Word |
English & Tamil Meaning |
---|---|
மாதொருபாகனார் | mātoru-pākaṉār n. <>மாது1+. šiva; சிவன். மாதொருபாகனார் தாம் வருவர் (சி. சி. 2, 25). |
மாதோபவாசம் | mātōpavācam n. <>māsōpavāsa. Fasting for a month; ஒரு மாத காலம் பட்டினியிருக்கை. (திருமுரு.131, உரை.) |
மாதோயம் | mā-tōyam n. <>mahā-tōya. Sea, as the great water; [பெருநீர்] கடல். மாதோ யந்தன்னை வயிறலைத்து (கந்தபு. தேவரையே.17). |
மாந்தக்கட்டி | mānta-k-kaṭṭi n. <>மாந்தம்+. A kind of tumour, in children; குழந்தைகளுக்கு வரும் கட்டிவகை. (சாரங்க. 236.) |
மாந்தக்கொதி | mānta-k-koti n. <>id.+. Fever from indigestion, chiefly in children; குழந்தைநோய்வகை. (யாழ். அக.) |
மாந்தகணம் | mānta-kaṇam n. <>id.+. A wasting disease, in children, Tabes mesenterica; குழந்தைகளுக்குவரும் கணைநோய்வகை. (பைஷஜ.) |
மாந்தசன்னி | mānta-caṉṉi n. <>id.+. Infantile convulsions with delirium, due to indigestion; மாந்தத்தால் குழந்தைகளுக்கு வரும் சன்னி. (யாழ். அக.) |
மாந்தசுரம் | mānta-curam n. <>id.+. See மாந்தக்கொதி. (W.) . |
மாந்தப்புல் | mānta-p-pul n. <>id.+. Citronella grass. See காவட்டம்புல். (பதார்த்த. 375.) . |
மாந்தம் | māntam n. <>mānda. 1. Infantile diarrhoea; குழந்தைநோய்வகை. 2. Infantile convulsion, due to indigestion; 3. See மாந்தப்புல். (சங். அக.) 4. Indigestion; |
மாந்தர் | māntar n. 1. Human beings; மக்கள். மாந்தர் மக்க ளென்னும் பெயரும் (தொல். சொல். 163). 2. Male persons; 3. Watchmen; |
மாந்தரஞ்சேரலிரும்பொறை | mānta-ra-cēral-irumporai n. <>மாந்தரன்+. A Chēra king; ஒரு சேர அரசன். (புறநா. 53, 125.) |
மாந்தரன் | māntaraṉ n. perh. māna + dhara. An ancient Chēra king; ஒரு பழைய சேரவரசன். (பதிற்றுப். 90.) |
மாந்தலை | māntalai n. <>மா2. A jelly like preparation of dried mango-juice; பாயச முதலியவற்றில் சுவைபெருக இடுவதற்காகக் காயவைத்த மாம்பழச் சாறு. Nā. |
மாந்தவிரைப்பு | mānta-v-iraippu n. <>மாந்தம்+. Infantile laryngitis, child-crowing, Laryngismus stridulus; குழந்தைகளுக்கு வரும் இரைப்புநோய். (இங். வை.) |
மாந்தவிழுப்பு | mānta-v-iḻuppu n. <>id.+. See மாந்தசன்னி. (M. L.) . |
மாந்தளிர் | mā-n-taḷir n. <>மா+2. Tender leaf of mango, one of ten tuvar, q.v.; துவர் பத்தனுள் ஒன்றாகிய மாமரத்துளிர். (யாழ். அக.) |
மாந்தளிர்க்கல் | māntaḷir-k-kal n. prob. மாந்தளிர்+. A kind of precious stone; ஒருவகை இரத்தினம். Loc. |
மாந்தளிர்ச்சிலை | māntaḷir-c-cilai n. <>id.+. Red ochre; காவிக்கல். (யாழ். அக.) |
மாந்தளிர்நாணான் | māntaḷir-nāṇāṉ n. <>id.+ நாண். God of Love; மன்மதன். (நாமதீப. 59.) |
மாந்தளிர்ப்பச்சை | māntaḷir-p-paccai n. <>id.+. Agate; சிலமான்கல். (சங். அக.) |
மாந்தன் 1 | māntaṉ n. perh. மாந்து-. Green banana; See நமரைவாழை. (L.) . |
மாந்தன் 2 | māntaṉ n. Sing. of மாந்தர். cf. mantu. Male person; ஆண்மகன். அறைக்கண் மாந்தனுக் கதிதியந் தொழிலினி லமைந்தார் (சூளா. தூது. 40). |
மாந்தா | mānta. n. See மாந்தாதா. மாந்தா முதன் மன்னவர் (கம்பரா. அயோமுகி. 73). . |
மாந்தாதா | māntātā n. <>Māndhātā. A famous king of the Solar race; சூரியவமிசத்திற் புகழ்பெற்ற ஓர் அரசன். மாந்தாதா வென்பான் வழி பட்டான் (காஞ்சிப்பு. அந்தர்வே. 46). |
மாந்தாளிப்பச்சை | māntāḷi-p-paccai n. <>T. mādāli+. A variety of green stone; பச்சைக்கல்வகை. Loc. |
மாந்தி 1 | mānti n. 1. cf. mākanda. 1. Mango. See மாமரம். (சூடா.) . 2. A marriage ceremony; |
மாந்தி 2 | mānti n. <>māndi. An invisible planet; See குளிகன்2. (அக. நி.) . |
மாந்தியம் | māntiyam n. <>māndya. Becoming dull; மந்தமாயிருக்கை. (யாழ். அக.) |
மாந்திரம் | māntiram n. prob. mantra. (šaiva.) A section of šaivāgamas; சைவாகமத்தினுள் ஒரு பகுதி. மாந்திரம் என நூல்களை ஐவகைப் படுத்தி. |