Word |
English & Tamil Meaning |
---|---|
மாசிக்கடா | māci-k-kaṭā n. <>மாசி2+. Fat bull, as fed on straw available in plenty in the month of Māci; மாசிமாதத்தில் மீகுதியாகக் கிடைக்கும் வைக்கோலைத் தின்று கொழுத்த காளை மாசிக்கடாவும் மார்கழி நம்பியானும். Loc. |
மாசிக்காய் | māci-k-kāy n. [T. mācikāya.] See மாசக்காய். (பதார்த்த.1015.) . |
மாசிக்கார் | māci-k-kār n. <>மாசி2+. A kind of kār paddy; கார்நெல்வகை. Loc. |
மாசிக்கால்வார் - த்தல் | māci-k-kāl-vār- v. intr. <>id.+. To sow akatti seeds in the month of Māci for raising akatti plants to serve as supports for betel-vines; வெற்றிலைக்கொடி படர்தற்காக அகத்திமரம் உண்டாக மாசிமாதத்தில் அகத்திவிதையைப் பதித்தல். Loc. |
மாசிக்கோடை | māci-k-kōṭai n. <>id.+. Loc. 1. Summer crop of paddy, as harvested in Māci; மாசிமாதத்து நெல்விளைவு. 2. The month of Māci, as part of the summer season; |
மாசிகம் | mācikam n. <>māsika. Monthly ceremony for a deceased person, performed during the first year after death; இறந்தோர் பொருட்டு இறந்த வருடத்தில் மாசந்தோறும் செய்யும் சிராத்தம். (W.) |
மாசிகை | mācikai n. cf. mācikā. Bird; பறவை. (சங். அக.) |
மாசிங்கம் | māciṅkam n. <>மா2+šrṅga. Horn of a stag; கலைமான் கொம்பு (சங். அக.) |
மாசிதறிருக்கை | mā-citaṟirukkai n. <>id.+சிதறு+இருக்கை. Camp for the liberal distribution of animals captured from one's enemy; பகைவரிடத்துக் கவர்ந்த யானை பசு முதலிய விலங்குகளை இரப்போர்க்கு அளவிறந்து கொடுக்கும் பாசறை. இரப்போர்க் கீதறண்டா மாசிதறிருக்கை (பதிற்றுப். 76, 8). |
மாசிபத்திரி | māci-pattiri n. <>mācī-patrī. 1. Indian absinth, l.sh., Artemisia vulgaris; வாசனைப்பூடுவகை. (பதார்த்த. 322.) 2. Wormwood, aromatic herb, Artemisia absinthium; 3. Madras absinth, Grangea maderaspatna; |
மாசிமகம் | māci-makam n. <>மாசி2+. The full-moon day in māci, when the moon is generally in makam; மாசிப் பௌர்ணமியும் மகநட்சத்திரமும் கூடிய புண்ணியதினம். (W.) |
மாசிமழை | māci-maḷai n. <>id.+. Mango flowers, as falling in māci; மாசிமாதத்தில் உதிரும் மாம்பூக்கள். மாசிமழை யுருட்டு. |
மாசியம் 1 | māciyam n. See மாசிகம். (W.) . |
மாசியம் 2 | māciyam n. See மாசனம்2. Loc. . |
மாசிலாமணி | mācilā-maṇi n. <>மாசு1 +இல்+ஆ neg.+. 1. Spotless gem; மறுவற்றமணி. 2. God, as šiva; |
மாசினி | māciṉi n. A kind of fish; மீன்வகை. மாசினி செங்கண்ணன் (பறாளைப். பள்ளு. 74). |
மாசீம் | mācim n. See மாசனம்2. Loc. . |
மாசு 1 | mācu n. [T. māsi K. māsu M. māju Tu. maye.] 1. Spot; மறு. உள்ள மாசறக் களைவோர் (ஞானா. 39, 14). 2. Stain, taint, tarnish; 3. Defect, fault, flaw; 4. Perversity; 5. Blackness; 6. Darkness; 7. Cloud; 8. Sin; 9. Evil; 10. Dust; 11. The Milky Way; 12. cf. ஆசு1. Trifle; 13. Ordure; 14. Afterbirth; 15. Bile; 16. Phlegm; 17. Flim in the eye; 18. Cord of a net; |
மாசு 2 | mācu n. <>E. Mash, dough; குழப்பின மா. Loc. |
மாசுகம் | mācukam n. n. Sponge-gourd. See பீர்க்கு. (மலை.) . |
மாசுணம் | mācuṇam n. perh. mahat+ašana. 1. Rock-snake, Pythonidac; பெரும்பாம்பு. துஞ்சுமரங் கடுக்கும்மாசுணம் விலங்கி (மலைபடு. 261). 2. Snake; |
மாசுதீர்ப்பான் | mācu-tīrppāṉ n. <>மாசு1+. Barber; மயிர்வினைஞன். (சது.) |
மாசுமறு | mācu-maṟu n. <>id.+. Spot, fault; குற்றம். (பதார்த்த. 870.) |