Word |
English & Tamil Meaning |
---|---|
மார்கழி | mārkaḻi n. <>mārgašīrṣa. The ninth solar month = December-January; சௌரமானமாதம் பன்னிரண்டனுள் ஒன்பதாவது. மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் (திவ். திருப்பா.1). |
மார்கழிநம்பியான் | mārkaḻi-nampiyāṉ n. <>மார்கழி+. Fat and plump person, as the priest of a Viṣṇu temple in Mārkaḻi month, when morning offerings of food are plentiful; உடல் பருத்துக் கொழுத்தவன். மாசிக்கடாவும் மார்கழி நம்பியானும். Loc. |
மார்கழிநீராடுதல் | mārkaḻi-nīr-āṭutal n. <>id.+. Daily bath in the month of Mārkaḻi, taken by girls before dawn in a sacred tank; மார்கழிமாதத்தில் சிறுபெண்கள் தினந்தோறும் அதிகாலையில் புஷ்கரிணிக்குச் சென்று நீராடுகை. (திருவாச. 7, 20.) |
மார்ச்சளி | mār-c-caḷi n. <>மார்1+. Bronchitis, catarrhal bronchitis; நெஞ்சுச்சளி பிடிக்கும் நோய்வகை. (M. L.) |
மார்ச்சனம் | mārccaṉam n. <>mārjana. 1. Cleaning, wiping; துடைப்பு. 2. (šaiva.) A kind of religious observance in which a person, in God's presence, sprinkles on his head the consecrated water falling out of his left hand; |
மார்ச்சனி | mārccaṉi n. <>mārjanī. 1. Broom; துடைப்பம். (சைவச. மாணா. 7, உரை.) 2. Assam rubber. |
மார்ச்சனை | mārccaṉai n. <>mārjanā. 1. Black paste smeared on the head of a drum to increase its resonance; இனிது ஒலிக்க முழவில் வாய்ப்பூச்சிடும் கரிய சாந்து. முழா மார்ச்சனை யிடுதலொழிய (புறநா. 65, உரை). 2. Leather strap of a drum; |
மார்ச்சாரகண்டம் | mārccāra-kaṇṭam n. <>mārjāra-kaṇṭha. See மார்ச்சாரகம். (சங். அக.) . |
மார்ச்சாரகம் | mārccārakam n. <>mārjāraka. Peafowl, peacock; மயில். (யாழ். அக.) |
மார்ச்சாரகிசோரநியாயம் | mārccārakicōra-niyāyam n. <>mārjāra-kišōra-nyāya. Nyāya of the cat and its young, illustrating the principle of the strong voluntarily taking care of the weak, as the cat her kitten; பூனை தன் குட்டியைக் கவ்விச் சென்று காத்தளித்தல்போல வலியது எளியதைத் தானாகவே முயன்று காத்தளிக்கும் நெறி. |
மார்ச்சாரம் | mārccāram n. <>mārjāra. See மார்ச்சாலம். (இலக். அக.) . |
மார்ச்சாரி | mārccāri n. <>mārjarī. Musk; கஸ்தூரி. (சங். அக.) |
மார்ச்சாலநியாயத்தீர்ப்பு | mārccālaniyāya-t-tīrppu n. <>மார்ச்சாலநியாயம்+. See மார்ச்சாலநியாயம், 1. (W.) . |
மார்ச்சாலநியாயம் | mārccāla-niyāyam n. <>mārjāla+. 1. Biassed judgment, as that of a cat; ஒருதலைச்சார்பான தீர்ப்பு. (W.) 2. See மார்ச்சாரகிசோரநியாயம். (சங். அக.) |
மார்ச்சாலம் | mārccālam n. <>mārjāla. 1. Cat; பூனை. (சூடா.) 2. Polecat, toddy-cat. |
மார்ச்சிரங்கு | mār-c-ciraṅku n. <>மார்1+. See மார்ச்சிலந்தி. (M. L.) . |
மார்ச்சிலந்தி | mār-c-cilanti n. <>id.+. Mammary abscess; முலைப்பக்கத்துண்டாம் புண். (M. L.) |
மார்த்தண்டன் | mārttaṇṭaṉ n. <>mārtaṇda. See மார்த்தாண்டன். (யாழ். அக.) . |
மார்த்தம் | mārttam n. <>smārta. Precepts or rules laid down in the Smrtis. See சுமார்த்தம். மார்த்தஞ் சேர்ந்த துறைகள் வைதிக மாம் (திருவிளை. வேதத். 41). |
மார்த்தவம் | mārttavam n. <>mārdava. Softness, smoothness; மிருதுத்தன்மை. |
மார்த்தாண்டம் | mārttāṇṭam n. <>mārtāṇda. 1. A chief Purāṇa. See பிரமவைவர்த்தபுராணம். (W.) 2. Madar. 3. Hog; |
மார்த்தாண்டன் | mārttāṇṭaṉ n. <>mārtāṇda. The sun; சூரியன். (பிங்.) மார்த்தாண்டர் பன்னிருவ ருலாவல் போலும் (திருப்போ. சந். ஊசல். 2). |
மார்த்தோல் | mār-t-tōl n. <>மார்1+. Toddy-drawer's breast-leather; மரமேறிகள் மார்பிலிடுந் தோல். Loc. |
மார்தட்டு - தல் | mār-taṭṭu- v. intr. <>id.+. 1. To challenge; to compete with; போட்டி போடுதல். அவர்களையும் ஆஸ்ரிதராக்குகிறேனென்று ஈஸ்வரனோடே மார்தட்டுகிறார் (திருவிருத். 96, வ்யா. பக். 455, அரும்.). 2. To boast of one's powers in a particular line, as by striking the chest; 3. To pride oneself; |