Word |
English & Tamil Meaning |
---|---|
மாதவி 2 | mātavi n. <>Mādhavī. 1. Subhadrā, sister of Krṣṇa; கிருஷ்ணன் தங்கையான சுபத்திரை. மாதவிதான் பெற்ற மதகயம் (பாரதவெண். 782) 2. Krṣṇa's wife; 3. Sacred basil. See துளசி. (சங். அக.) 4. Durgā; 5. Kōvalaṉ's mistress; |
மாதவிகொழுநன் | mātavi-koḻunaṉ n. <>மாதவி2+. Arjuna; அருச்சுனன். (பிங்.) |
மாதவிசேஷம் | māta-vicēṣam n. <>மாதம்+. Monthly festival, dist. fr. āṭṭai-vicēṣam; மாதந்தோறும் நடக்கும் விழா. |
மாதவிடாய் | māta-viṭay n. <>id.+. Menses; மகளிர் மாதப்பூப்பு. மானேர் விழியணங்கு மாதவிடா யானக்கால் (விறலிவிடு. 836). |
மாதவிடை | māta-viṭai n. See மாதவிடாய். (யாழ். அக.) . |
மாதவிப்பந்தல் | mātavi-p-pantal n. <>மாதவி1+. Arbour formed by mātavi creepers; குருக்கத்திக் கொடிகளாலான பந்தர். மாதவிப்பந்தல்மேல் பல்காற் குயிலினங்கள் கூவின காண் (திவ். திருப்பா.18). |
மாதளை | mātaḷai n. 1. See மாதுளை, 1. (நாமதீப. 314.) . 2. See மாதுளை, 2. (L.) |
மாதளைச்சிலை | mātaḷai-c-cilai n. perh. மாந்தளிர்+. See மாந்தளிர்க்கல். (யாழ். அக.) . |
மாதறி | mātaṟi n. <>மா4 + தறி. Large timber; beam; விட்டம் உத்திரம் முதலியவற்றிற்கு உதவும் பெரிய மரத்துண்டு. (W.) |
மாதனம் | mātaṉam n. Clove; கிராம்பு. (யாழ். அக.) |
மாதா | matā n. <>mātā nom. sing. of mātr. 1. Mother; தாய் (பிங்.) மாதாபிதாவாகி (தேவா. 1227, 7). 2. Pārvati; 3. Sarasvati; 4. The knower; |
மாதாகம் | mātākam n. prob. mahā-dāha. A hell one of eight mā-narakam, q.v.; மாதரகத்துள் ஒன்று. (சி. போ. பா. 2, 3, பக். 203). |
மாதாந்தம் 1 | mātāntam n. <>māsa + anta. See மாதாந்தம2¢ 1,3. மாதாந்தச் சுக்கிரவாரம் (யாழ். அக.) . |
மாதாந்தம் 2 | mātāntam n. <>māsāntara. Pilgrimage to a temple for worship once in every month; மாதந்தோறுங் கோயிற்குச் சென்று வழிபடுகை. மாதாந்தம் போய் வந்தார்கள். Loc. |
மாதாந்தரம் 1 | mātāntaram adv. <>id. Month by month; மாதந்தோறும். Colloq. |
மாதாந்தரம் 2 | mātāntaram n. See மாதாந்தம்1. Loc. . |
மாதாமகன் | mātāmakaṉ n. <>mātāmaha. Maternal grandfather, mother's father; தாயைப் பெற்ற பாட்டன். மாதாமகராப் பேசு மூவர் (சேதுபு. துரா. 55). |
மாதாமகி | mātāmaki n. <>mātāmahī. Maternal grand-mother, mother's mother; தாயைப்பெற்ற பாட்டி. |
மாதானுபங்கி | mātāṉupaṅki n. prob. māda + anubhaṅgin. Tiruvaḷḷuvar; திருவள்ளுவர். மாதானுபங்கி மறுவில் புலச்செந்நாப்போதார் (வள்ளுவமா. 21). |
மாதி 1 | māti n. cf. mātha. 1. Circular motion; வட்டமாயோடல். (சூடா.) மாதி வட்ட மோடினார் (கம்பரா. பிரமாத்திர. 135). 2. (Astron.) Revolution of a planet; |
மாதி 2 | māti n. cf. மாந்தி1. Mango; மாமரம். மாதி மணங்கமழும் பொழில் (திருவிசை. சேந்த. 2, 2). |
மாதிகம் | mātikam n. <>mātha. Race-course; குதிரைமார்க்கம். (சூடா.) |
மாதிசை 1 | mā-ticai n. <>மா4 + திசை2. The four cardinal points of the compass; நான்கு திக்குகள். |
மாதிசை 2 | mā-ticai n. <>மா4 + திசை3. Period of influence of a planet; See மகாதசை. . |
மாதிபோதி | mātipōti n. A species of cowthorn; நெருஞ்சிவகை. (மலை.) |
மாதிமை | mātimai n. <>மாது1+. 1. Fitness, propriety, appropriateness; தகுதி. பிச்சைகொண்டுண்பது மாதிமையோ (தேவா. 672, 7). 2. Love; |
மாதிரம் 1 | mātiram n. 1. cf. mahā-diša. 1. Point of the compass; திக்கு. மாதிரத் தீண்டிய விருளு முண்டோ (புறநா. 90). 2. Elephant; 3. Mountain; |
மாதிரம் 2 | mātiram n. cf. mātarišvan. Atmosphere; air; ஆகாயம். வலமாதிரத்தான் வளி கொட்ப (மதுரைக். 5). |