Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறக்குடி | maṟa-k-kuṭi n. <>id.+. 1. Warrior tribe; வீரகுலம். பழைய மறக்குடியிற் பேதையானவள் (பு. வெ. 8, 21, உரை). 2. The Maṟava caste; |
| மறங்கு - தல் | maṟaṅku- 5 v. intr. cf. மலங்கு-. To be bewildered, confused; கலங்குதல். கீழ்தான் . . . மறங்குமா மற்றொன் றுரைத்து (நாலடி, 342). |
| மறச்செவி | maṟa-c-cevi n. <>மறம்1+. Ear that listens to sinful things; பாவம் பயக்கும் மொழிகளைக் கேட்குங் காது. அறச்செவி திறந்து மறச்செவி யடைத்து (மணி. 9, 60). |
| மறத்தி | maṟatti n. Fem. of மறவன். 1. Woman of Maṟava caste; மறக்குடிப்பெண். 2. Woman of desert tracts; 3. Woman of hilly tracts; |
| மறத்துப்போ - தல் | maṟattu-p-pō- v. intr. <>மறு-+. See மறுத்துப்போ-. (W.) . |
| மறத்துறை | maṟa-t-tuṟai n. <>மறம்1+. 1. Sinful way; பாவநெறி. மறத்துறை கடிந்தவேன் மன்னர் மன்னனே (பாகவத. 1, பரீட்சித்துச்சாப. 40). 2. Heroic exploits; |
| மறதி | maṟati n. <>மற-. Forgetfulness; நினைவின்மை. |
| மறதிக்காரன் | maṟati-k-kāraṉ n. <>மறதி+. Forgetful person; ஞாபகசக்தி குறைந்தவன். (W.) |
| மறநிலைப்பொருள | maṟa-nilai-p-poruḷ n. <>மறம்1+நிலை+. Wealth of a king obtained by victory, tribute, penalty, fine, etc.; வெற்றி, திறை, தண்டம் முதலியவற்றால் அரசன் தேடிய பொருள். (பிங்.) |
| மறநிலையறம் | maṟa-nilai-y-aṟam n. <>id.+id.+. Kingly virtue of vanquishing enemies in the interests of his country; அரசன் பகையறுத்து நாட்டினைக் காவல்புரியும் அறச்செயல். (பிங்.) |
| மறநிலையின்பம் | maṟa-nilai-y-iṉpam n. <>id.+id.+. Happiness of a king who wins his bride by feat of arms, as bull-baiting, archery, etc.; வீரச்செயல், ஏறுதழுவல், இலக்கமெய்தல், வலிதிற்கோடல் முதலியவற்றால் விரும்பிய பெண்ணை அரசன் அடையும் இன்பம். (பிங்.) |
| மறப்பிலி | maṟappili n. <>மறபபு+. God; கடவுள். (யாழ். அக.) |
| மறப்பு 1 | maṟappu n. <>மற-. [T. marappu.] See மறதி. மறப்பறியே னொள்ளமர்க் கண்ணாள் குணம் (குறள், 1125). . |
| மறப்பு 2 | maṟappu n. <>மறு-. Corr. of மறுப்பு. Colloq. |
| மறப்புகழ் | maṟa-p-pukaḻ n. <>மறம்1+. Renown got by valourous deeds; வீரச்செயலால் வருங் கீர்த்தி. மறப்புகழ் நிறைந்த மைந்தினோன் (புறநா. 290). |
| மறப்புலி | maṟa-p-puli n. <>id.+. 1. Ferocious tiger; கொடிய புலி. மேற்சென்று பாய்தல் மறப்புலி தனக்கு மாமோ (சீவக. 752). 2. Lion; |
| மறம் 1 | maṟam n. perh. மறு-. 1. Valour, bravery; வீரம். மறவா ளேந்திய நிலந்தரு திருவினெடியோன் (சிலப். 28, 2). 2. Anger, wrath; 3. Enmity, hatred; 4. Strength, power; 5. Victory; 6. War; 7. Killing; murder; 8. Yama; 9. Injury; 10. Vice, evil, sin; 11. A limb of kalampakam describing the refusal by Maṟavars to give a girl of their clan to a king, in marriage; 12. See மறக்குடி, 2. |
| மறம் 2 | maṟam n. <>மற-. Bewilderment; மயக்கம். (பிங்.) |
| மறமலி | maṟa-mali n. <>மறம்1+மலி-. Elephant; யானை. (திவா.) |
| மறமறெனல் | maṟamaṟeṉal n. Onom. expr. of crashing; ஓர் ஒலிக்குறிப்பு. (யழ். அக.) |
| மறமுல்லை | maṟa-mullai n. <>மறம்1+. (Puṟap.) Theme describing the wrath of a warrior resenting the act of his king in trying to reward his selfless heroic deeds in a battle; வேந்தன் வேண்டியது கொடுப்பவும் கொள்ளாத வீரனது பயன்கருதாநிலையைக் கூறும் புறத்துறை. (பு. வெ. 8, 27.) |
