Word |
English & Tamil Meaning |
---|---|
மாப்பிள்ளைக்கடா | māppiḷḷai-k-kaṭā n. <>மாப்பிள்ளை+. Covering bull; பொலியெருது. Colloq. |
மாப்பிள்ளைச்சம்பா | māppiḷḷai-c-campā n. <>id.+. A superior kind of paddy; உயர்ந்த சம்பாநெல்வகை. Loc. |
மாப்பிள்ளைமுறுக்கு | māppiḷḷai-muṟukku n. <>id.+. Stiffness of manners, as of a bridegroom; மணமகனிடத்துக் காணப்படுவது போன்ற பிகுவான நடத்தை. Colloq. |
மாப்பிள்ளையாணி | māppiḷḷai-y-āṇi n. <>id.+. A nail joining the plough-share to the plough; கலப்பைக் குற்றியோடு மேழியைச் சேர்க்கும் ஆணி. |
மாப்பிள்ளைவீரன் | māppiḷḷai-vīraṉ n. <>id.+. A village demon; ஒரு கிராமதேவதை. Loc. |
மாப்பு 1 | māppu n. (யாழ். அக.) 1. Abundance; மிகுதி. 2. Shoal of fish; |
மாப்பு 2 | māppu n. See மாபி. Colloq. . |
மாப்புசாட்சி | māppu-cāṭci n. <>மாப்பு2+. See மாபிசாட்சி. (C. G.) . |
மாப்புரவாணா | māppu-ravāṇā n. <>id.+. A pass for goods to pass duty free; சரக்குகளைச் சுங்கத்தினின்றும் வரியின்றிக் கொண்டு செல்லக் கொடுக்கும் உத்திரவுச்சீட்டு. (W. G.) |
மாப்புவலை | māppu-valai n. <>மாப்பு1+. Net for catching fish in shoals; மீன்திரளைப் பிடிக்கும் வலை. Loc. |
மாப்புவிடு - தல் | māppu-viṭu- v. tr. <>மாப்பு2+. To excuse, pardon; மன்னித்தல். Loc. |
மாபத்தியன் | mā-pattiyaṉ n. <>mā + apatya. See மாமகன்1. (யாழ். அக.) . |
மாபதுமம் | mā-patumam n. <>mahā + padma. A hell, one of eight narakam, q.v.; எண்வகை நரகத்தொன்று. (சி. போ. பா. பக். 203.) |
மாபதுமன் | mā-putumaṉ n. A divine serpent. See மகாபதுமன். (சூடா.) |
மாபலன் | mā-palaṉ n. <>mahā + bala. Air, wind; காற்று. (பிங்.) |
மாபலி | mā-pali n. <>mahā-bali. An Asura; See பலிசக்கரவர்த்தி. (W.) . |
மாபலிவாணன் | māpali-vāṇaṉ n. <>மாபலி+. An asura. See பலிசக்கரவர்த்தி. (W.) . |
மாபனம் | māpaṉam n. <>māpana; (யாழ். அக.) 1. Measure; அளவு. 2. Balance; |
மாபாடியம் | mā-pāṭiyam n. <>mahābhāṣya. 1. Elaborate commentary; பேரூரை. சிவஞானபோத மாபாடியம். 2. Patajali's commentary on the Sūtras of Pāṇini; |
மாபாதகம் | mā-pātakam n. The five great sins; See மகாபாதகம். மாபாதகத்தைத் தவிர்த்தா னன்றே (கடம்ப. பு. இல¦லா. 34). . |
மாபாரதம் | mā-pāratam n. <>Mahābhārata. 1. The great Sanskrit epic. See மகாபாரதம், 1. . 2. The great war between the Pāṇdavas and the Kauravas; |
மாபாவி | mā-pāvi n. <>மா4+. Great sinner; பெரும்பாவி. (திவ். திருவாய். 5, 1, 7.) |
மாபி | māpi n. <>Arab. muāf. Excuse, pardon; மன்னிப்பு. (C. G.) |
மாபிசாட்சி | māpi-cāṭci n. <>மாபி+. Approver, king's evidence; உடந்தைக்குற்றவாளியாய் மன்னிப்புக்குரிய சாட்சியாள். (C. G.) |
மாபிவாக்குத்தானம் | māpi-vākku-t-tāṉam n. <>id.+. Tender of pardon to an accomplice; உடந்தைக்குற்றவாளியை மன்னிப்பதாகக் கூறும் வாக்குறுதி. (C. G.) |
மாபுராணம் | māpurāṇam n. A grammar of the middle Sangam; இடைச்சங்கத்து வழங்கிய இலக்கணநூல். (இறை. 1, பக். 5.) |
மாபுலி | mā-puli n. prob. மா4+. Lion; சிங்கம். (யாழ். அக.) |
மாபுறயாகம் | mā-puṟa-yākam n. <>id.+ புறம்1+ External worship; வெளிப்பூசை. (யாழ். அக.) |
மாபூதி | mā-puti n. <>id.+ பூதி1. A hell; See பூதி, 4. (சூடா.) . |
மாபெலி 1 | mā-peli n. See மாபலி. (அரு. நி.) . |
மாபெலி 2 | mā-peli n. prob. mahā-balin. A fabulous animal. See யாளி. (அரு. நி.) . |
மாபெலை | māpelai n. <>Mahā-balā. Pārvatī; பார்வதி. (கூர்மபு. திருக்கலியாண. 22.) |
மாம்பழக்கட்டு | māmpaḻa-k-kaṭṭu n. <>மாம்பழம்+. A mode of wearing saree; புடைவை உடுக்கும் வகையிலொன்று. Brāh. |
மாம்பழக்கெளிறு | māmpaḻa-k-keḷiṟu n. prob. id.+. A kind of fish; மீன்வகை. சாலு மாம்பழக்கெளிறு (பறாளை. பள்ளு.16). |