Word |
English & Tamil Meaning |
---|---|
மாத்திரைக்கோல் | māttirai-k-kōl n. <>மாத்திரை+. 1. Magic staff carried by cittar, etc.; சித்தர் முதலியோர் கையிற்கொள்ளும் மந்திரக்கோல். விலங்குசெங்கையின் மாத்திரைக்கோலும் (திருவாலவா. 13, 4). 2. Conjuror's wand; 3. Measuring rod; |
மாத்திரைச்சுருக்கம் | māttirai-c-curukkam n. <>id.+. (Rhet.) A literary device in which a word becomes a different word by shortening its sound-value by a mātrā; ஒருபொருள் தந்துநிற்கும் ஒருசொல் ஒரு மாத்திரை குறையுடமித்து வேறொரு பொருள் தந்துநிற்குஞ் சொல்லணி. (தண்டி. 95, உரை.) |
மாத்திரைவருத்தனம் | māttirai-varuttaṉam n. <>id.+. (Rhet.) A literacy device in which a word becomes a different word by lengthening its sound-value by a mātrā; ஒரு பொருள் தந்துநிற்கும் ஒருசொல் ஒரு மாத்திரை கூடுமிடத்து வேறொரு பொருள் தந்துநிற்குஞ் சொல்லணி. (தண்டி. 95, உரை.) |
மாத்து 1 | māttu n. <>māda. Arrogance; செருக்கு. மாமாத்தாகிய மாலயன் (தேவா. 1019, 1). |
மாத்து 2 | māttu n. perh. mahat. Greatness; பெருமை. பெறுமாத்தொடும் (திருக்கோ. 373). |
மாத்து 3 | māttu n. <>Arab. māt. Mate with pawns; சதுரங்க ஆட்டத்தில் அரசனை யசைய வொண்ணாது பேதா தடுத்து நிற்கை. Loc. |
மாத்துமிகன் | māttumikaṉ n. <>mādhyamika. See மாத்யமிகன். அறிவு மிலையாகு மென்னு மாத்துமிகா (தத்துவப். 162). . |
மாத்துரவாணா | māttu-ravāṇā n. perh. மாற்று+. A pass for duty-paid goods; சுங்கஞ் செலுத்தியபின்பு சரக்குக்களை எடுத்துப்போக அளிக்கும் உத்தரவுச்சீட்டு. Loc. |
மாத்துவம் 1 | māttuvam n. <> mahat-tva Greatness; பெருமை. மாத்துவத் தான்மறைந்தார் மற்று (சிலப். 21, இறுதிவெண்பா). |
மாத்துவம் 2 | māttuvam n. <>mādhva. Dualist or Dvaita school of Madhva. See துவைதம்1. . |
மாத்துவர் | māttuvar n. <>mādhva. Followers of Madhva's Dvaita philosophy; மத்துவர் மதத்தினரான துவைதிகள். |
மாத்துவிகம் | māttuvikam n. <>madhvīka. Arrack extracted from mahua flowers; இலுப்பைப்பூ சாராயம். (சங். அக.) |
மாத்பர் | mātpar n. <>U. motubarī. Testing the adequacy of a security; ஜாமீன் சொத்தின் பெறுமானச் சோதனை. (C. G.) |
மாத்யமிகன் | mātyamikaṉ n. <> mādhyamika. A person belonging to the Buddhist sect of mādhyamika; பௌத்தசமயத்தினருள் ஒரு வகையான். (சி. சி. பர. மாத்ய. 1). |
மாதங்கம் 1 | mātaṅkam n. <> mātaṅga. 1. Elephant; யானை. (சூடா.) வாம்பரித்தேர் மாதங்கத்தானை (அஷ்டப். திருவரங்கத்தந். 11). 2. cf. kujarāšana. Pipal tree. See அரசமரம். (யாழ். அக.) |
மாதங்கம் 2 | mātaṅkam n. 1. Youth; இளமை. (அக. நி.) 2. Shape, figure; 3. Sea; கடல் (அக. நி.) 4. A head ornament. See உத்தி 1, 2 (யாழ். அச.) |
மாதங்கன் | mātaṅkaṉ n. <>mātaṅga. (யாழ்.அக.) 1. Person of mixed caste, the mother being of the Kṣattiriya caste and the father of the hunter tribe; க்ஷத்திரியப்பெண்ணுக்கும் வேடனுக்கும் பிறந்தோன். 2. Outcaste; 3. Base, mean man; 4. Hunter, fowler; |
மாதங்காரி | mātaṅkāri n. <>mātaṅgāri Siva, as the destroyer of elephant; [யானையை அழித்தோன்] சிவபிரான். |
மாதங்கி | mātaṅki n. <>mātaṅgī. 1. Kāḷī; காளி. (சூடா.) 2. Pārvatī; 3. The Goddess of yāḻ; 4. Singing denseuse. See. மதங்கி, 4.கதிர்வேல் பாடு மாதங்கி (காரிகை, செய். 9, உரை). |
மாதச்சுரம் | māta-c-curam n. <>மாதம்+. Intermittent lever, with monthly intervals; ஒருமாதகாலம் இடைவிட்டு வரும் ஜ்வரம். (ஜீவரட்.) |
மாதசங்கிரமணம் | māta-caṅkiramanam n. <>id.+. See மாதப்பிறப்பு, 2. (W.) . |