Word |
English & Tamil Meaning |
---|---|
மாந்திரி | māntiri n. <>māntrī. See மாந்திரி தீட்சை. (சைவச. ஆசாரிய. 27.) . |
மாந்திரிகம் | māntirikam n. See மாந்திரீகம். Colloq. . |
மாந்திரிகன் | māntirikaṉ n. See மாந்திரீகன். (சி. போ. பா. 9, 2, பக். 390.) . |
மாந்திரிதீட்சை | māntiri-tīṭcai n. <>mantrī+. (šaiva.) A way of initiation; See கிரியாவதி. (சைவச. ஆசாரிய. 27, உரை.) . |
மாந்திரியம் | māntiriyam n. <>māntrika. 1. See மாந்திரீகம். Colloq. . 2. A parasitic leafless plant. See கொற்றான். (சங். அக.) |
மாந்திரியன் | māntiriyaṉ n. <>மாந்திரியம். See மாந்திரீகன். (யாழ். அக.) . |
மாந்திரீகம் | māntirīkam n. <>māntrika. Art of exercising supernatural powers by means of mantras; மந்திர பலத்தால் விசேஷ சக்தியைச் செலுத்தும் வித்தை. |
மாந்திரீகன் | māntirīkaṉ n. <>māntrika. One who exercises supernatural powers by means of mantras; மந்திர பலத்தால் விசேஷ சக்தியைச் செலுத்துபவன். Colloq. |
மாந்திரை | māntirai n. See மாந்தலை. Loc. . |
மாந்து - தல் | māntu- 5 v. tr. 1. To eat, feed; உண்ணுதல். மடமந்தி . . . வாழைத் தீங்கனி மாந்தும் (தேவா. 909, 5). 2. To drink; 3. To experience, as pleasure and pain; to enjoy; 1. To be distressed; 2. To be ruined; to perish, die; 3. To be extinct; 4. To become dispirited; |
மாந்தை | māntai n. 1. A disease; நோய்வகை. (யாழ். அக.) 2. An ancient town of the Cēra kingdom; |
மாநடன் | mānaṭaṉ n. <>mahā-maṭa. šiva; சிவபிரான். (சங். அக.) |
மாநரகம் | mā-narakam n. <>மா4+. Great hell, of eight kinds, viz., cūcimukam, kālakaṭkam, kuratāram, ampariṭam, tattāṅkāram, mātākam, cantāpam, pīpaṟcam; சூசிமுகம், கால கட்கம், குரதாரம், அம்பரிடம், தத்தாங்காரம், மாதாகம், சந்தாபம், பீபற்சம் என்று எண்வகைப்பட்ட நரகவிசேடம். (சி. போ. பா. 2, 3, பக். 203.) |
மாநாகம் | mā-nākam n. <>id.+. A kind of snake; பாம்புவகை. (நாமதீப. 261.) |
மாநிருத்தம் | mā-niruttam n. <>mahā-nrtta. See மாநிருத்தாதனம். மாநிருத்தங் குஞ்சிதம் வராகம் (தத்துவப். 108). . |
மாநிருத்தாதனம் | mā-niruttātaṉam n. <>மாநிருத்தம்+. (Yōga.) A posture in which one leg is held up; ஒருகால் தூக்கிநிற்கும் யோக நிலை. (தத்துவப்.108, உரை.) |
மாநிலம் | mā-nilam n. <>மா4+. Earth; பூமி. மாநிலஞ் சேவடியாக (நற். கடவுள்வாழ்த்து). |
மாநிறம் | māniṟam n. <>மா2+. Brown colour, tan colour; பொதுநிறம். (C. G.) |
மாநோன்பு | mā-nōṉpu n. <>மா4+. 1. The feast on the mahālaya-amāvacai day; மஹாலய அமாவாசையன்று கொண்டாடும் பண்டிகை. Loc. 2. The festival of nava-rāttiri. See மகாநோன்பு. Colloq. |
மாப்பலகை | mā-p-palakai n. <>மா6+. Pot-stone, pumice stone; மாக்கல். (யாழ். அக.) |
மாப்பிடி | mā-p-piṭi n. <>id.+. Cake made of flour; மாவினாற் பிடிக்கப்பட்ட பணியாரம். (யாழ். அக.) |
மாப்பிலாச்சை | mā-p-pilāccai n. <>மா4+. Sea-fish, bluish, attaining 4 ft. in length, cybium commersonii; நீலநிறமுடையதும் நான்கு அடி வளர்வதுமான கடல்மீன்வகை. |
மாப்பிள்ளை 1 | mā-p-piḷḷai n. prob. id.+. 1. Bridegroom; husband; மணவாளப்பிள்ளை. உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவானம்மே (குற்றா. குற. 63). 2. Daughter's husband; 3. Brother-in-law; 4. Maternal uncle's son; 5. Paternal aunt's son; 6. Younger sister's husband; 7. [M. māpillā.] Honorary title given to colonists in the West Coast, as Syrian Christians or Arabs; 8. Moplah, a class of Muhammadans on the West Coast, mostly descended from Arab fathers and Indian mothers; |
மாப்பிள்ளை 2 | mā-p-piḷḷai n. <>மா6+. A small figure of rice-flour, used in magic rites; மந்திரவாதக் கிரியைகளில் மாவினாற் செய்துவைக்கும் உருவம். மாப்பிள்ளை மஞ்சட்பிள்ளை. Loc. |