Word |
English & Tamil Meaning |
---|---|
மாயப்பெண் | māya-p-peṇ n. <>id.+. (W.) 1. Disguised woman; மாறுவேஷம் பூண்ட பெண். 2. Man in the garb of a woman; |
மாயப்பொடி | māya-p-poṭi n. <>id.+. Powder with magic properties; மாயத்தன்மை செய்யும் பொடி. (உபதேசகா. சிவபுண். 288.) |
மாயப்போர் | māya-p-pōr n. <>id.+. 1. Wonderful, miraculous warfare; அற்புதமான போர். மாயப்போர் வல்லானை (தேவா. 698, 3). 2. Treacherous warfare; |
மாயம் 1 | māyam n. <>māyā. 1. Illusion, false appearance; மாயை. வருந்திட மாயஞ்செய்து நிகும்பலை மருங்குபுக்கான் (கம்பரா. மாயாசீதை. 96). 2. Deception; 3. Hypocrisy; 4. Falseness, treachery; 5. Spiritual ignorance; 6. Dream; 7. Uncertainty, instability; 8. Wonder, astonishment; 9. Beauty; 10. wickedness; 11. Lasciviousness; 12. Blackness; |
மாயம் 2 | māyam n. prob. mā. 1. (அரு. நி.) Height; உயரம். 2. cf. ஆயம்2. Length; 3. Sum; |
மாயமந்திரம் | māya-mantiram n. <>மாயம்+. Mantra having magic powers; மாயம்பண்ணும் மந்திரம். உன்முகம் மாய மந்திரந் தான் கொலோ (திவ். நாய்ச். 2, 4). |
மாயமயக்கி | māya-mayakki n. <>id.+. Artful, bewitching woman; மயக்கஞ் செய்பவள். மாயமயக்கி மருமகளே. Nā. |
மாயமாலம் | māyamālam n. cf. மாலமாயம். 1. See மாய்மாலம். Loc. . 2. Deceitful devil; |
மாயரூபம் | māya-rūpam n. <>māyā+. Form which is seemingly realistic; phantom, shadow; மெய்போலத் தோன்றும் பொய்யுருவம். (யாழ். அக.) |
மாயவண்ணன் | māya-vaṇṇaṉ n. <>id.+. Viṣṇu, as dark-coloured; திருமால். மாயவண்ணனை மனனுறப் பெற்று (பதிற்றுப். 7, பதி.). |
மாயவள் | māyavaḷ n. <>மா5. 1. Woman of dark complexion; கரிய நிறமுடையவள். மாயவண் மேனிபோல் (கலித். 35). 2. Durgā; 3. Female goddess; 4. A female goblin. |
மாயவன் | māyavaṉ n. <>மா5. Viṣṇu; திருமால். மாயவன் மாய மதுவால் (பு. வெ. 9, 40). |
மாயவன்மேனி | māyavaṉ-mēṉi n. <>மாயவன்+. A green stone. See நாகப்பச்சை. (சங். அக.) |
மாயவன்விந்து | māyavaṉ-vintu n. prob. id.+. 1. A herb. See விஷ்ணுக்கிராந்தி. 2. Cucumber seed; |
மாயலிஞ்சை | māya-vicai n. <>மாயம்1+. See மாயவித்தை. மாயவிஞ்சை மந்திரமோதி (மணி. 18, 148). . |
மாயவித்தை | māya-vittai n. <>id.+. Magical art; sleight of hand; art of producing illusion; sorcery; இந்திரசாலவித்தை. |
மாயவித்தைக்காரன் | māya-vittai-k-kāraṉ n. <>id.+. Sorcerer, magician; இந்திரசாலஞ் செய்வோன். |
மாயவேடம் | māya-vēṭam n. <>id.+. Disguise; பொய்வேஷம். வெகுளி பொங்கவிட்டது மாயவேடம் (கம்பரா. சடாயுவுயிர். 64) . |
மாயன் | māyaṉ n. <>மா5. 1. Dark complexioned person; கரியன். வண்ணமு மாய னவ னிவன் சேயன் (தொல். பொ. 307, உரை). 2. Viṣṇu; 3. Deceitful person; |
மாயா | māyā n. <>māyā. See மாயை. . |
மாயாக்கஞ்சனம் | māyākkacaṉam n. See மாயிகாஞ்சனம். (பெருங். இலாவாண. 1, 67, பி-ம்.) . |
மாயாகாரியம் | māyā-kāriyam n. <>māyā+. 1. The effects of Māyā, its various changes and manifestations in nature; மாயையின் தோற்றமாகிய பிரபஞ்சம் முதலியன. தோன்றிக்கெடு மாயா காரியத்தை மெய்யென நீ கண்டனையே (அருட்பா, i, நெஞ்சறி. 527). 2. The body, accessory instruments, world and enjoyments, considered as the products of Māyā; |