Word |
English & Tamil Meaning |
---|---|
மாசகதாசகம் | mācakatācakam n. [T. māsikatāsika.] Coaxing; பசப்புகை. மாசகதாச கம்பண்ணித் தன்கையிற் போட்டுக்கொண்டான். Loc. |
மாசகந்தாயம் | māca-kantāyam n. <>மாசம்+. Monthly payment; மாசந்தோறும் பாகம் பாகமாகச் செலுத்துந் தொகை. (W.) |
மாசங்கம் | mācaṅkam n. prob. māsa+aṅga. Menses; மாதவிடாய். (W.) |
மாசச்சந்துக்கட்டு | māca-c-cantu-k-kaṭṭu n. <>மாசம்+. The last days of a month when there may be difficulty for money; பணமுடையேற்படும் மாதமுடிவிலுள்ள நாட்கள். |
மாசசிவராத்திரி | māca-civarāttiri n. <>id.+. Civarāttiri, occurring in every month; ஒவ்வொரு மாதமும் வரும் சிவராத்திரி. (பஞ்.) |
மாசதிர் | mā-catir n. <>மா4+. Great wonder; பெரிய அதிசயம் மாசதிரிது பெற்று (திவ். திருவாய். 2, 7, 1). |
மாசப்பிசகு | māca-p-picaku n. <>மாசம்+. Mistake in calculating the time of delivery due to error in fixing the date of conception; கர்ப்பந்தரித்த காலம் உறுதிப்படாததால் பிரசவகாலத்தைக் கணக்கிடுவதில் நேரிடும் பிசகு. |
மாசப்பிறப்பு | māca-p-piṟappu n. <>id.+. Beginning of a month; மாதத்தொடக்கம். |
மாசம் | mācam n. <>māsa. 1. A twelfth part of a year; ஆண்டின் பன்னிரண்டிலொரு பகுதி. 2. Solar month, of which there are twelve, viz., Cittirai, Vaikāci, āṉi, āṭi, āvaṇi, Puraṭṭāci, Aippaci, Kārttikai, Mārkaḻi, Tai, Māci, Paṅkuṉi; 3. Lunar month; |
மாசமாசம் | māca-mācam adv. <>மாசம்+. Monthly; மாதந்தோறும். |
மாசமானம் | māca-māṉam n. <>māsamāna. Year; வருடம். (யாழ். அக.) |
மாசர் | mācar n. See மகசர். Loc. . |
மாசர்நாமா | mācar-nāma n. <>U. mahzarnāma. Representation in writing signed by several persons. see மகசர். (W.) |
மாசலம் | mācalam n. <>mācala. (சங். அக.) 1. Disease; நோய். 2. Crocodile; |
மாசலன் | mācalaṉ n. <>mācala. Thief; கள்வன். (சங். அக.) |
மாசவிடாய் | māca-viṭāy n. <>மாசம்+. Menstruation; மாதந்தோறும் தோன்றும் பூப்பு. |
மாசறு - தல் | mācaṟu- v. intr. <>மாசு+அறு-. To be blameless or spotless; குற்றநீங்குதல். மாசற்றார் கோள (குறள், 311). |
மாசனம் 1 | mācaṉam n. <>maliā-jana. 1. Multitude of people; மக்கள்தொகுதி. மாசனங் கார்கெழு கடலெனக் கலந்த (சீவக. 828) 2. Royal counsellors including ministers and priests; |
மாசனம் 2 | mācaṉam n. <>U. mājun. A sweet preparation of gajā; கஞ்சாவைக்கொண்டு செய்யுள் ஒருவகை லாகிரிப்பண்டம். (W.) |
மாசாத்தன் | mācāttaṉ n. <>மா4+சாத்தன்1. Aiyaṉār; ஐயனார். (சிலப். 9, 12, அரும்.) |
மாசாத்துவன் | mā-cāttuvaṉ n. <>id.+சாத்து3. A trading family; வணிகருள் ஒரு குடியினர் (சிலப். 1, 33, உரை.) |
மாசாந்தம் 1 | mā-cāntam n. <>மா4+சாந்தம்1. Great patience; பெரும் பொறுமை. (W.) |
மாசாந்தம் 2 | mācāntam n. <>māsānta. 1. The end of a month; மாதமுடிவு. (W.) 2. New moon; 3. Worship performed at a shrine on a particular day of the week, as Friday, occurring last in a month; |
மாசாந்தரம் | mācāntaram adv. <>māsāntara. Monthly, every month, per mensem; மாசந்தோறும். Colloq. |
மாசாமாசம் | mācāmācam adv. See மாசம். Colloq. . |
மாசாலக்கள்ளி | mācāla-k-kaḷḷi n. <>மாசாலம்+. Dissimulating, unfaithful woman; மாயக்காரி. (W.) |
மாசாலம் | mā-oalam n. <>மா4+. (W.) 1. Dissimulation; ஏமாற்றுவித்தை. 2. Whining; |
மாசி 1 | māci n. prob. மாசு1. 1. Mist, cloud; மேகம். ஆதி சோவுடை மாசி யவனென (பிரபுலிங். முனிவர.19). கொடிமாசி. (W.) 2. cf. மரிசி. New ridge of paddy field; 3. A sea-fish; |
மாசி 2 | māci n. <>māgha. 1. The 11th solar month=February-March; பதினொராம் மாதம். மாசி நின்ற மாகூர் திங்கள் (பதிற்றுப். 59, 2). 2. The 10th nakṣatra. |