Word |
English & Tamil Meaning |
|---|---|
| மறுப்ப | maṟuppa part. <>id. A term of comparison ; ஒர் உவம வாய்பாடு. (தொல்.பொ. 291.) |
| மறுப்படு - தல் | maṟu-p-paṭu- v. intr. <>மறு2+. 1. To be blamed; வசையுறுதல். 2. To be injured, spoiled; 3. To be spotted; 4. To suffer; |
| மறுப்பு | maṟuppu n. <>மறு-. 1. Refusal, denial; மறுக்கை. 2. Objection, opposition; 3. Refutation; 4. Reploughing; 5. Ploughing crosswise to the first ploughing; |
| மறுபடி | maru-paṭi <>மறு3+. n. Answer, reply; விடை. Nā.--adv. |
| மறுபடியும் | maṟu-paṭi-y-um adv. <>id.+. Again; மீளவும். |
| மறுபத்தியம் | maṟu-pattiyam n. <>id.+. Light diet or regimen after a course of medicine ; மருந்துண்டலை விட்டபின் சிலநாள்வரை நியமமாகஉட்கொள்ளும் ஆகாரம். (பைஷஜ.) |
| மறுபாடு | maṟu-pāṭu n. <>id.+. Back, the other side; பின்பக்கம். மறுபாடுருவத் தைத்து (ஈடு, 5, 6, 7). |
| மறுபாடுருவ | maṟupāṭuruva adv. <>மறு பாடுருவு-. Completely, well; நன்றாக. மறுபாடுருவவேத்தி (ஈடு, 2, 6, 3). |
| மறுபாடுருவு - தல் | maṟupāṭuruvu- v. intr. <>மறுபாடு+. To penetrate to the other side ; ஊடுருவிப்போதல் மராமரங்களேழும் மருபாடுருவும் படியாக (ஈடு, 2, 6, 9). |
| மறுபாவி | maṟu-pāvi n. <>மறு2+. Enemy; பகைவன். (W.) |
| மறுபிழைப்பு | maṟu-piḷaippu n. <>மறு3+. Narrow escape from serious accident, recovery from serious illness, as re-birth; கடுநோய் முதலிய ஆபத்தினின்று தப்பிப் பிழைக்கை. (W.) |
| மறுபிறப்பு | maṟu-piṟappu n. <>id.+. 1. Future birth; இனி உண்டாகப் போகும் சனனம். மதுரையர் மன்னன் மறுபிறப்போட மறித்திடுமே (திருவாச. 36, 2). 2. Past birth; |
| மறுபிறவி | maṟu-piṟavi n. <>id.+. 1. See மறுபிறப்பு. 1. மறுபிறவி தவிரத் திருத்தி (திவ், பெரியாழ். 5, 3, 6). . 2. New birth, regeneration; |
| மறுபுலம் | maṟu-pulam n. prob. மரு2+. Desert tract; பாலைநிலம். (பிங்.) |
| மறுபுலிபாய்தல் | maṟu-puli-pāytal n. <>மறு3+புலி+. Death of cattle due to terror in dreaming that it was caught by the tiger from which it escaped during the day; பகலில் புலியினின்றும் தப்பிய கால்நடை அன்றிரவே புலி பாய்வதாகக் கனவுகண்டு அந்தப் பீதியால் இறக்கை. Nāṉ. |
| மறுபேச்சு | maṟu-pēccu n. <>id.+. 1. Countermand; word that annuls or cancels; மாற்றிக் கூறும் வார்த்தை. (W.) 2. Gainsaying; 3. See மறுசொல். நான் சொன்னதற்கு அவன் மறுபேச்சுப் பேசவில்லை. |
| மறுபொருளுவமை | maṟu-poruḷ-uvamai n. <>id.+பொருள்+. (Rhet.) A figure of speech. See பிரதிவஸ்தூபமை. (தண்டி. 30, உரை.) |
| மறுபோகம் | maṟu-pōkam n. <>id.+. Second crop in the year; ஆண்டின் இரண்டாமுறை விளைவு. (W.) |
| மறுமணம் | maṟu-maṇam n. <>id.+. Remarriage, as of a widow; கணவன் இறந்தபின் மீண்டுஞ் செய்து கொள்ளும் கலியாணம். Mod. |
| மறுமனசுபடு - தல் | maṟu-maṉacu-paṭu- v. intr. <>id.+மனசு+. To change mind; to abandon one's decision; முன்னிருந்த எண்ணம் மாறுதல். அவன் மறுமனசுபடுவதற்கு முன்னே எல்லை நடந்து கொண்டானாய்த்து (திவ்.பெரியதி, 6, 8, 1, உரை). |
| மறுமாடி | maṟu-māṭi n. <>id.+. 1. Gable of a house; வீட்டின் உத்தரமட்டத்துக்கு மேலுள்ள அடைப்புச் சுவர். (W.) 2. Second storey; 3. Ridge; 4. Cleft in a mountain; |
| மறுமாலைசூடுதல் | maṟu-mālai-cūṭutal n. <>id.+மாலை+. Marriage ceremony repeated on the caṣti-pūrtti of the husband; கணவனின் சஷ்டிபூர்த்தியில் நடக்கும் விவாகச்சடங்கு. Loc. |
| மறுமாற்றம் | maṟu-māṟṟam n. <>id.+. [T. marumāṭa K. marumāṭu.] 1. See மறுசொல். மறுமாற்ற மற்றொருவர் கொடுப்பாரின்றி (பெரியபு. திருஞான. 474). . 2. Curry; |
| மறுமுகம் | maṟu-mukam n. <>id.+. 1. Different direction; வேறு பக்கம். (W.) 2. Face of a stranger; |
| மறுமுட்டுப்பெறு - தல் | maṟu-muṭṭu-p-peṟu- v. intr. <>id.+. To have a hold or advantage elsewhere; வேறோரிடத்துப் பயன் பெறுதல். மருமுட்டுப்பெறாதபடி உடைந்தோடும் (ஈடு, 1, 7, 11). |
