigh against the ground, the hands passing behind and clasping the feet crosswise; ஒருகாலை வயிற்றில் அழுத்தி மடித்தும் மற்றைக்காலைத் தொடையருகே யூன்றியும் கைமாறிப் புறங்காலைக் கட்டியிருக்கும் ஆசனவகை. (தத்துவப். 107, உரை.) |
| மற்சியம் 1 | maṟciyam n. <>matsya. See மற்சம். (இலக். அக.) . |
| மற்சியம் 2 | maṟciyam n. See மச்சம், 2. Colloq. . |
| மற்பயிலிடம் | maṟ-payil-iṭam n. <>மல்2+. Ground where athletic exercises are practised gymnasium; மல்வித்தை கற்குங் கூடம். (பிங்.) |
| மற்ற | maṟṟa adj. <>மற்று. See மற்றை. மற்றவுயிர்கள். Colloq. . |
| மற்றது | maṟṟatu n. <>id. The other; ஏனையது. |
| மற்றநாள் | maṟṟa-nāḷ n. <>மற்ற+. 1. See மற்றாநாள், 1. . 2. Day after to-morrow; |
| மற்றப்படி | maṟṟa-p-paṭi adv. <>id.+. Else, otherwise; on the other hand; வேறுவகையில். Mod. |
| மற்றம் | maṟṟam n. Low-lying land sloping towards a river; ஆற்றோரத்தில் சரிந்து தாழ்ந்துள்ள நிலம். (செந். xiii, 172.) |
| மற்றவன் | maṟṟavaṉ n. <>மற்ற. The other one; ஏனையவன். |
| மற்றாநாள் | ma n. <>மறு3+ஆ-+. 1. Next day, morrow; மறுநாள். 2. Day after the next; |
| மற்று | maṟṟu part. 1. An expletive; ஓர் அசைநிலை. (தொல். சொல். 264). 2. A disjunctive; 3. A term meaning other, another; 1. Again; 2. Subsequently, afterwards; 3. See மற்றப்படி. |
| மற்றும் | maṟṟum adv. <>மற்று+. 1. Besides; மேலும். 2. Again; |
| மற்றும்படி | maṟṟum-paṭi adv. <>id.+. See மற்றப்படி. (J.) . |
| மற்றை | maṟṟai adj. <>id. Other; பிற. (நன். 434.) |
| மற்றைப்படி | maṟṟai-p-paṭi adv. See மற்றப்படி. . |
| மற்றொழில் | maṟṟoḻil n. <>மல்2+தொழில். Art of wrestling; மல்வித்தை. மற்றொழிலுந் தேர்த்தொழிலும் (சீவக. 1795). |
| மற்றொன்று | maṟṟoṉṟu n. <>மற்று+. Another thing or matter; பிறிதொன்று. வற்றொன்று குழினும் (குறள், 380). |
| மற்றொன்றுவிரித்தல் | maṟṟoṉṟu-virittal n. <>மற்றொன்று+. Digression, introducing extraneous matter, one of ten nūṟ-kuṟṟam, q.v.; நூற்குற்றம் பத்தனுள் எடுத்துக்கொண்ட விஷயத்தை விடுத்துப் பிறிதொன்று கூறுதலாகிய குற்றம். (நன். 12.) |
| மற்றோ | maṟṟō int. Word indicative of surprise or pity; அதிசயவிரக்கங்களைக் குறிக்குஞ் சொல். (யாழ். அக.) |
| மற - த்தல் | maṟa- 12 v. tr. [T. maṟacu.] 1. To forget; அயர்த்தல். மறவற்க மாசற்றார் கேண்மை (குறள், 106). 2. To neglect, disregard; 3. To put an end to; to give up; |
| மறக்கருணை | maṟa-k-karuṇai n. <>மறம்1+. Divine grace that chastises, opp. to aṟa-k-karuṇai; நீக்கிரக ரூபமான கருணை. சூரனை மறக்கருணை யீந்து பணிகொண்டிலை யெனில் (அருட்பா, v, தெய்வமணி. 21). |
| மறக்களம் | maṟa-k-kaḷam n. <>id.+. Battlefield; போர்க்களம். மறக்களமருங்கின் . . . உயிர்த்தொகை யுண்ட (சிலப். 27, 11). |
| மறக்களவழி | maṟa-k-kaḷavaḻi n. <>மறக்களம்+. (Puṟap.) Theme describing a king as ploughing the field of battle; போரிற் பகையழிக்கும் அரசனை உழும் வேளாளனாக மிகுத்துக் கூறும் புறத்துறை. (புறநா. 373.) (பு. வெ. 8, 5.) |
| மறக்களவேள்வி | maṟa-k-kaḷa-vēḷvi n. <>id.+. (Puṟap.) Theme praising a warrior killing his enemies, opp. to aṟa-k-kaḷa-vēḷvi. See களவேள்வி. (புறநா. 372.) யாங்கணு மறக்களவேள்வி செய்வோ யாயினை (சிலப். 28, 131). |
| மறக்கற்பு | maṟa-k-kaṟpu n. <>மறம்1+. Militant chastity, which impels a woman to do terrible deeds, opp. to aṟa-k-kaṟpu; பத்தினிதன் சீற்றத்தாற் கடுஞ்செயல் தோற்றுவிக்குங் கற்பு. வீரபத்தினி மறக்கற்புடையாள் (சிலப். பதிக. 42, உரை). |
| மறக்காஞ்சி | maṟa-k-kāci n. <>id.+. (Puṟap.) Theme describing a warrior who had received a wound on his breast in battle tearing open that wound and dying in utter disdain of life; போரில் விழுப்புண்பெற்ற வீரன் தன்வாழ்க்கை வேண்டாது அப்புண்ணைக் கிழித்துக் கொண்டு இறத்தலைக் கூறும் புறத்துறை. (தொல். பொ. 79, உரை.) |
