Word |
English & Tamil Meaning |
---|---|
மாயால¦லை | māyā-līlai n. <>id.+. Miraoulous sports, as of Krṣṇa; மாயையாகச் செய்யும் விளையாட்டு. (W.), |
மாயாவல்லபம் | māyā-vallapam- n. <>id.+. (Advaita.) The power of Māyā, exhibited in the creation of the universe; பிரபஞ்ச சிருஷ்டியிற் காணும் மாயையின் சக்தி. (யாழ். அக.) |
மாயாவாதம் | māyā-vātam n. <>id.+. The doctrine that regards the material universe as an illusion, applied to the doctrines of the Advaita and Buddhism; பிரபஞ்சம் யாவும் மாயையே யென்று பௌத்தம் அத்துவைதமதங்களிற் கூறப்படுங் கொள்கை. மிண்டிய மாயாவாத மென்னுஞ் சண்டமாருதம் (திருவாச. 4, 54). மாயாவாதப் பேயா வுனக்குத் தேவரி லொருவ ருண்டாக (சங்கற்ப. மாயாவா. 2). |
மாயாவாதி | māyā-vāti n. <>māyā-vādin. Follower of māyā-vātam; மாயாவாதக் கொள்கை யுடையவன். சதசத் விலக்ஷணம் என்று . . . மாயாவாதி சொல்லுமா போலே (திவ். இயற். திருவிருத். 22, வ்யா. 145). |
மாயாவி | māyāvi n. <>māyāvin. 1. See மாயவித்தைக்காரன். அருவமாகு மாயாவி வித்தைகள் (கைவல். சந். 96). 2. One who assumes shapes at will by superhuman power; 3. Hypocrite, dissembler; |
மாயாவிகற்பஞானம் | māyā-vikaṟpaāṉam n. <>māyā+. (šaiva.) Illusory cognition in which a single thing appears in manifold forms; ஒரே பொருள் வெவ்வேறு வஸ்துக்களாகக் காண வரும் ஞானம். (சி. சி.11, 2, சிவாக்.) |
மாயாவித்தை | māyā-vittai n. <>id.+. See மாயவித்தை. (யாழ். அக.) . |
மாயாவிமோசனம் | māyā-vimōcaṉam n. <>id.+. Freedom from Māyā; மாயையினின்று நீங்குகை. (யாழ். அக.) |
மாயாவினோதம் | māyā-viṉōtam n. <>id.+. See மாயவித்தை. (W.) . |
மாயாவுரு | māyā-v-uru n. <>id.+. See மாயாதேகம். (சிவப்பிர. உண்மை, 9.) . |
மாயாள் | māyāḷ n. See மாயோள்1, 3. (நாமதீப. 117.) . |
மாயாளம் | māyāḷam n. prob. மாசாலம். Pretension; பாசாங்கு. Loc. |
மாயாளி | māyāḷi n. Kidney-leaved bracteate moon-seed; வட்டத்திருப்பி. (தைலவ. தைல. 33.) |
மாயி 1 | māyi n. <>māyin. Go-between, panderer; ஆண் பெண்களைக் களவிற் புணர்ப்பிக்கும் ஆண்மகன். (சுக்கிரநீதி, 369.) |
மாயி 2 | māyi n. <>māyī. Durgā; துர்க்கை. என்னன்னையா மாயியை (பிரபோத. 18, 73). |
மாயிகாஞ்சனம் | māyikācaṉam n. perh. māyika + ajana. A magic art of the Vidyādharas; வித்தியாதரருடைய விஞ்சைவகை. செவியிற்கேட்கு மாயிகாஞ்சனம் (பெருங். இலாவாண. 1, 67). |
மாயிடம் | māyiṭam n. <>mahiṣa. Buffalo; எருமை. வந்து மாயிடமாகி வளர்ந்ததே (யசோதர. 3, 45). |
மாயிரம் | māyiram n. cf. பாயிரம். That which is outside, outward; புறமாயுள்ளது. மாயிர நேமியாதி (தக்கயாகப். 440). |
மாயிலி | māyili n. A kind of boat; படகு வகை. (W.) |
மாயு | māyu n. <>māyu Bile; பித்தம். (யாழ். அக.) |
மாயுநாடி | māyu-nāṭi n. <>மாயு+. A pulse indicating bilious humour; See பித்தநாடி. (W.) |
மாயூரம் | māyūram n. <>mayūra. 1. Peacock; மயில். (திருவானைக்காவுலா. 233.) (W.) 2. Māyavaram, a šiva shrine in the Tanjore District; |
மாயேச்சுரன் | māyēccuraṉ n. <>Māhēšvara.. 1. Siva; சிவபிரான். |
மாயேசுரி | māyēcuri n. <>Māhēšvarī. 1. Pārvati; பார்வதி. 2. Māhēšvarī, one of cattamatar, q.v.; |
மாயேயம் | māyēyam n. <>māyēya. (šaiva.) The seven categories, kālam, niyati, kaḷai, vittai, irākam, puruṭaṉ and māyai, which are the effect of acutta-māyai, one of paca-malam, q.v.; பஞ்சமலத்துள் ஒன்றும் அசுத்த மாயையின் காரியமுமான காலம் நியதி கலை வித்தை இராகம் புருடன் மாயை என்னும் ஏழு தத்துவங்கள். மாயையின் காரியத்தை மாயேய மலமதென்று (சி. சி. 2, 87). |
மாயை | māyai n. <>māyā. 1. Primordial matter; மூலப்பிரகிருதி. பூதலயமாகின்ற மாயைமுதலென்பர் சிலர் (தாயு. பரிபூரணா. 6). 2. (šaiva.) Matter, one of mu-m-malam, q.v.; of three kinds, viz., vintu, mōkiṉi, māyēyam; 3. (šaiva.) Impure Māyā. 4. (Advaita.) Māyā, one of māyā-pacakam, q.v.; 5. Illusion, unreality; 6. Unreal or illusory image; phantom, apparition; 7. Sorcery, witchcraft, magic; 8. Deception, fraud, trick; 9. Extra ordinary or superhuman power; 10. Kāḷi; 11. Pārvati; 12. See மாயாதேவி. 13. See மாயாபுரி. 14. A hell; 15. A form of šiva's Energy. which hides spiritual truth from the souls. |