Word |
English & Tamil Meaning |
---|---|
மாட்டுவாகடம் | māṭṭu-vākaṭam n. <>id.+. Indigenous veterinary science ; மாட்டினநோய்களைப்பற்றிக் கூறும் வைத்திய சாத்திரம். |
மாட்டுவாரம் | māṭṭu-vāram n. <>id.+. System of sharing naja produce, in which the tenant's portion is determined by the number of yoke of oxen that he furnishes ; குடியானவன் உதவும் உழவுமாட்டுக்குத் தக்கபடி மேல்வார்க்காரன் அவனுக்குக் கொடுக்கும் மாசூலின் பங்கு . Loc. |
மாட்டுவி - த்தல் | māṭṭuvi- 11 v. tr. caus. of மாட்டு2-+. To cause to be ruined ; அழியச்செய்தல். மதுவனந் தன்னை யின்னே மட்டுவித்தனை நீ யென்னா (கம்பரா. திருவ்வடி. 23) . |
மாட்டெறி - தல் | māṭṭeṟi- v. intr. <>மாட்டு2 To ascribe, attribute; to apply ; ஏறிட்டுத் கூறுதல் பரத்வத்தை அவன் தலையிலே மாட்டெறிந்தார் (ஈடு. 2, 2, 4) . |
மாட்டெறிதல் | māṭṭeṟital n. <>id.+. 1.(Gram) See மாட்டு 3,1. . 2.(Gram) See மாட்டெறிந்தொழுகல். 3. (Legal.) docketing on a deed; |
மாட்டெறிந்தொழுகல் | māṭṭeṟintoḻu-kal n. <>மாட்டெறி -+. (Gram.) Application of the principle of one sūtra to another when their subjects are similar, one of 32 utti , q.v. ; முப்பத்திரண்டு உத்திகளுள் உத்திகலுள் ஒன்றுனதும் ஒரு சூத்திரத்திற் கூறிய விதியை அதனையொத்த சூத்திரங்கட்கும் இணைத்தும் கொள்வதுமான உத்தி (நன்.14) . |
மாட்டேற்று | māṭṭēṟṟu n. <>மாட்டு3+. 1. (Gram.) See மாட்டெறிந்தொழுகல். . 2.(Legal) See மாட்டெறிதல். 3. Allusion, reference ; |
மாட்டேறு | māṭṭēṟu n. <>id.+. (Gram.) See மாட்டெறிதல், 1, 2. (நன். 164, உரை.) . |
மாடக்குழி | māṭa-k-kuḻi n. <>மாடம்1+. Niche ; சுவரி லுள்ளடங்கிய புரை . Loc. |
மாடக்கோயில் | māṭa-k-kōyil n. <>id.+. Siva temple with narrow passage built on mounds by kōccegkaṇā ; மேட்டிடத்தில் குறுகிய வழியுள்ளாதகக் கோச்சேங்கணான் கட்டிய சிவாலயம். வடமலையனையான் மாடக்கோயிலே (தேவா, 467, 10) . |
மாடகம் | māṭakam n. Screw-pin of a lute ; யாழின் முறுக்காணி. இடக்கை நால்விரல் மாடகந் தழீஇ (சிலப், 8, 28) . |
மாடகூடம் | māṭa-kūṭam n. <>மாடம்1 Storied house ; உபரிகையுள்ள வீடு இம்மாடகூடம்... அளகையினுமிலது (பாரத. இராசகு. 12) . |
மாடநிலை | māṭa-nilai n. <>id.+. Terrace ; உபரிகை. மடாநிலை தெற்றியினிருந்தவர் (பாரத. வாரணா. 57) . |
மாடப்புரை | māṭa-p-purai n. <>id.+. See மாடக்குழி . Loc. . |
மாடப்புறா | māṭa-p-puṟā n. <>id.+. Blue rock-pigeon, species of columba ; புறாவகை (தக்கயாகப், 607, உரை) . |
மாடப்புறாக்கண்ணிறம் | māṭa-p-puṟā-k-kaṇṇiṟam n. Prob. மாடப்புறா + கண் Indian winter cherry ; See அமுக்கிரா (மூ. அ.) . |
மாடபூபதி | māṭa-pūpati n. A title of the Raja of Cochin ; கொச்சியரசாக்குரிய ஒரு பட்டப்பெயர் . Nāṉ. |
மாடம் 1 | māṭam n. [ T. mādugu K. māda M. mādam]. 1. Storied house; உபரிகையுள்ள வீடு மாடமாளிகை கோபுரங் கூடங்கள் (தேவா, 797, 7) . 2. House, mansion, hall; 3. See மாடக்கோயில் எண்டோளீசற் கெழின்மாட மெழுபது செய்து (திவ்.பெரியதி, 6, 6, 8). 4. Hut; 5. See மாடக்குழி. |
மாடம் 2 | māṭam n. <>māṣa. 1. Black gram; உழுந்து (பிங்). 2. A measure of weight of 10 kuṉṟi; |
மாடமாளிகை | māṭa-māḷikai n. <>மாடம்1 See மாடகூடம். Colloq. . |
மாடலன் | māṭalaṉ n. <>Māthara Brahmin belonging to māṭara-gotra ; மாடர கோத்திரத்துப் பிறந்த பார்ப்பனன். மாமறை முதல்வன் மாடல னென்போன் (சிலப், 15, 13, ) . |
மாடவாழை | māṭa-vāḻai n. prob. மாடன்+. Manilla hemp ; பேயன்வாழை . Loc. |
மாடவீதி | māṭa-viti n. <>மாடம்1 Main street surrounding a temple ; கோயிலைச் சுற்றியுள்ள தெரு. விண்ணுயர் மாளிகை மாடாவீதி (தேவா. 418, 1) . |
மாடன் | māṭaṉ n. <>மாடு1 1. A village deity; ஒரு சிறுதெய்வம். 2. Ignorant, stupid man; dullard; |
மாடாக்குழி | māṭā-k-kuḻi n. Corr. of See மாடக்குழி. (W.) . |