Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறுசுற்றாணி | maṟu-cuṟṟāṇi n. <>மறுசுற்று+ஆணி. Bolt and nut; screw; ஆணிவகை. Mod. |
| மறுசுற்று | maṟu-cuṟṟu n. <>மறு3+. See மறுசுற்றாணி. Mod. . |
| மறுசெய்தி | maṟu-ceyti n. <>id.+. See மறுசொல். Colloq. . |
| மறுசொல் | maṟu-col n. <>id.+. Reply, answer; உத்தரம். மறுசொ லெத்திறத்தினாற் சொல்லுதும் (சீகாளத். பு. கண்ணப்ப. 120) |
| மறுத்தரவு | maṟuttaravu n. <>மறுத்தா-. Bringing back; மீட்கை. யாதொன்று மென்கண் மறுத்தர வில்லாயின் (கல¦த்.81) |
| மறுத்தா - தல் [மறுத்தருதல்] | maṟu-t-tā v. tr. <>மறு-+. To restore, recover bring back; மீட்டல். மையற்ற படிவத்தான் மறுத்தர லொல்வதோ (கலித்.15) |
| மறுத்து | maṟuttu adv. <>id. 1. In return; மீள. மறுத்தின்னா செய்யாமை (குறள், 312). 2. Again; 3. Moreover; |
| மறுத்துப்போ - தல் | maṟuttu-p-pō- v. intr. <>id.+. To cease giving milk, as a cow; to stop bearing, as a tree; பலன் கொடுக்காமற்போதல். (W.) |
| மறுத்துமொழிநிலை | maṟuttu-moḷi-nilai n. <>id.+. (Rhet.) A figure of speech; ஒர் அணிவகை. (பிங்) |
| மறுத்துரை - த்தல் | maṟutturai v. tr. <>id.+உரை To contradict; ஆட்சேபித்தல். மறுத்துரைப்பதுபோ னெஞ்சொடு புணர்த்தும் (தொல். பொ.196). |
| மறுதரவு | maṟu-taravu n. <>மறுதா-. See மறுத்தரவு மறுதர வில்லாளையேத்திநாம் பாட (சிலப். 24, பாட்டுமடை, இறுதி) . |
| மறுதலி - த்தல் | maṟutali- 11 v. <>மறுதலை-. tr. To deny, disavow; மறுத்தல்.-intr. 1. To vary, deviate; 2. To contradict; 3. See மறுக்களி2-. 4. To apostatize; |
| மறுதலிப்பு | maṟutalippu n. <>மறுதலி-. (W.) 1. Denial, refusal; மறுக்கை. 2. Deviation from the original; |
| மறுதலை 1 | maṟu-talai n. <>மறு3+. 1. Opposite side; எதிர்க்கட்சி. தன்னை மறுதலை பழித்த காலையும் (நன். 53) 2. Opponent's point of view or argument. See பூர்வபட்சம். மறுதலைக் கடாஅ (தொல். பொ. 659). 3. Sense of contrariety; 4. Enemy, antagonist; 5. Equal; 6. Second time; |
| மறுதலை 2 - த்தல் | maṟutalai- 11 v. <>மறுதலை. intr. To appear on the opposite side; to balance; எதிரிட்டுத் தோன்றுதல். நாணமுத னான்கு மண்டியொருசார் மறுதலைப்ப (திருவிளை வளையல்.23)-tr. To deny, disavow; |
| மறுதலைக்காய் | maṟu-talai-k-kāy n. <>id.+. Second yield or crop of vegetables, etc., after the seasonal yield; பருவவிளைச்சற்குப்பின் காய்க்கும் காய்கறி முதலியன. Loc. |
| மறுதலைப்பெண் | maṟu-talai-p-peṇ n. <>id.+. See மறுதாரம் அரவ மறுதலைப்பெண் கூட்டுவிக்கும் (சினேந்.267) . |
| மறுதா - தல் [மறுதருதல்] | maṟu-tā- v. tr. <>மறு-+. 1. See மறுத்தா-. . 2. See மறு-, 1. மறுதரற்கரிய (நற். 32). |
| மறுதாக்கல் | maṟu-tākkal n. <>மறு3+. Loc. 1. Rejoinder; எதிருரை. 2. Reply; |
| மறுதாய் | maṟu-tāy n. <>id.+. Step-mother; மாற்றாந்தாய். (W.) |
| மறுதாரம் | maṟu-tāram n. <>id.+. Second wife; இரண்டாந்தாரம். Loc. |
| மறுதேசம் | maṟu-tēcam n. <>id.+. Foreign country; அன்னியநாடு. (W.) |
| மறுதொழில் | maṟu-toḷil n. <>id.+. Sin; பாவம். மறுதொழில் புரியும் ... நிருதர் (சேதுபு. சங்கர.86) |
| மறுநனை - தல் | maṟu-naṉai v. intr. <>id.+. To be drenched; to be completely wet; மறுபாடுருவ நனைதல் நான் மறுநனைந்து ப்ரீதிப்ரேரிதனாய் (ஈது, 2, 6, 4). |
| மறுநாள் | maṟu-nāḷ n. <>id.+. [ T. maru-nadu M. marunāl.] Next day, morrow; அடுத்த தினம். Colloq. |
| மறுநோய் | maṟu-nōy n. <>மறு-+. 1. Disease in the relapsed stage; மறுக்களித்தவியாதி. மறுநோய் மக்களி னாழ்ந்த மனத்தன் (பெருங். மகத.19, 48). 2. Sub-conscious impression due to past karma; |
