Word |
English & Tamil Meaning |
|---|---|
| மனக்காய்ச்சல் | maṉa-k-kāyccal n. <>id.+. See மனவெரிச்சல். (யாழ். அக.) . |
| மனக்காவல் | maṉa-k-kāval n. <>id.+. Strength of mind, as the guard of chastity; கற்பினைக் காக்கும் மனநிறை. கற்புக்கு மதிட்காவலா, மனக்காவலா? |
| மனக்கிடக்கை | maṉa-k-kiṭakkai n. <>id.+. Idea, inclination, thought; உள்ளக்கருத்து. (W.) |
| மனக்கிடை | maṉa-k-kiṭai n. <>id.+. See மனக்கிடக்கை. (W.) . |
| மனக்கிலேசம் | maṉa-k-kilēcam n. <>id.+. See மனத்துயர். . |
| மனக்குத்து | maṉa-k-kuttu n. <>id.+. See மனத்துயர். (யாழ். அக.) . |
| மனக்குருடு | maṉa-k-kuruṭu n. <>id.+. Mental blindness, ignorance; அறிவின்மை. (W.) |
| மனக்குழப்பம் | maṉa-k-kuḻappam n. <>id.+. See மனக்கலக்கம். Colloq. . |
| மனக்குள்ளம் | maṉa-k-kuḷḷam n. <>id.+. (யாழ். அக.) 1. Trick; தந்திரம். 2. Deceit; |
| மனக்குறிப்பு | maṉa-k-kuṟippu n. <>id.+. 1. Idea, intention; உட்கருத்து. நின் மனக்குறிப்பை நின் முகந்தானே காட்டிக் கொடாநிற்கும் (கலித். 95, உரை.) See மனத்திட்டம், 1. (W.) |
| மனக்குறை | maṉa-k-kuṟiai n. <>id.+. 1. Grief; வருத்தம். மனக்குறையைச் சகியே சொன்னேன் (தனிப்பா. i, 326, 24). 2. Dissatisfaction, discontent, umbrage; |
| மனக்கூர்மை | maṉa-k-kūrmai n. <>id.+. Sagacity, acumen; நுட்ப புத்தி. (யாழ். அக.) |
| மனக்கொதி | maṉa-k-koti n. <>id.+. See மனவெரிச்சல். (யாழ். அக.) . |
| மனக்கொள்(ளு) - தல் | maṉa-k-koḷ- v. tr. <>id.+. To understand; to realise; நன்கறிதல் இதனை மனக் கொணீ (கம்பரா. சூளா. 29). |
| மனக்கோட்டம் | maṉa-k-kōṭṭam n. <>id.+. 1. Crookedness of mind; புத்தியின் கோணல். மாந்தர் மனக்கோட்டந் தீர்க்குநூன் மாண்பு (நன். 25). 2. Envy, jealousy; |
| மனக்கோட்டரவு | maṉa-k-kōṭṭaravu n. <>id.+. Lowness of spirits; தைரியக் குறைவு. (W.) |
| மனக்கோட்டை 1 | maṉa-k-kōṭṭai n. <>id.+கோடு-. Long sulks; புலவிநீட்டம். அழிந்த மன்கோட்டையர் (பரிபா, 10, 57). |
| மனக்கோட்டை 2 | maṉa-k-kōṭṭai n. <>id.+கோட்டை. Building castles in the air; vain imaginings; விணெண்ணம். Colloq. |
| மனக்கோண் | maṉa-k-kōṇ n. <>id.+கோணு-. Envy; அழுக்காறு (நாமதீப. 615.) |
| மனக்கோழை | maṉa-k-kōḻai n. <>id.+. Coward; தைரியமில்லாதவ-ன்-ள். எதிரிவரி னோடிப் பதுங்கிடு மனக்கோழை (அறப். சத. 12). |
| மனக்கோள் | maṉa-k-kōḷ n. <>id.+. See மனக்குறிப்பு. மனக்கோ ணினக்கென வடிவு வேறிலையே (பரிபா. 4, 56). . |
| மனங்கசி - தல் | maṉaṅ-kaci- v. intr. <>id.+. To melt, as the heart; to be tender; மனமிறங்குதல். |
| மனங்கருகு - தல் | maṉaṅ-karuku- v. intr. <>id.+. To be displeased; வெறுப்படைதல். (W.) |
| மனங்கரை - தல் | maṉaṅ-karai- v. intr. <>id.+. 1. To melt, as the heart; நெஞ்சிளகுதல். 2. To relent; 3. To be sorry; |
| மனங்கு 1 | maṉaṅku n. <>மணங்கு. A standard measure. See மணங்கு. (யாழ். அக.) |
| மனங்கு 2 | maṉaṅku n. Shoulder blade; தோட்பட்டை. (யாழ். அக.) |
| மனங்குத்துதல் | maṉaṅ-kuttutal n. <>மனம்+. Remorse; compunction of mind; prick of conscience; தன் குற்றம்பற்றி மனத்தில் தோன்றும் கழிவிரக்கம். (W.) |
| மனங்குவி - தல் | maṉaṅ-kuvi- v. intr. <>id.+. 1. To attain peace of mind or tranquillity; மனவமைதி கொள்ளுதல். (யாழ். அக.) 2. To be depressed in spirits; |
| மனங்குறாவு - தல் | maṉaṅ-kuṟāvu- v. intr.<>id.+. To be piqued or dissatisfied; to take umbrage; வெறுப்படைதல். (W.) |
| மனங்கூசு - தல் | maṉaṅ-kūcu- v. intr. <>id.+. To be shy, diffident; மனம் பின்னிடைதல். |
| மனங்கூம்பு - தல் | maṉaṅ-kūmpu- v. intr. <>id.+. 1. To be weary or dejected; உற்சாகங்குன்றுதல். 2. See மனங்குவி-, 1. (யாழ். அக.) |
