Word |
English & Tamil Meaning |
---|---|
மாம்பழக்கொடுக்கு | māmpaḻa-k-koṭukku n. <>id.+. See மாம்பழக்கட்டு. Loc. . |
மாம்பழக்கொன்றை | māmpaḻa-k-koṉṟai n. prob. id.+. Siamese tree. See மஞ்சட் கொன்றை. Loc. . |
மாம்பழச்சிட்டு | māmpaḻa-c-ciṭṭu n. prob. id.+. A kind of little bird; ஒருவகைச் சிறு பறவை. (W.) |
மாம்பழம் | mā-m-paḻam n. <>மா2+. 1. Mango fruit; மாங்கனி. 2. A kind of knot made when wearing a saree; |
மாம்பழவுண்ணி | māmpaḻa-v-uṇṇi n. prob. மாம்பழம்+. A species of big cattle-tick; பெரிய உண்ணிவகை. மாம்பழத்தின் கந்தமும் அறியாதவற்றை மாம்பழவுண்ணி யென்று சொல்லுமா போலெ (ஈடு, 9, 9, 6). |
மாம்பால் | mā-m-pāl n. <>மா2+. 1. Milky exudence in the stalk of unripe mangoes; மாங்காய்க்காம்பிலுண்டாம் பால். 2. A jelly of mangoes, with sugar, rice-flour, etc.; |
மாம்பிஞ்சு | mā-m-picu n. <>id.+. 1. See மாவடு. . 2. A pendant in a necklace, shaped like the tender mango fruit; |
மாம்பிரம் | māmpiram n. Beetle-killer. See சிறுதேக்கு, 2. (சங். அக.) . |
மாம்புளி | mā-m-puḷi n. <>மா2+. Indian hog plum; See புளிமா, 4. (L.) . |
மாம்புளிச்சி | mā-m-puḷicci n. See மாம்புளி. (L.) . |
மாம்பூச்சி | mā-m-pūcci n. A small white insect infesting sugar, etc.; சீனி முதலியவற்றில் விழும் வெண்ணிறமுள்ள சிறுபூச்சிவகை. Loc. |
மாம்போழ் | mā-m-pōḻ n. <>மா2+. Section of a tender mango, cut lengthwise; மாவடுவின் பிளவு. மாம்போழு மெழுதிற்று (திருக்கோ. 79). |
மாம்ஸம் | māmsam n. See மாமிசம். . |
மாமகம் | mā-makam n. <>mahā-magha. A great luni-solar festival; See மகாமகம். கங்கை மாமகந்தோறும் வந்து (திருவிளை. அருச்சனை. 25). . |
மாமகன் 1 | mā-makaṉ n. <>மா3+. God of Love, as son of Lakṣmī; [திருமகளின் மகன்] மன்மதன். (யாழ். அக.) |
மாமகன் 2 | māmakaṉ n. <>māmaka. (யாழ். அக.) 1. Maternal uncle; அம்மான். 2. Miser; |
மாமடி | māmaṭi n. cf. மாமடிகள். 1. See மாமன், 1. மாமடி ஸ்ரீவல்லப தேவர் (T. A. S. i, 257). . 2. See மாமனார். மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்வி (தேவா. 324, 7). |
மாமடிகள் | māmaṭikaḷ n. prob. மாமன் + அடிகள். See மாமடி. மற்றை மாமடிக ளிடுசாபமும் (குமர. பிர. மீனாட். பிள். 67). . |
மாமணி | mā-maṇi n. perh. மா4+. Ruby; மாணிக்கம். (சூடா.) |
மாமரம் | mā-maram n. <>மா2+. Mango, 1. tr., mangifera indica; மரவகை. (பிங்.) |
மாமருத்துநூலோர் | mā-maruttu-nūlōr n. <>மா4+ மருந்து+. Physicians; வைத்தியர் (யாழ். அக.) |
மாமல்லபுரம் | mā-malla-puram n. <>Mahā-malla-pura. The seven Pagodas, on the sea-coast, 32 miles south of Madras, famous for Pallava sculptures; சென்னையிலிருந்து தெற்கே 32 மைல் தூரத்தில் கடற்கரையிலுள்ளதும் பல்லவ சிற்பங்களால் பேர்பெற்றதுமான மாவலிபுரம் என்ற ஊர். (Insc.) |
மாமல்லை | mā-mallai n. See மாமல்லபுரம். மாமல்லை கோவல் (திவ். இயற். 2, 70). . |
மாமலத்து | māmalattu n. See மாமிலத்து. (W.) . |
மாமலர் | mā-malar n. <>மா4+. Indian laburnam. See சரக்கொன்றை. மாமலர்த் தெரியலான் (சீவக. 2038). . |
மாமன் | māmaṉ n. cf. māmaka. [T. māma M. māman. ] 1. Mother's brother, maternal uncle; தாயின் உடன்பிறந்தோன். மாமனு மருகனும் போலு மன்பின (சீவக. 43). 2. See மாமனார். மாமனே லிமவான் (திருவிசை. கருவூ. பதி. 8, 5). 3. Father's sister's husband; 4. A term used by Pariah women in addressing their husbands; |
மாமனார் | māmaṉār n. <>மாமன். Father-in-law, wife's or husband's father; கணவன் அல்லது மனைவியின் தந்தை. (பிரபோத. 11, 93.) |
மாமா | māmā n. <>மாமன். [T. māma K. māva.] See மாமன், 1, 2, 3. . |
மாமாங்கம் | māmāṅkam n. Corr. of மகாமகம். . |
மாமாத்தியன் | māmāttiyaṉ n. See மாமாத்திரன். (நாமதீப. 177.) . |
மாமாத்திரன் | māmāttiraṉ n. prob. mahā-mātra. Physician; வைத்தியன். (பிங்) மலர்புகழ் மாமாத்திரர்தங் குலம்பெருக (பெரியபு. சிறுத்தொண்ட. 2). |